தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கடின உழைப்பு மட்டுமே உங்களைக் கோடீஸ்வரர் ஆக்காது!

நிதிக் கல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
நிதிக் கல்வி

நிதிக் கல்வி

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை உலக நாடு களில் முதலிடம் பிடித்துவிடும். உலகிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண் டதும் நம் நாடுதான். உலகளாவிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பல இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். தலைசிறந்த உழைப்பாளிகள் என்று பெயர்பெற்றுள்ள நாம், உலகின் பணக்கார நாடுகள் வரிசையில் ஆறாமிடத்தில் இருக்கிறோம்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

ஆனால், நமது நாட்டில் இருக்கும் செல்வம் டாப் 1% பணக்காரர்களிடமே குவிந் துள்ளது. இதைப் பரவலாக்கி, நாமும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடிப்பதற்கு கடினமான உழைப்பு மட்டும் போதாது. (இங்கு கடின உழைப்பு என்பது முக்கியமாக உடல் உழைப்பைக் குறிக் கிறது). நெப்போலியன் ஹில் என்னும் புகழ்பெற்ற எழுத் தாளர், “கடும் உழைப்பாளி களிடம் பெரிய அளவு பணம் வருவது கடினம்” என்று கூறுகிறார். இதைப் பல பொருளாதார மேதைகளும் வழிமொழிகின்றனர். இதற்கு என்ன காரணம்?

உடலுழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொள்ளுதல்...

வேட்டையாடியும், விவசாயம் செய்தும் உணவை ஈட்டிய நாம், உடலுழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சர்யம் இல்லை. வேட்டை யாடக் கைகொடுத்த உடல் உரம், போர்க்காலத்திலும் அத்தியாவசியத் தேவையாக இருந்தது. உடல் உரம் வாய்ந்த வர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைத்தது. அரசர்களாகவும், தளபதிகளாகவும், போர் வீரர் களாகவும் உருவெடுக்க அது உதவியது. அதனால் சமூகத் தில் உடல் உரமும், கடின உழைப்பும் இருந்தால்தான் பெரிய அளவில் பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை பரவியது. உழைப்பாளிகளும் மூளை செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உடலை உறுதி செய்வதிலேயே குறியாக இருந்தனர். அதையே தங்கள் மூலதனமாகவும் கொண்டனர்.

கடின உழைப்பு மட்டுமே உங்களைக் கோடீஸ்வரர் ஆக்காது!

காலம் நிகழ்த்திய மாற்றத்தை அறியாதிருத்தல்...

ஆனால், கடந்த நூற்றாண் டில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. வேட்டையோ, விவசாயமோ, போரோ – உடல் உரத்தைவிட, மூளையை உபயோகித்துச் செய்யும் புதிய முயற்சிகளும், கண்டுபிடிப்புகளும் முக்கியத் துவம் பெற ஆரம்பித்தன. பணியாளர் தேர்விலும் இது பிரதிபலித்தது. ‘நைன் டு ஃபைவ்’ வேலைகள் பெருகிய பின், 13.7% வேலைகளுக்கு மட்டுமே உடல் உரம் தேவைப் படுகிறது.

இது கணினிகளின் கால மாக மாறியுள்ளது. எல்லாத் துறைகளிலும் கணினி மயமாக்கல் பெருகப் பெருக, உடல் உழைப்பின் தேவை குறைந்துகொண்டேதான் போகும். ‘உங்கள் உடல் உழைப்பு அல்ல; உங்கள் மூளையின் உழைப்பு தான் பணத்தை குவிக்க வல்லது’ என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. 2005-ல் யூடியூபை அறிமுகம் செய்தவர்கள் அதை விற்று, 1.65 பில்லியன் டாலர்கள் ஈட்டினர். 2009-ல் வாட்ஸ்அப்பை அறிமுகம் செய்தவர்கள், 2014-ல் 19 பில்லியன் டாலர்களுக்கு அதை ஃபேஸ்புக்குக்கு விற்றனர்.

இவையெல்லாம் மூளை பலத்தாலேயே சாத்தியம் ஆகியது. உலகம் மாறிவிட்டது. இந்தப் புதிய உலகில் பணக்காரர் ஆவதற்குத் தேவை அறிவின் பலமே ஒழிய, உடலின் பலம் அல்ல. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக உடல் உழைப்பாளிகள் இந்த மாற்றத்தை உணரவில்லை.

பொருளாதார அறிவு மேம்பாட்டுக்கு நேரம் ஒதுக்கா திருத்தல்...

கத்தியைத் தீட்டுவதைவிட புத்தியைத் தீட்டுவதே பணம் ஈட்டவல்லது என்பது இன்றைய நிதர்சனமாகி விட்டது. ஆனால், புத்தியைத் தீட்டுவது மிகக் கடினமாகையால் மிகச் சிலரே அதில் ஈடுபடுகிறார்கள். வேலை செய்து பொருள் ஈட்டுவதில் நேரத்தை செல விடுவது போல, அதிலிருந்து கிடைக்கும் பொருளைப் பாதுகாத்து வளர்க்கும் அறிவை அடையவும் நேரம் செலவிடப்பட வேண்டும். அதற்கு நாம் அதிகம் வாசிக்க வேண்டும்; கேட்க வேண்டும்; கற்க வேண்டும். 92 வயதினரான வாரன் பஃபெட் இன்றும் ஐந்து மணி நேரம் செலவழித்து பத்திரிகைகளையும், நிறுவனங்களின் ரிப்போர்ட்டுகளையும் வாசிக்கத் தவறுவதில்லை.

ஆனால், அதிகப் பணத்தை ஈட்ட இரண்டு வேலைகள் செய்து 16 மணி நேரம் செலவிட்டு, மீதியைத் தூக்கத்தில் கழிக்கும் ஒருவரால் இவற்றுக்கு நேரம் ஒதுக்க முடியுமா? நம்மில் பலர் உடல் உழைப்பில் அதிக நேரம் செலவழிப்பதே இது போன்ற கற்றல்களை தவிர்ப்பதற்குத்தான் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஏனெனில், மூளையைப் பட்டை தீட்டுதல், பொருளாதார மேம்பாட்டு முறைகள் பற்றி கற்றுக்கொள்ளல் போன்றவை மிகவும் சிரமமான செயல். இதைத் தவிர்க்க விரும்பி, மேலும் மேலும் உடலுழைப்பில் ஈடுபடுவதன் மூலம் வருமானத்தை ஓரளவு மேம்படுத்த முடியுமே தவிர, செல்வத்தைப் பெருக்க இயலாது. துரதிர்ஷ்ட வசமாக உடல் உழைப்பாளிகள் இந்த மாற்றத்தையும் உணரவில்லை.

இன்று லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள்கூட பொருளாதார அறிவின் துணை இன்றி, மிகப் பெரிய செல்வ நிலையை அடைவது பற்றிக் கனவுகூட காண முடியாது.

உதாரணமாக, ஒரு கம்பெனியின் சி.இ.ஓ லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், தன் ஒவ்வொரு நிமிடத்தையும் கம்பெனி நலனுக்காகவே செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருக்கும். தன் சொந்த வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய பொருளாதார முறைகள் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தாலும், அபூர்வமாகக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படிக்கவோ, தீவிரமாக சிந்திக்கவோ, பொருளாதாரத்தை நிர்வகிப் பவர்களை சந்திக்கவோ அவரால் முடிவதில்லை.

வாழ்க்கை மாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல் இருத்தல்...

வங்கி முதலீடுகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற பழைய முதலீட்டு முறைகள் மங்கியுள்ளன. அதே நேரத்தில் அவை முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. நம் போர்ட்ஃபோலியோவில் பங்கு வகிக்கக்கூடிய முதலீட்டு முறைகளில் ஒன்றாக மாறி யுள்ளன.

முன்பு சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட பங்குச் சந்தை மட்டுமன்றி, அதன் குழந்தையான மியூச்சுவல் ஃபண்டும் மக்களின் செல்வ வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளன. அது போலவே, முதலீடுகளை நாம் கையாளும் வழிகளும் மாறியுள்ளன.

முன்பு போல யாரும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் வங்கிக் கிளைகளுக்கோ, இன்ஷூரன்ஸ் கிளைகளுக்கோ செல்வ தில்லை. டெக்னாலஜி உதவியால், இருந்த இடத்தில் இருந்தே சேமிப்பு, முதலீடு, கடன் போன்ற அத்தனை பணப் பரிவர்த்தனைகளையும் நடத்த இயலும்.

ஆனால், பொருளாதார செயலறிவு பற்றிய கற்றல் மற்றும் கேட்டல் இல்லாதவர்கள் இவற்றைக் கையாளும் ஆற்றலை முழுவதுமாகப் பெறுவதில்லை. மேலும், மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் பொன்சி திட்டங்கள், சீட்டுக் குழுக்கள் நடத்தி, பின்பு மாயமாகும் தனியார் நிறுவனங்கள் போன்ற வற்றைப் பற்றிய நடப்புச் செய்திகளை அறியாமல் இருப்ப வர்கள், இது போன்ற மோசடிகளில் பணத்தை இழக்க நேர்கிறது.

செல்வம் வளரத் தேவை பொருளாதார அறிவு...

நம் பொருளாதார அறிவு மேம்பட, மேம்படத்தான் நமது செல்வமும் வளரும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. அதிகப் பணம் வேண்டுமா?

பணம் பற்றிய நம் அறிவு வளர வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இது ஓரளவு எளிது. பக்கம், பக்கமாகப் படித்தாலும் தீராத பொருளா தாரப் புத்தகங்களைப் படிக்கப் பொறுமையும் நேரமும் இல்லாதவர்களுக்கு உதவியாக அவை ஆடியோ வடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தினமும் ஒரு அரை மணி நேரம் அவற்றைக் கேட்கலாம்.

என்றாலும் அச்சு ஊடகங் கள் நம் பொருளாதார அறிவை வளர்க்கும் பணியை மிகுந்த பொறுப்புடன் செய்து வருகின் றன. யூடியூபில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார வீடியோக்களும்கூட நம் அறிவை வளர்க்கும்; கூடவே நம் பணத்தையும்.

இந்த உண்மைகளை உண ராமல் பகலெல்லாம் உடல் உழைப்பில் ஈடுபட்டு, களைப் பாற மாலைப் பொழுதில் டிவியைத் தஞ்சம் அடைவது என்பது நம் வாழ்க்கையை வளம் பெறச் செய்யாது.

கடின உழைப்பு கண்டிப் பாகத் தேவை; ஆனால், அதிலிருந்து கிடைக்கும் செல்வத்தைப் பாதுகாத்து வளர்க்கவும், மூளையைப் பட்டை தீட்டி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் நேரம் ஒதுக்குவது மிக முக்கியம்.

இதுவே கடின உழைப் பாளிகள் பணக்காரர்கள் ஆவதற்கு மேற்கொள்ள வேண்டிய தாரக மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள் ளாதவர்கள் சாகும் வரை ஏழைகளாகவே இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!