Published:Updated:

அதிகரிக்கும் கிரெடிட் கார்டு பயன்பாடுகள்... தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன?

கிரெடிட் கார்டு
News
கிரெடிட் கார்டு

``புதிய கிரெடிட் கார்டு வாங்குவதற்குப் பதில் ஏற்கெனவே இருக்கும் கிரெடிட் கார்டின் வகையை, அதே நிறுவனத்தின் அதிக சலுகை கிடைக்கும் வேறு கார்டுக்கு மாற்றிக்கொள்வது நல்லது. மேலும், பலர் ஆஃபருக்காக ஆசைப்பட்டு கிரெடிட் கார்டுகளை வாங்கிவிடுகிறார்கள். அவர்கள் கவனிக்க வேண்டியவை இதுதான்."

Published:Updated:

அதிகரிக்கும் கிரெடிட் கார்டு பயன்பாடுகள்... தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன?

``புதிய கிரெடிட் கார்டு வாங்குவதற்குப் பதில் ஏற்கெனவே இருக்கும் கிரெடிட் கார்டின் வகையை, அதே நிறுவனத்தின் அதிக சலுகை கிடைக்கும் வேறு கார்டுக்கு மாற்றிக்கொள்வது நல்லது. மேலும், பலர் ஆஃபருக்காக ஆசைப்பட்டு கிரெடிட் கார்டுகளை வாங்கிவிடுகிறார்கள். அவர்கள் கவனிக்க வேண்டியவை இதுதான்."

கிரெடிட் கார்டு
News
கிரெடிட் கார்டு

இன்றைக்கு இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நம் நாட்டில் சுமார் 2.9 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது 2021 மார்ச் மாதத்தில் 6.2 கோடியாக உயர்ந்தது.

இந்தியாவில் 7.36 கோடி கிரெடிட் கார்டுகள்..!

இந்தியாவில் 2022 மார்ச் மாதத்தில் 7.36 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்த கார்டுகள் மூலம் செய்யப்பட்ட செலவு ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேலாக உள்ளது. மேலும், இது டெபிட் கார்டு மூலம் செய்யப்பட்ட செலவைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2021-ல் இந்தியாவில் 3% பேரிடம்தான் கிரெடிட் கார்டு இருந்தது. அது இப்போது 5.5% ஆக அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்டு பயன்பாடு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

பல கிரெடிட் கார்டுகள் பயன்பாடு..!

பெரும்பாலானோர் செய்யும் மிகப் பெரிய தவறு பல கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதாகும். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் அவற்றின் கார்டுகளை அதிகம் பயன்படுத்த வைக்க புதுப் புது கார்டுகளை அதிக ஆஃபர் உடன் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இதில் மயங்கி பலர் பல கிரெடிட் கார்டுகளை வாங்கி கடன் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வாங்கி விடுகிறார்கள். இப்படிச் செய்வது அதிக ரிஸ்க் என்பதோடு, கிரெடிட் ஸ்கோர் வெகுவாகக் குறைய காரணமாகிவிடுகிறது.

புதிய கிரெடிட் கார்டு வாங்குவதற்குப் பதில் ஏற்கெனவே இருக்கும் கிரெடிட் கார்டின் வகையை அதே நிறுவனத்தின் அதிக சலுகை கிடைக்கும் வேறு கார்டுக்கு மாற்றிக்கொள்வது நல்லது. மேலும் பலர் ஆஃபருக்காக ஆசைப்பட்டு கிரெடிட் கார்டுகளை வாங்கிவிடுகிறார்கள். அவர்கள் கவனிக்க வேண்டியவை பற்றிப் பார்ப்போம்.

கட்டுரையாளர்: கிஷோர் சுப்ரமணியன், நிறுவனர், https://www.shreeconsultants.in
கட்டுரையாளர்: கிஷோர் சுப்ரமணியன், நிறுவனர், https://www.shreeconsultants.in

பர்ஸை பதம் பார்த்த ஆஃபர்!

ஹோட்டல் ஒன்றில் அந்தக் குறிப்பிட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் 20 சதவிகிதம் தள்ளுபடி என அதன் இணைய தளத்தில் குறிப்பிட்டிருந்ததை ஒருவர் பார்த்தார். சில வாரங்கள் கழித்து அந்த ஹோட்டலில் நண்பர்களுடன் விருந்து கொண்டாடிவிட்டு, கிரெடிட் கார்டின் மூலம் பணம் கட்டப் போனால் அதிர்ச்சியடைந்தார். காரணம், அந்த ஆஃபர் போன வாரத்துடன் முடிந்துவிட்டது என்றார்கள்.

எனவே, கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்துவதாக இருந்தால் ஏதாவது ஆஃபர் இருக்கிறது என்றால் அந்த ஆஃபர் இப்போதும் இருக்கிறதா, என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது பர்ஸை பதம் பார்க்காது.

ஆஃபர்  அளவை கவனிக்காதது..!

 பல கிரெடிட் கார்டுகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல்  (உதாரணம் ரூ.50,000) பொருள்களை வாங்கினால்தான் ஆஃபர் மற்றும் கேஷ்பேக் தருவார்கள். ஆனால், இந்த விஷயத்தை * என்பது போல் நட்சத்திரக் குறியீட்டை சிறிதாகப் போட்டு சொல்லி இருப்பார்கள். இதைச் சரியாகக் கவனிக்காமல் பொருள்களை வாங்கும்போது அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைவரும். எனவே, கவனமாகப் பார்த்து பயன்படுத்த வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர்
கிரெடிட் ஸ்கோர்

வங்கிக் கணக்குடன் இணையுங்கள்..!

 உங்கள் சேமிப்புக் கணக்கில் போதிய பணம் இருந்தும், கிரெடிட் கார்டு பாக்கியைக் கட்டுவதை மறந்துவிடும் நபரா நீங்கள்? சரியான நேரத்தில் பணம் கட்டவில்லை என்றால் அபராதம் மற்றும் கூடுதல் வட்டி போடப்படும். கூடவே, 30 நாள்கள் கழித்து பணம் கட்டும் பட்சத்தில் கிரெடிட் ஸ்கோர் குறையும்.

இதைத் தவிர்க்க, கிரெடிட் கார்டு உடன் உங்கள் வங்கிக் கணக்கை இணைத்துவிட்டால் கிரெடிட் கார்டு பில் பாக்கி பணம், உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது.

- கிஷோர் சுப்ரமணியன்.