Published:Updated:

உலக சேமிப்பு தின சிறப்பு கட்டுரை: அவசரக்கால நிதி சேமிப்பது எப்படி?

சேமிப்பு
News
சேமிப்பு ( IDFC FIRST Bank )

அவசரக்கால நிதியாக எஃப்.டி-யில் சேமிப்பு போட்டு வைத்தால் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம். அல்லது வங்கியிலோ, தபால் நிலையத்திலோ கண்டிப்பாக சேமிப்பு செய்திருக்க வேண்டும். மேலும் ஆர்.டி-யில் கூட முதலீடு செய்யலாம். அவசரக்கால நிதிக்கு மியூச்சுவல் ஃபண்ட் தான் சிறந்த வழி.

Published:Updated:

உலக சேமிப்பு தின சிறப்பு கட்டுரை: அவசரக்கால நிதி சேமிப்பது எப்படி?

அவசரக்கால நிதியாக எஃப்.டி-யில் சேமிப்பு போட்டு வைத்தால் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம். அல்லது வங்கியிலோ, தபால் நிலையத்திலோ கண்டிப்பாக சேமிப்பு செய்திருக்க வேண்டும். மேலும் ஆர்.டி-யில் கூட முதலீடு செய்யலாம். அவசரக்கால நிதிக்கு மியூச்சுவல் ஃபண்ட் தான் சிறந்த வழி.

சேமிப்பு
News
சேமிப்பு ( IDFC FIRST Bank )

உலக சேமிப்பு தினம் - அக்டோபர் 30

ஸ்க்ரிப்பாக்ஸ் (Scripbox) என்னும் ஆன்லைன் முதலீட்டு நிறுவனம், இந்திய மக்களின் முதலீடுகள் குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

Survey
Survey

அந்த கணக்கெடுப்பில் இரண்டில் ஓர் இந்தியர், அவசரத் தேவைக்காக தங்களது வருமானத்தில் இருந்து 10-30% சேமிக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

கணக்கெடுப்பில் கலந்துகொண்ட 30% பேர் அவசரக்கால நிதிக்காக பணம் சேமிப்பதை தங்களது பணத் திட்டமிடலில் டாப் 2 இடத்திற்குள் வைத்திருக்கிறார்கள். 27% பேரின் அடுத்தடுத்த திட்டமிடலில் ஓய்வுக்கால சேமிப்பு மற்றும் குழந்தைகளின் கல்வி செலவு இடம் பெற்றிருக்கிறது.

Education
Education

மேலும் ஆண்கள் ஓய்வுக்கால சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும், பெண்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், பெண்கள் முதலீடு செய்வது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம், 27% பேர் தங்களது பணச் செலவுகளை குறைத்துள்ளனர். 50% பேர் தங்களது சம்பளத்தில் இருந்து 10-30% பணச் சேமிப்பில் ஈடுபடுகின்றனர். கடந்த வருடம், 23% பேர் புதிதாக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஏற்கனவே முதலீடு செய்துக்கொண்டிருந்த 20% பேர், தங்களது முதலீடுகளை மேலும் அதிகரித்துள்ளனர்.

Mutual fund (Representational Image
Mutual fund (Representational Image

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் இந்தியாவின் நம்பர் ஒன் முதலீட்டுத் திட்டமாக உள்ளது என இந்த கணக்கெடுப்பின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் உள்ள 620 பேர் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன் கூறியதாவது, "இந்தியா போன்ற பெரிய நாட்டில் 620 பேரை கொண்டு செய்த கணக்கெடுப்பை வைத்து நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியாது. இயல்பாகவே பெண்களுக்கு பொறுப்புணர்ச்சியும், ஆண்களுக்கு அனுபவமும் இருக்கும். பொதுவாக இந்தியர்கள் அனைவரும் சேமிப்பு பழக்கம் உள்ளவர்கள் தான்.

 நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன்
நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன்

வேலைக்கு செல்பவர்களின் மனநிலை செலவு நோக்கி சென்றுவிட்டுதான், சேமிப்பிற்கு வரும். ஆனால் குடும்ப தலைவிகளாக இருக்கும் பெண்கள் சேமிப்பை சிறப்பாக கையாள்வார்கள். படித்தவர்கள் பலர் காப்பீட்டு திட்டங்களை மட்டுமே அவசரக்காலச் சேமிப்பாகப் பார்க்கின்றனர். ஆனால், உண்மையாக அவசரக்கால நிதி என்பது அது இல்லை.

அவசரக்கால சேமிப்பு என்றால் எந்த நிலையிலும் நம்மை சிறப்பாக வாழவைக்கும் நிதி ஆகும். இந்த சேமிப்பு நம் வாழ்வை எந்த திசையிலும் மாற்றமால், சுமுகமாக கொண்டுச்செல்வதாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவருக்கு விபத்து நடக்கிறது என்றால் அவரால் வேலைக்கு செல்ல முடியாது. ஆனால் அவருக்கு மாதாமாதம் செலவுகள் இருக்கும், மேலும் எதிர்பாராத செலவுகளும் வரும். இந்தச் செலவுகளை சமாளிக்க குறைந்தபட்சம் 6 மாத சம்பளத்தை அவசரக்கால சேமிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த 6 மாத சம்பளத்தை சேமித்து வைப்பது என்பது கொரோனா காலத்திற்கு முன்பானது ஆகும்.

money
money

அவசரக்கால சேமிப்பது என்பது எதிர்பார்த்த நிகழ்வுகளுக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் சேமித்து வைப்பதே ஆகும். கொரோனா காலத்தில் பலர் வேலைவாய்ப்பை இழந்தார்கள் மற்றும் பொருளாதாரதில் பின்தங்கியவர்கள் ஆனார்கள். அதனால், அவசரக்கால சேமிப்பை மாற்றியமைக்கும் நிலைமைக்கு சென்றுள்ளோம். தற்போதைய காலக்கட்டத்தில், அவசரக்கால சேமிப்பாக மூன்று வருடத் தேவைக்கான பணத்தை சேமித்து வைக்க வேண்டும்.

இதற்கு, வாங்குகிற சம்பளத்தில் இருந்து குறைந்தபட்சம் 5% தொடர்ந்து அவசரக்கால நிதியாக சேமித்து வைக்க வேண்டும். இந்த 5% சேமிப்பு போகத் தான் சம்பளத்தில் நாம் பட்ஜெட் திட்டமிட வேண்டும்.

Savings
Savings
Tad Toper

அவசரக்கால சேமிப்பாக தங்கத்தை தான் பலர் கருதுகிறார்கள். அவசரக்கால நிதியாக எஃப்.டி-யில் சேமிப்பு போட்டு வைத்தால் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம் அல்லது வங்கியிலோ, தபால் நிலையத்திலோ கண்டிப்பாக சேமிப்பு செய்திருக்க வேண்டும். மேலும் ஆர்.டி-யில் கூட முதலீடு செய்யலாம். ஆனால், ஆர்.டி மற்றும் எஃப்.டி-யில் நாம் முதலீடு செய்து, பாதியில் நிறுத்தினால் பிடித்தம் செய்வார்கள். அவசரக்கால நிதிக்கு மியூச்சுவல் ஃபண்ட் தான் சிறந்த வழி. மியூச்சுவல் பண்ட்டில் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. கூடுதலாக மியூச்சுவல் ஃபண்ட்டில் தேவைப்படும் அடுத்த நாளே பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

தற்போது காப்பீட்டு திட்டம் போன்ற பாதுகாப்பு கவசத்தை மக்கள் பெரிதாக்கி கொள்ள தொடங்கிவிட்டார்கள். கொரோனா காலத்திற்கு பிறகு 2-3% மக்கள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஏற்கனவே காப்பீட்டு திட்டம் வைத்திருந்தவர்கள் கவரேஜை அதிகரித்துள்ளனர். இதுவும் ஒரு வளர்ச்சி தான்.

Credit Card
Credit Card
Image by lcb from Pixabay

அடுத்த மாதம், ரூ.10,000 வரும் என்றால் மட்டுமே, கிரெடிட் கார்டில் இந்த மாதம் ரூ.10,000 ஸ்வைப் செய்ய வேண்டும். இதை மீறி நாம் கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால், வேறு பணப் பிரச்னைகள் வரலாம்.

கொரோனா காலத்திற்கு பிறகு, மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடங்கி மளிகை சாமான் வரை மாதாமாதம் இ.எம்.ஐ கட்டுவதுபோல் வந்துவிட்டது. இது நடைமுறையை மேலும் சுலபமாகிவிட்டது. அதனால், நாம் மூன்று பொருள்கள் வாங்கும் இடத்தில் முப்பது பொருள்களை இன்ஸ்டால்மெண்ட்டில் வாங்குவோம். இது பணச் சிக்கலை அதிகரிக்கும். இதற்காக தெளிவாக திட்டமிட்டு கொள்ளவேண்டும். உதாரணமாக, நமது சம்பளத்தை 5% அவசரக்கால நிதிக்கு, 10% கடன் போன்றவற்றிற்கு, 10% கல்வி செலவுக்கு, 10% ஓய்வூதியத்திற்கு என திட்டமிட்டு செலவிட வேண்டும். நமக்கு மீறிய கடனை எப்போதும் வாங்கக்கூடாது.

Financial Planning
Financial Planning
Tomorrow Makers

மனிதர்களுக்கு பல ஆசைகள் இருக்கும். ஆசைக்கு சம்பளத்தில் 10-15% மட்டுமே செலவிட வேண்டும். சரியாக திட்டமிட்டு சேமித்தால் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றலாம்" என்று கூறினார்.

இந்த உலக சேமிப்பு தினத்தில் அவசரக்கால நிதியை திரட்ட திட்டமிட தொடங்கிவிட்டீர்களா?