பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

அடுத்தடுத்து வரும் புகார்கள், ஓட்டமெடுக்கும் ஏஜென்டுகள், காவல் துறையின் கண்காணிப்பில் ஐ.எஃப்.எஸ்!

புகார் அளித்தவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புகார் அளித்தவர்கள்

ஃபாலோ அப்!

‘வேலூர் ஐ.எஃப்.எஸ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது’ என்று தொலைக்காட்சியில் செய்தி வருகிறது. இன்னொரு பக்கம், ‘‘அந்த நிறுவனத்தின் முக்கிய புள்ளிகளின் செல்போன் ‘ஆஃப்’ ஆகியிருக்கிறது. வேலூர் தொடங்கி சென்னை வரை சுறுசுறுப்பாக செயல் பட்டு வந்த அவர்களுடைய ஏஜென்டுகளின் செல்போன் களும் ‘ஆஃப்’ ஆகியுள்ளன. ஆள்களும் கண்களில் தென் படவில்லை. பணம் போட்ட மக்கள் தவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்’’ என்கிற தகவல்கள் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பரவிக் கிடக்கின்றன.

‘பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம்... ஐ.எஃப்.எஸ் சொல்வது நிஜமா’ என்கிற தலைப்பில் கடந்த 10.07.2022 தேதியிட்ட நாணயம் விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந் தோம். ‘பங்குச் சந்தை முதலீட் டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ஏஜென்ட்டுகள் மூலமாக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கிறது வேலூர் காட்பாடியில் இயங்கிவரும் ஐ.எஃப்.எஸ் நிறுவனம் (IFS)’ என்று கிளம்பிவரும் புகார் களின் அடிப்படையில் வெளி யிடப்பட்ட கட்டுரை அது.

இந்த நிலையில், ‘எல்.என்.எஸ் இன்டர்நேஷனல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்’ (LNS-IFS) என்ற நிறுவனம் சார்பில் சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரியிடமிருந்து நமக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

புகார் அளித்தவர்கள்
புகார் அளித்தவர்கள்

‘‘என் கட்சிக்காரரான லட்சுமி நாராயணன் நடத்தும் எல்.என்.எஸ் - ஐ.எஃப்.எஸ் நிறுவனம், பங்குச் சந்தை முதலீடு பற்றி மாணவர் களுக்குப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனம் மட்டுமே. பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக எந்த யோசனை யும் சொல்வதில்லை. ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் மிகப் பெரிய வருமானத்தைத் தருவதாகச் சொல்லி, வேலூர், சென்னை பகுதிகளில் மக்களிடமிருந்து கோடிக் கணக்கில் பணம் பெறுவதாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த நிறுவனம் மக்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்கவில்லை.

உங்கள் கட்டுரையைத் தொடர்ந்து, பலரும் என் கட்சிக்காரரைத் தொடர்பு கொண்டு கேள்வி கேட்பதால், அவர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார். நஷ்ட ஈடாக 15 நாள்களுக்குள் ஒரு கோடி ரூபாயை வழங்க வேண்டும். இல்லாவிட் டால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்’’ என்பதுதான் அந்த நோட்டீஸில் உள்ள சாராம்சம்.

தனஞ்செழியன்
தனஞ்செழியன்

அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்கும் முன்பே உரிய விளக்கத்தைக் கேட்டு, மின்அஞ்சல் செய்தோம். ஆனால், பதில் தரவில்லை. அடுத்து, அந்த நிறுவனத் தைச் சேர்ந்த ஜனார்த்தனனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் பதில் தர மறுத்துவிட்டார். தற்போது வழக்கறிஞர் நோட்டீஸ் மூலமாக, பணம் வாங்கவில்லை என்று விளக்கம் தந்திருக்கிறார்கள். ஆனால், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்பதுதான் குற்றச்சாட்டே. அதை மறுக்கும் நிலையில், இவர்கள் பெயரைச் சொல்லி பணத்தை வசூலிப்பது யார், மக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு என்ன உத்தரவாதம், தங்கள் பெயரைப் பயன்படுத்தி வெளியில் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை ஏதும் இவர்கள் எடுத்துள்ளனரா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

இந்த நிலையில், கடந்த 16-ம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரிடம், ‘‘பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறோம். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் 10,000 என்று சொல்லி தனஞ்செழியன் என்பவர் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டார்’’ என்று கோனேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, சுகுமார் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என திரண்டு புகார் கொடுத் துள்ளனர்.

புகார் கொடுத்த சூர்யா, சுகுமார் குடும்பத்தினரை நாம் சந்தித்துப் பேசினோம். ‘‘ராணிப்பேட்டை மாவட்டம், வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்த சாம்ப சிவம் என்பவரின் மகன்கள் அதியமான், தனஞ் செழியன், பரத், பாரி ஆகிய நால்வருடன், அதியமானின் மனைவி மீரா, தனஞ்செழியனின் மனைவி கங்காதேவி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து, ஆன்லைன் டிரேடிங் மூலம் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதம்தோறும் 10% முதல் வருமானம் ஈட்டி தருவதாகக் கூறி, எங்களிடமிருந்து பணத்தை வாங்கினார்கள். அதா வது, ரூ.1 லட்சம் முத லீடு செய்தால் மாதம் தோறும் ரூ.10,000 தருவ தாகக் கூறினார்கள். கம்ப்யூட்டர்களை வைத்து டிரேடிங் செய்யும் அலுவலகத் தை அவர்கள் காட்டி யதை நம்பி பணத்தைக் கொடுத்தோம்.

2021 பிப்ரவரி முதல் 2022 மே வரை மொத்தமாக ரூ.6 கோடி தந்தோம். ‘வியாபாரம் நிமித்தம் கடனாக இந்தத் தொகையை வாங்கிக்கொள்கிறேன்’ என்று பத்திரத்தில் எழுதித் தந்த வர்கள், அந்தத் தொகைக்கு ஈடான காசோலையையும் தந்தார்கள். எங்களை நம்பி ஊர்க்காரர்கள் பலரும் முதலீடு செய்தார்கள். சில மாதங்கள் வரை மட்டும், ரூ.1 லட்சத்துக்கு ரூ.10,000 வீதம் பணம் கொடுத்தவர்கள், பிற்பாடு பணம் தராமல் ஏமாற்ற ஆரம்பித்தார்கள். எங்களுக்கு சந்தேகம் வரவே, நேரில் சென்று கேட்டோம். இதோ அதோ என்று இழுத்தடித்தார்கள். நாங்கள் விடாமல் துளைத்தெடுத்தபோது தான், அவர்கள் ஆன்லைன் டிரேடிங் செய்யவில்லை என்பது தெரிந்தது. பணத்தைக் கேட்டு அழுத்தம் கொடுத்தபோது, எங்கள் மீதே போலீஸில் கந்துவட்டி புகார் தந்துவிட்டார்கள்’’ என்று குமுறினார்கள்.

வட்டிக்குக் கடன் வாங்கியது போலவும், திருப்பித் தருவது போலவும் பத்திரத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு, நாளைக்குப் பணத்தைக் கேட்டால், கந்து வட்டி புகார் கொடுக்கலாம் என்று பலே கில்லாடியாக யோசித்துச் செயல்படுத்தியுள்ளனர். ஆம், வேலூர் எஸ்.பி அலுவலகத்தில், பணம் கொடுத்த மக்கள் மீதே கந்துவட்டி புகார் தரப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தான் காஞ்சிபுரம் எஸ்.பி-யிடம் புகார் தந்திருக்கிறார்கள்.

இதைப் பற்றி பேசிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நம் வாசகர் ஒருவர், ‘‘ஏமாந்து நிற்கும் மக்களிடம் இருக்கும் ஆவணங்கள் அனைத்தும், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்துகொண்டிருக்கும் நபர்கள் கொடுக்கும் ஆவணங்களுடன் பொருந்துகின்றன. இந்தத் தனஞ்செழியன், அதியமான் குடும்பத்தினர், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் பினாமி ஏஜென்டு களாகக்கூட இருக்கலாம். வேலூர் முதல் சென்னை வரை இப்படி பல ஆயிரம் பேர்களிடம் வசூலித்திருக்கிறார்கள். கணக்குப் போட்டுப் பார்த்தால், பல ஆயிரம் கோடியை சுருட்டியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது’’ என்றார்.

அடுத்தடுத்து வரும் புகார்கள், 
ஓட்டமெடுக்கும் ஏஜென்டுகள், காவல் துறையின் கண்காணிப்பில் ஐ.எஃப்.எஸ்!

ஏஜென்ட் தனஞ்செழியன் இப்போது தலைமறைவாகி இருப்பதாகச் சொல்கிறார்கள் புகார் தந்த சூர்யா, சுகுமார் தரப்பினர். நாம் தனஞ்செழி யனுக்கு போன் செய்தோம். போனை எடுத்த அவருடைய மனைவி கங்காதேவி, ‘‘எல்லோ ரும் பணம் கேட்பதால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறார். இப்போது அவரால் எதுவும் பேச முடியாது” என்று சொன்னவர், அவர்கள் மீதான புகார் எதை யும் மறுக்கவில்லை.

இது ஒருபக்கம் இருக்க, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்று சொல்லப்படும் ‘மார்க்’ (MARC) நிறுவனத்தின் கிளை அலுவல கம் சென்னை வளசரவாக்கத் தில் சில நாள்களுக்கு முன் திறக்கப்படுவதாக இருந்தது. இந்தத் திறப்பு விழாவில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள் வதாக இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் யாரும் வராததைப் பார்த்து, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏஜென்டுகளுக்கு சந்தேகம் வந்தது. இந்தக் கூட்டத்துக்கு வரவிருந்த முக்கியமான சில ஏஜென்டுகளும் வராததால், சந்தேகம் இன்னும் அதிக மானது. இதற்குப் பின் மக்களிடம் பணம் வாங்கித் தந்த ஏஜென்டுகள் தலைமறைவாகத் தொடங்கியுள்ளனர். ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் செல்போன் கள் தொடர்ந்து ‘ஆஃப்’ ஆகியிருப்பதால், அவர்கள் தலைமறைவாகி இருக்கிறார்களா அல்லது காவல்துறை கண்காணிப்பில் இருக்கிறார்களா என்பது தெரியாமல் பணம் போட்டவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்!