Published:Updated:

இந்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பு... இளைஞர்களிடம் சேமிப்பு பழக்கத்தைக் குறைக்குமா?

மத்திய பட்ஜெட் 2023
News
மத்திய பட்ஜெட் 2023

இந்த பட்ஜெட்டில், வருமான வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. புதிய வருமான வரி முறையில், ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் வருமான வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

இந்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பு... இளைஞர்களிடம் சேமிப்பு பழக்கத்தைக் குறைக்குமா?

இந்த பட்ஜெட்டில், வருமான வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. புதிய வருமான வரி முறையில், ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் வருமான வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2023
News
மத்திய பட்ஜெட் 2023

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வருமான வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. புதிய வருமான வரி முறையில், ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் வருமான வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி
வருமான வரி

ஏற்கெனவே இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி முறையில், ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது என்ற செய்தி சம்பளதாரர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், ரூ.7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை என்ற பட்ஜெட்  அறிவிப்பால் மக்களிடம் சேமிப்புப் பழக்கம் இல்லாமல் போய்விடும். பழைய வரி முறையில் 80 -சிசியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரிக்கழிவு மற்றும் தேசிய பென்ஷன் திட்டத்தில் ரூ.50,000 வரிக்கழிவு பெறலாம். இதற்கெல்லாம் இனி அவசியமில்லாமல் போய்விட்டது என்று பொருளாதார சமூக ஆர்வலர்கள் பலர் வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறையிடம் சேமிக்கும் பழக்கம் குறைந்தே வருகிறது. வங்கிகளும் வரிச் சலுகைக்கான திட்டங்களை அமல்படுத்தி வந்தன. வரிச்சலுகை பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பலரும் அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு திட்டங்களில் அவசியத்தின் அடிப்படையில் முதலீடு செய்து வருகின்றனர். 

சேமிப்பு முதலீடு
சேமிப்பு முதலீடு

இப்போது முதலீடு செய்தால்தான் வரிச்சலுகை பெற வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் போய்விட்டது. இப்போது புதிய வரி முறையின்படி ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சம்பளதாரர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற நிலையில், இவர்களிடம் சேமிப்புப் பழக்கம் குறையும். மக்களிடம் உள்ள சேமிப்புப் பழக்கம்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றி வருகிறது. EMI பழக்கம் அதிகரித்து வருவதில் இருந்தே, சேமிப்பில் ஆர்வம் குறைந்து வருவதை அறியலாம் என்று கவலை தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயத்தில் வரி கட்ட வேண்டிய தொகை, இனி சேமிப்பாக உயரும் என்பதால் கவலைப் படத்தேவையில்லை என்று சம்பளதாரர்கள் பலரும் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.