இன்றைக்கு எல்லாமே டிஜிட்டல்மயமாக மாறினாலும்கூட பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அவற்றில் ஒன்று, செக் பவுன்ஸ். இதைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் வங்கி அதிகாரியான கே.விக்னேஷ்.
`செக் பவுன்ஸ் ஆதல் (Cheque bounce) என்பதற்கு செக்கைத் திரும்பப் பெறுதல் என்று அர்த்தம். பொதுவாக, செக் ரிட்டர்ன் ஆயிடுச்சு என்று சொல்வார்கள். அதாவது, வங்கியினால ஏற்படுற பணப்பரிமாற்றங்கள் மூலமா ஒரு செக் நிராகரிக்கப் படறதுனாலோ, ஒரு சில காரணங்களால தோல்வியை சந்திக்கிறதுனாலோ காசோலை அதோட மதிப்பை இழக்குறதுக்கு செக் பவுன்ஸ், செக் ரிட்டர்ன்னு பேரு.

ஒரு செக் பவுன்ஸ் ஆகுறதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. அதுல பொதுவா அதிகமாக நடக்கக்கூடிய காரணம்னு பார்த்தா, போதுமான அளவு வங்கிக் கணக்கில பணம் இல்லாததுதான். இதை Insufficient balance என்று சொல்வாங்க. எடுத்துக்காட்டாக, ஒருவர் இன்னொருவருக்கு பணத்த காசோலை மூலமா கொடுக்கும்போது, பணம் வழங்குபவருடைய வங்கிக் கணக்குல அவரு காசோலையில் குறிப்பிட்டுள்ள போதுமான அளவு பணம் வங்கிக் கணக்கில கண்டிப்பாக இருக்கணும். அப்படி வழங்குபவருடைய வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணம் இல்லாத போது செக் பவுன்ஸ் ஆகும்.
ஆனா, இந்த ஒரு காரணத்துனால மட்டும்தான் செக் பவுன்ஸ் ஆகும்னும் சொல்ல முடியாது. வேற சில காரணங்களும் இருக்கு.
செக் பவுன்ஸ், இ.எம்.ஐ பவுன்ஸ்; வரும் சிக்கல்...
பொதுவாக, ஒரு செக் பவுன்ஸ் ஆகிடுச்சுனாலே அது ஒரு குற்றச்செயல். செக் பவுன்ஸ் ஆக காரணமாக இருந்த இரு தரப்பினர் அதாவது, வழங்குபவர் & வாங்குபவர் இருவர் மேலேயுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம். அல்லது காசோலையை வழங்கியவர் மீது வாங்குபவர் விரும்பினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு செக் பவுன்ஸ் ஆகும்பட்சத்தில் அபராதம், சிறைத்தண்டனை (அ) இரண்டுமேகூட விதிக்கப்படும் கட்டாயம் ஏற்படும். (section 138, nigotiable Instruments Act 1881)
நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமென்ட் சட்டத்தின் பிரிவு 138-ன்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒரு காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டால் அல்லது கடன் வாங்கியவர் காலக்கிரமத்தில் டெபாசிட் செய்யத் தவறினால் அல்லது அவரது வங்கிக் கணக்கின் இருப்பு இ.எம்.ஐ தொகையைவிடக் குறைவாக இருந்தால், அதனால் இ.எம்.ஐ கட்டணம் கட்டுவது தாமதமாகும். இது சில நாள்கள் முதல் சில வாரங்கள், சில மாதங்கள் வரை தாமதமாகப் பணம் செலுத்தும் நிலை ஏற்படுத்தும்.
கடன் வாங்குறவங்க தவறிய இ.எம்.ஐ கட்டணத்துக்கு கூடுதல் கட்டணத்த செலுத்துற சூழ்நிலை வரும். மேலும் தாமதமான அபராதத் தொகை மற்றும் கூடுதல் வட்டி விகிதத்தைச் செலுத்த நேரிடும். மேலும், இவ்வாறு பவுன்ஸ் ஆகும் சூழலில் ஒருவருடைய வங்கிக் கணக்கின் வரவு செலவு செயல்பாட்டில், தாமதமாக கிரெடிட் செய்யப்பட்டதை உணர்த்தும். இதனால் கிரெடிட் ஸ்கோர் பாதிப்படையும். இதனால் கடன் பெறும் தகுதி குறையும்.
எவ்வாறு தடுப்பது..?
காசோலை நிராகரிக்கப்படுவதைத் தடுப்பதற்கு, வங்கிக் கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையைவிட கூடுதல் பணத்தை எப்போதும் வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
அவ்வப்போது வங்கிக் கணக்கின் வரவு செலவை சரி பார்க்கணும். காசோலையை ஒருவருக்கு வழங்கும்போது எல்லாவற்றையும் கருத்தில்கொண்டு எத்தகைய தவறும் இல்லை என்று உறுதியளித்த பின்னரே வாங்குபவரிடம் கொடுக்க வேண்டும்.
காசோலையை நிரப்பும் பொழுது தேதி, கையெழுத்து, பணத்தின் மதிப்பு முதலியவற்றை கவனித்தில் கொண்டு நிரப்ப வேண்டும். குறிப்பிட்ட சிறு தொகைக்கு காசோலை பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.

Also Read
டிஜிட்டல் முறை வந்தபின் மீண்டும் பழைய முறையான செக்குகளை நாட வேண்டியதில்லை.
இ.எம்.ஐ பொறுத்தவரை அந்தந்த மாதத்துக்கான மாதத் தவணை தொகையை இரண்டு நாள்களுக்கு முன்னாடியே வங்கிக் கணக்கில் செலுத்திவிட வேண்டும். கடன் வாங்க விண்ணப்பிக் கிறப்ப, ஒப்பந்தங்கள்ல குறிப்பிடப்பட்டிருக்க நிபந்தனைகளை எல்லாம் படித்துப் பார்த்து ஆராய்ந்த பின்னரே ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஆர்.பி.ஐ-யின் வழிகாட்டுதல்களின்படி, 1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காசோலைகளில் குறைந்தபட்சம் நான்கு முறை மீண்டும் மீண்டும் செக் புக் பவுன்ஸ் குற்றத்தைப் பதிவு செய்துள்ள எந்தவொரு நபருக்கும் காசோலை வழங்குவதை வங்கி தடுக்கலாம்.
பிணையப் பாதுகாப்பை வைத்து நீங்கள் கடன் வாங்கியிருந்தால், உங்கள் இ.எம்.ஐ கட்டப்படாத நிலையில், வங்கியில் நீங்கள் வைத்துள்ள பிற கணக்கிலிருந்து பணத்தைக் கழிக்க வங்கிக்கு உரிமை உண்டு.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வங்கிக் கணக்கின் வரவு செலவு செயல்பாட்டை அவ்வபோது கண்காணித்து வந்தால் நாம் செக் பவுன்ஸ் என்கிற பிரச்னைக்கே உள்ளாகத் தேவையில்லை!