Published:Updated:

How to: LIC IPO-க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? How to apply for LIC IPO?

எல்ஐசி
News
எல்ஐசி ( LIC )

எல்.ஐ.சி-ன் பங்குகள் இன்று முதல் (மே 4) தொடங்கி மே 9 வரை வெளியிடப்படுகின்றன. பங்குகள் ஒவ்வொன்றும் ரூபாய் 902 - 949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குகளின் விலையில் இருந்து எல்.ஐ.சி ஊழியர்களுக்கு 45 ரூபாயும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாயும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

How to: LIC IPO-க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? How to apply for LIC IPO?

எல்.ஐ.சி-ன் பங்குகள் இன்று முதல் (மே 4) தொடங்கி மே 9 வரை வெளியிடப்படுகின்றன. பங்குகள் ஒவ்வொன்றும் ரூபாய் 902 - 949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குகளின் விலையில் இருந்து எல்.ஐ.சி ஊழியர்களுக்கு 45 ரூபாயும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாயும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி
News
எல்ஐசி ( LIC )

இந்திய இன்ஷூரன்ஸ் துறையில் 40 ஆண்டுகளைக் கடந்து கோலோச்சி வரும் எல்.ஐ.சி நிறுவனத்தில் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்திய இன்ஷுரன்ஸ், பங்குச்சந்தை என தன்னுடைய இருப்பை நிலைநாட்டி வரும் எல்.ஐ.சி, தன்னுடைய 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்யவிருப்பதாகத் தெரிவித்திருந்தது. இது பங்குச்சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது 3.5 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்திய பங்குச் சந்தையில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி-ன் பங்குகள் இன்று முதல் (மே 4) தொடங்கி மே 9 வரை வெளியிடப்படுகிறது.

IPO
IPO

இப்படி வெளியிடப்படும் பங்குகள் ஒவ்வொன்றும் ரூபாய் 902 - 949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பங்குகளின் வெளியீடு மூலமாக கிட்டத்தட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய அளவில் மிகப்பெரிய ஐபிஓ (IPO - The Initial Public Offer) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய கால வர்த்தகத்துக்கு ஏற்ற பங்காக எல்.ஐ.சி ஐபிஓ இல்லை என்றாலும், நீண்டகால வர்த்தகத்துக்கு ஏற்ற பங்கு என்பதால் பங்குதாரர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். பலரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த எல்.ஐ.சி ஐபிஓ-ல் முதலீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்

* அடையாளச் சான்று
* வயதிற்கான சான்று
* வாங்கி கணக்கு விவரங்கள்

விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, டீமேட் கணக்கு ஒன்றை ஓபன் செய்திருக்க வேண்டும். டீமேட் கணக்குக் கிடைக்கும் ஆப்களிலோ, UPI சப்போர்ட் உள்ள பிளாட்பாரத்திலோ டீமேட் கணக்கை திறக்கலாம்.

ஸ்டெப் 1
முதலில் உங்கள் net banking account-ஐ login செய்து கொள்ளவும். அதில் IPO/e-IPO investment என்ற பகுதி இருக்கும். அதனை ஓபன் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 2
அதன் பின் திறக்கும் பக்கத்தில் உங்களுடைய பேங்க் அக்கவுன்ட் விவரங்கள் கேட்கப்படும்; கவனமாக நிரப்பவும்.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

ஸ்டெப் 3
தொடர்ந்து Invest in IPO என்ற பகுதியை தேர்வு செய்த பின், அதில் LIC-ஐ தேர்வு செய்து, எத்தனை பங்குகள் வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளவும். கூடவே, ஏல பணத்தை fix செய்யவும். தொடர்ந்து apply now என்ற தேர்வை க்ளிக் செய்து உங்களுடைய ஆர்டரை உறுதி செய்யவும்.

குறிப்பு:

1. முதலீட்டாளர்கள் IPO-க்கு விண்ணப்பித்தவுடன், அதற்கான தொகையை ஏலம் முடிவடையும் வரை முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பந்தப்பட்ட வங்கி பிளாக் செய்துவிடும். ஏலம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களின் அக்கவுன்ட்களில் இருந்து அந்தத் தொகை எடுத்துக்கொள்ளப்படும்.

2. நீங்கள் எல்.ஐ.சி பாலிசிதாரராக இருந்தால், முதலில் உங்கள் பாலிசி மற்றும் டிமேட் கணக்கு இரண்டையும் உங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) இணைக்க வேண்டும்.

3. பங்குகளின் விலையில் இருந்து எல்.ஐ.சி ஊழியர்களுக்கு 45 ரூபாயும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாயும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.