
இன்ஸ்டாகிராம் இங்கிலீஷ் ட்ரெயினர் ஆர்த்தி பாஸ்கர்
சமூக வலைதளத்தால் மற்றும் சமூக வலைதளத்திலேயே தொழில் வாய்ப்புகள் பெற்றுவரும் தலைமுறை இது. அதில் ஒருவர்தான், 25 வயதாகும் ஆர்த்தி பாஸ்கர். ஒரு இன்ஸ்டா ரீல்ஸில் தன் எதிர்காலத்தை முடிவெடுத்தவர், இப் போது புகழ்பெற்ற ஆன்லைன் இங்கிலீஷ் ட்ரெயினர். அவர் பயணத்தைப் பகிர்ந்தார் ரீல்ஸ் போலவே சுருக்கமாக...
``என் சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் அரூர். பி.ஏ. ஆங்கிலம் படிச்சிட்டு, எம்.ஏ படிக்கிறதுக்காக சென்னை வந்தேன். படிச்சு முடிச்சு ஒரு ஸ்கூல்ல மூணு மாசம் டீச்சரா வேலைபார்த்தேன். இப்போ பிஎச்.டியும் ஆங்கில இலக்கியத்தில் பண்ணிட்டிருக்கேன். எழுத்தில் ஆர்வம் அதிகம் என்பதால, கன்டன்ட் ரைட்டரா ஏழு மாசம் வேலைபார்த்தேன். பின்னர் `டெக்கன் க்ரானிக்கிள்’ ஊடகத்துல பயிற்சி பெற்றேன். சென்னையில இன்னும் சில நிறு வனங்களில் சில வேலைகள். ஆனாலும், என் கரியர் என்னன்னு முடிவு பண்ண முடியல.
கொரோனா பொது முடக்கத்தின்போது, என்னோட இன்ஸ்டா பக்கத்தை ஆங்கில வகுப்பு எடுக்கும் தளமா மாற்ற நினைச்சேன். அப்போ எனக்கு 700 ஃபாலோயர்ஸ்தான் இருந்தாங்க. என் முதல் வீடியோவை ரீல்ஸ் வடிவில், ‘முன்பின் தெரியாதவர்களுக்கு உங்களை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொள்வது எப்படி’ என்ற டாபிக்ல போட்டேன். 7,000 வியூவ்ஸ் போனது. அந்த வரவேற்புல தொடர்ந்து நேர்காணல் டிப்ஸ் (Interview tips), பொதுவிடத்தில் பேசுவது (Public speaking), எளிய ஆங்கிலம் வெர்சஸ் தொழிலுக்குத் தேவையான ஆங்கிலம் (Simple English Vs Business English), ரெஸ்யூம் டிப்ஸ், ஐஇஎல்டிஎஸ் (IELTS - The International English Language Testing System) தேர்வுக்கான டிப்ஸ்னு இப்படி பல தலைப்புகள்ல வீடியோஸ் போட் டேன். அதுல, `வழக்கமாக தவறாக உச்சரிக்கப் படும் வார்த்தைகள் (Commonly mispronounced words)’ என்ற வீடியோ திடீர்னு 15 லட்சம் வியூஸ் போனதும், என் ஆர்வம் இரு மடங் கானது. வீடியோஸ் போட்டுட்டே இருந்தேன். ஒரே வருஷத்துல 40,000 ஃபாலோயர்கள் கிடைச்சாங்க’’ என்று பூரிப்புடன் சொல்லும் ஆர்த்தி, இப்போது பலருக்கும் ஃபேவரைட் ஆன்லைன் இங்கிலீஷ் டீச்சர்.
``இங்க பலருக்கும் ஆங்கிலப் பயிற்சி தேவைனு புரிஞ்சது. அதை நான் சிறப்பா செய்றேன் என்ற நம்பிக்கை வந்தது. இது தான் என் கரியர்னு முடிவெடுத்தேன். ‘பிரேக் தி பாரியர்ஸ்’ (Break The Barriers) என்ற ஆன்லைன் அகாடமியை தொடங்கி ஜூம், கூகுள் மீட்ல வகுப்புகள் எடுக்குறேன் முதல் மாசமே 80 பேர் சேர்ந்தாங்க. மற்ற ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளில் இலக்கணம், வார்த்தைகள் மற்றும் மொழிசார் கோட்பாடுகள் கற்றுக் கொடுப்பாங்க. என்கிட்ட பிராக்டிக் கல்ஸுக்குதான் முக்கியத்துவம். என் மாணவர்களை பேச வெச்சு அவங்க மொழித்திறனை வளர்ப்பேன். அதுல சுவாரஸ்யமான செயல்பாடுகளை மேற் கொள்வேன். க்ளாஸ் ஹிட் அடிக்க... வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தெல் லாம் பலரும் க்ளாஸ்ல சேர்ந்தாங்க. அவங்களை எல்லாம் சிறப்பா ஆங்கிலம் பேசவெச்சேன்’’ என்பவர், இதுவரை 10,000 மாணவர்களுக்குப் பயிற்சி அளித் துள்ளார். வகுப்புகள் தொடர்கின்றன.
``இன்ஸ்டாகிராம், டெலிகிராம், யூடியூப்னு இந்தத் தளங்கள்தான் என் களம். யங்ஸ்டர்ஸுக்கு சொல்றதும் அதைத்தான். நான் ஆங்கில வகுப்பை என் ப்ளஸ்னு உணர்ந்து டிக் செய்ததுபோல, உங்க திறமை, விருப்பத்தின் அடிப்படையில ஒரு பாதையைத் தேர்ந்தெடுங்க. வீடியோஸ், வியூவ்ஸ்னு ஜெயிச்சுக் காட்டுங்க’’ - எனர்ஜியுடன் சொல்லும் ஆர்த்திக்கு இன்ஸ்டாவில் ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் ஆன் தி வே!