Published:Updated:

ஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார்? எப்படி? #DoubtOfCommonMan

எம்.ஆர்.பி
News
எம்.ஆர்.பி

எம்.ஆர்.பி என்பது, ஒரு பொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலை. அதாவது ஒரு பொருள் அது தயாரிக்கப்படுவதிலிருந்து, சந்தையில் நுகர்வோருக்கு வந்தடைவது வரையிலான மொத்த செலவையும் உள்ளடக்கிய கூட்டு விலை.

Published:Updated:

ஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார்? எப்படி? #DoubtOfCommonMan

எம்.ஆர்.பி என்பது, ஒரு பொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலை. அதாவது ஒரு பொருள் அது தயாரிக்கப்படுவதிலிருந்து, சந்தையில் நுகர்வோருக்கு வந்தடைவது வரையிலான மொத்த செலவையும் உள்ளடக்கிய கூட்டு விலை.

எம்.ஆர்.பி
News
எம்.ஆர்.பி
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``பொருள்களுக்கான MRP Rate-ஐ நிர்ணயிப்பது யார்..? அரசா, தயாரிக்கும் நிறுவனமா? எதன் அடிப்படையில் MRP நிர்ணயம் செய்யப்படுகிறது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் விகடன் வாசகர் கணேஷ். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
DoubtOfCommonMan
DoubtOfCommonMan

``என்னப்பா இது எம்.ஆர்.பி விலையைவிட அதிகமா பில் போட்டிருக்க” என்பது தொடங்கி ``அந்தக் கடையில எம்.ஆர்.பி-யை விட 10 சதவிகிதம் தள்ளுபடி பண்ணி விக்கிறாங்க” என்பது வரை பல உரையாடல்களை நாம் கேட்டிருப்போம்.

கடைகளில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் பொருள்களை வாங்க நினைக்கையில் அதன் காலாவதியாகும் தேதியைக் கவனிப்பதற்கு முன்பாக, எம்.ஆர்.பி விலையைத்தான் கவனிப்போம். எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலைதான் (Maximum Retail Price) இங்கு பெரும்பாலான பொருள்களின் விற்பனையை இறுதி செய்கிறது.

சாலையோரங்களில் உள்ள பெட்டிக்கடை முதல் அமேசான், ஃபிளிப்கார்ட் வரை ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா பொருள்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து அதன் நுகர்வோரிடம் சென்றடைகின்றன. அந்த அத்தனை பொருள்களுக்குமான எம்.ஆர்.பி விலையை நிர்ணயம் செய்வது யார். அரசா? பொருளின் தயாரிப்பு நிறுவனமா? எதன் அடிப்படையில் ஒரு பொருளின் எம்.ஆர்.பி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

Representational Image
Representational Image

எம்.ஆர்.பி என்பது, ஒரு பொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலை. அதாவது ஒரு பொருள் அது தயாரிக்கப்படுவதிலிருந்து, சந்தையில் நுகர்வோருக்கு வந்தடைவது வரையிலான மொத்த செலவையும் உள்ளடக்கிய கூட்டு விலை. இதில் அரசுக்குக் கட்டப்படும் மொத்த வரிகளும் அடங்கும். நாம் வாங்கும் பொருள்களில் உள்ள `Inclusive of all taxes' என்ற வாசகத்துக்கு இதுவே அர்த்தம். எனவே, ஒரு பொருளை அதன் அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக விற்பது சட்டப்படி குற்றம்.

எம்.ஆர்.பி விலை எந்தெந்த காரணிகளை உள்ளடக்கி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பொருளின் விலையானது அதன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அரசாங்கத்தால்தான் முடிவு செய்யப்படுகிறது. ஒரு பொருளானது நுகர்வோருக்குத் தொழிற்சாலையிலிருந்து நேரடியாகக் கிடைத்து விடுவதில்லை. இடைப்பட்ட முகவர்கள் பலரைக் கடந்துவரும் ஒரு பொருளின் விலையை அதன் தயாரிப்பு நிறுவனம் எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறது? பின்னர், அது அரசு விதிக்கும் வரியோடு சேர்ந்து அதன் அதிகபட்ச விலை எவ்வாறு நிர்ணயமாகிறது என்பதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக பார்க்கலாம்.

DoubtOfCommonman
DoubtOfCommonman

1. ஒரு பொருள் தயாராகும் இடம் தொழிற்சாலை. அங்கு ஒரு முழுமையான புராடெக்டை (Product) தயார் செய்வதற்கான மூலப் பொருள்களுக்கான செலவு, அதைப் பொருளாக உருவாக்கும் தொழிலாளிகளுக்கான கூலி, ஆகியவற்றுடன் அந்நிறுவனம் நிர்ணயிக்கும் லாப சதவிகிதம் கூட்டப்பட்டு அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது.

2. தொழிற்சாலையிலிருந்து தயார் செய்யப்படும் பொருள்கள் `Clearance And Forwarding' எனப்படும் மிகப்பெரிய அளவிலான முகவர்களை வந்தடையும். அங்கிருந்து தயாரிப்பு நிறுவனம் அவ்வகை முகவர்களுக்கு நிர்ணயிக்கும் குறிப்பிட்ட லாப சதவிகிதம் கூட்டப்பட்டு பகுதி வாரியாக விநியோகஸ்தர்களுக்கு (Agencies) சென்றடைகிறது.

3. அடுத்தகட்டமான அந்தப் பொருள்களை விநியோகிக்கும் நிறுவனம் நிர்ணயிக்கும் லாப சதவிகிதத்தோடு சில்லறை வியாபாரிகளிடம் விற்கிறார்கள். கடைசியாக ஒரு பொருள் நுகர்வோரின் கைக்கு இந்தக் கட்டத்தில்தான் சென்றடைகிறது. இங்கும் விநியோகஸ்தர்களிடமிருந்து பொருளை வாங்கிய வியாபாரிகள் தயாரிப்பு நிறுவனம் நிர்ணயிக்கும் அவர்களுக்கான லாப சதவிகிதத்தை சேர்த்துக்கொள்கிறார்கள்.

தொழிற்சாலை
தொழிற்சாலை
Commissionerate of Industries and Commerce
Doubt of common man
Doubt of common man

இவை மட்டும் ஒரு பொருளின் அதிகபட்ச சில்லறை விலையைத் தீர்மானிப்பதில்லை. மிக முக்கியமான ஒன்று இருக்கிறது, ஒரு பொருளை தயாரித்து அதைச் சந்தையில் விற்பதற்காக அரசிடம் கட்டப்படும் வரியே அது. முன்பு பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டு பின்னர் சந்தைக்கு வந்த பொருள்கள், தற்போது அவை அனைத்தும் GST (Goods Service Tax) என்ற பெயரில் ஒரு வரிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் பொருளை சந்தைப்படுத்துவதற்கான விளம்பரச் செலவுகள். இத்தனை நாள்கள் நாம் விளம்பரங்களில் பார்க்கும் நட்சத்திரங்களின் சம்பளமும் நாம் வாங்கும் பொருள்களின் எம்.ஆர்.பி விலையில் சேர்க்கப்படுகிறது. மேலும், இதர செலவுகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு முழுமையான எம்.ஆர்.பி விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதை இன்னும் சிம்பிளாக ஒரு ஃபார்முலா மூலம் கூறிவிடலாம்.

Maximum Retail Price = மூலப் பொருள்களின் செலவு + தயாரிப்பு செலவு + தயாரிப்பாளரின் லாப விகிதம் + Clearance மற்றும் Forwarding முகவர்களின் லாப விகிதம் + உள்ளூர் முகவர்களின் லாப விகிதம் + வியாபாரிகளின் லாப விகிதம் + GST + போக்குவரத்துச் செலவு + பொருளை விளம்பரப்படுத்தும் செலவு + இதர செலவு.

இதை ஒரு எடுத்துக்காட்டுடன் இன்னும் விரிவாக பார்ப்போம். ஒரு பொருளை தயார் செய்ய அதன் மூலப் பொருள்களின் விலை 20 ரூபாய் மற்றும் தயாரிப்புச் செலவு 5 ரூபாய் என வைத்துக்கொள்வோம். எனவே, மொத்தத் தயாரிப்பு செலவு 25 ரூபாய் ஆகிறது. அத்தயாரிப்பு நிறுவனம் 20 சதவிகிதமாக லாபத்தை வைத்து 5 ரூபாயைச் சேர்த்து Clearance and Forwarding முகவர்களுக்கு விற்கிறது. அடுத்தகட்டமாக அந்த முகவர்கள் தயாரிப்பாளர் நிர்ணயித்த 6% லாபத்தில் உள்ளூர் முகவர்களுக்கு இன்னும் 1.8 ரூபாய் அதிகமாக விற்பதாக வைத்துக்கொள்வோம்.

ஒரு வேலை franchise மூலம் ஒரு பொருள் நுகர்வோரை வந்தடைந்தால் அதற்கு ஒரு 20% அதாவது 6.3 ரூபாய் கூட்டப்படுவதாக வைத்துக்கொள்வோம். உள்ளூர் முகவர்கள் 10% சதவிகித லாபத்தோடு இன்னும் 3.8 ரூபாய் கூட்டி வியாபாரிகளிடம் கொடுக்க அவர்கள் நுகர்வோர்களிடம் 20% லாபம் வைத்து 8.3 ரூபாய் சேர்த்து கொடுக்க, இவைமட்டுமல்லாமல் அரசுக்கு வரியாக ஒரு 5 சதவிகிதம் (2.5 ரூபாய்), விளம்பரச் செலவுக்கு 10 சதவிகிதம் (10 ரூபாய்) மற்றும் இதர செலவுகள் 2 சதவிகிதம் (2 ரூபாய் ). ஆக மொத்தம் 64.8 ரூபாய்.

எம்.ஆர்.பி
எம்.ஆர்.பி

25 ரூபாய்க்குத் தொழிற்சாலையில் தயாராகும் ஒரு பொருள் சந்தைக்கு வந்தடையும் பொழுது சுமார் 65 ரூபாய் ஆவது ஒரு சிறிய மாதிரிதான். இதில் ஒவ்வொரு கட்டத்திலும் லாப சதவிகிதமும் வரியும் பொருள்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். இப்படித்தான் ஒரு பொருளின் எம்.ஆர்.பி விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!

DoubtOfCommonMan
DoubtOfCommonMan