Published:Updated:

2022 டிசம்பரில் ரூ.1.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலித்து சாதனை..!

ஜிஎஸ்டி | GST
News
ஜிஎஸ்டி | GST

கடந்த 10 மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடும்போது ஏற்கெனவே அதிகபட்சமாக இருந்த ரூ.1.4 லட்சம் கோடியைத் தாண்டி ஜிஎஸ்டி வருவாய் வசூல் ஆகியுள்ளது.

Published:Updated:

2022 டிசம்பரில் ரூ.1.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலித்து சாதனை..!

கடந்த 10 மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடும்போது ஏற்கெனவே அதிகபட்சமாக இருந்த ரூ.1.4 லட்சம் கோடியைத் தாண்டி ஜிஎஸ்டி வருவாய் வசூல் ஆகியுள்ளது.

ஜிஎஸ்டி | GST
News
ஜிஎஸ்டி | GST

2022 டிசம்பரில் சரக்கு மற்றும் சேவை வரியாக (GST) நாடுமுழுவதும் ரூ. 1.5 லட்சம் கோடி வசூலாகியுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் நேற்று  (ஜனவரி 1) அறிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 15.2% (ரூ.1.3 லட்சம் கோடி) அதிகரித்தும், 2022 நவம்பருடன் ஒப்பிடும்போது 2.5% (ரூ.1.46 லட்சம் கோடி) அதிகமாகவும் உள்ளது. கடந்த 10 மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடும்போது ஏற்கெனவே அதிகபட்சமாக இருந்த ரூ.1.4 லட்சம் கோடியைத் தாண்டி ஜிஎஸ்டி வருவாய் வசூல் ஆகியுள்ளது.

Nirmala Sitharaman - மத்திய நிதி அமைச்சகம்.
Nirmala Sitharaman - மத்திய நிதி அமைச்சகம்.

டிசம்பரில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.33,357 கோடியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடியாகவும், செஸ் (Cess) ரூ.11,005 கோடியாகவும் இருந்தது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.36,669 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.31,094 கோடியும் மத்தியஅரசு  வழங்கியுள்ளது. அதன்படி, செட்டில்மென்ட்டுக்குப் பிந்தைய டிசம்பர் மாதத்தில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் முறையே ரூ.63,380 கோடி மற்றும் ரூ.64,451 கோடி ஆகும்.

நவம்பரில், இந்தியாவின் எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டியில், அவற்றின் வருவாயில் 14% வளர்ச்சியைக் கண்டன. அதே வேளையில், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்; ஜிஎஸ்டி வசூல் 14 சதவிகிதத்துக்கும் குறைவாக வந்துள்ளது.

2022 டிசம்பரில் ரூ.1.5 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலித்து சாதனை..!

டிசம்பரில் வளர்ச்சி கண்ட 14 மாநிலங்கள்: 

இமாசலப் பிரதேசம் (7%), பஞ்சாப் (10%), மணிப்பூர் (-5%), அஸ்ஸாம் (13%), ஒடிசா (-6%), சத்தீஸ்கர் (0%), டாமன் மற்றும் டையூ (-86%), கோவா (-22%),லட்சத்தீவு (-36%), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (-19%), தெலங்கானா (11%).

நிர்ணயிக்கப்பட்ட  ஜிஎஸ்டி வருவாயின் காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டின்  தொடர்புடைய மாதத்துடன் ஒப்பிடும்போது, மாநிலங்களின் வசூல் 14% ஆகும், மேலும்  அதற்கு அதிகமாக இல்லாவிட்டால், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது என நிதியமைச்சகம் கூறியுள்ளது.