நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்!

ஜி.அண்ணாதுரை குமார் நிதி ஆலோசகர்

கார் பயணத்தின்போது, சீட் பெல்ட் அணிவது எவ்வளவு முக்கியமோ, பைக் ஓட்டும்போது தலைக்கவசம் எப்படி முக்கியமோ, அதுபோலதான் நம் முதலீட்டிற்கு ஒரு பாதுகாப்புக்  கவசம் அவசியம் தேவை. அந்தப் பாதுகாப்புக் கவசம்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ்.ஒரு குடும்பத்தையே, நிலைகுலையச் செய்யும் எதிர்பாராத செலவு என்றால், அது திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவு மட்டுமே.  

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்!

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்  

மருத்துவச் செலவுகள் ஆண்டுக்குச் சுமாராக 10-15% உயர்கிறது. அதேநேரத்தில், சாமானியனின் ஆண்டு வருமானம் சில சதவிகிதம்கூட உயரவில்லை. உடல்நலம் இல்லாமல், மருத்துவமனையில் சேர்ந்து பலரால் லட்சக் கணக்கில் செலவு செய்ய முடியாத நிலை.அப்படியே செய்வதாக இருந்தாலும், நிச்சயம் கடன் வாங்கித்தான் ஆகவேண்டும். இந்த நிலையில்தான், ஹெல்த் இன்ஷூரன்ஸின் தேவை வருகிறது.

பாலிசி எடுக்கும்முன் கவனிக்க வேண்டியவை

1. பாலிசி எடுக்கப்போகும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் 

2.  க்ளெய்ம் செட்டில்மென்ட் சராசரி விகிதம்

3. நிறுவனத்தின் மருத்துவமனைத் தொடர்புகளில் (Network), உங்கள் பகுதியில் சிறந்த மருத்துவமனைகள் இருக்கின்றனவா?  

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்!



4. காத்திருப்புக் கால நிபந்தனைகள்

5. எந்தெந்த நோய்களுக்கு உடனடி விதிவிலக்கு

6. மூத்த குடிமக்களுக்கான பாலிசியில் கோ-பேமென்ட் எத்தனை சதவிகிதம்?

7. எந்த நோய்களுக்கெல்லாம் க்ளெய்ம்  உண்டு, எதற்குக் கிடையாது..?

8. இப்போது எடுக்கப்போகும் கவரேஜ் தொகையானது நம் குடும்பத்துக்குப் போதுமா?

9. க்ளெய்ம் செய்யவில்லை என்றால், அதற்கு ‘‘நோ க்ளெய்ம்  போனஸ் உண்டா?

10. நிறுவனத்தின் செயல்பாடு பிடிக்கவில்லை என்றால், வேறு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றிக்கொள்ளும் போர்டபி லிட்டி (Portability) வசதி உள்ளதா என்பன போன்றவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே ஏதேனும் நோய்கள் இருந்தால், அறுவை சிகிச்சை செய்திருந்தால், அதனை மறக்காமல் தெரிவிக்கவேண்டும் 

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்!

பாலிசி எடுத்தபின்...

1. ஒவ்வொரு வருடமும், பாலிசியைத் தவறாமல் புதுப்பிக்க வேண்டும்; தேவையற்ற காலதாமதம், பாலிசியை முழுமையாக முடங்க செய்துவிடும்.

2. சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால், 24 மணி நேரத்துக்குள், இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

3. சிகிச்சை முடிந்த 15 நாள்களுக்குள் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

4. மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை எடுத்ததற்கான ஒரிஜினல் பில், ஸ்கேன் ரிப்போர்ட், மருந்து, மாத்திரை வாங்கிய பில், மருத்துவமனையின் ரிப்போர்ட் போன்றவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.  

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... பாலிசி எடுக்கும் முன்னும், எடுத்தபின்பும்!

‘ஒவ்வொரு வருடமும், பாலிசியை பிரீமியம் கட்டி புதுப் பித்து வருகிறேன். இதுவரை ஒருநாளும் மருத்துவமனை பக்கம் போனது கிடையாது. மருத்துவக் காப்பீடு வசதியைப் பயன்படுத்தியதே கிடையாது. அப்படியென்றால் எனக்கு, இது வீண் செலவுதானே?’ என்று சிலர் நினைக்கலாம்.

சிகிச்சை எதுவும் பெரிதாகத் தேவைப்படாத அளவுக்கு, உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்ல உடல் நலம் இருப்பது பெரிய வரம். ஆனால், ஆரோக்கியமாக இருக்கும்போதே பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் தேவைப்படும்போது, உடனடி யாக மருத்துவக் காப்பீடு எடுத்து, பலன் பெற முடியாது.

இன்றைய சூழலில், பணத்தைச் சேர்ப்பதே கடினம் என்கிறபோது, மருத்துவச் செலவுகள் என்னும் கரையான், நமது சேமிப்பை அரிக்காமல் இருக்க, ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்கிற பாதுகாப்புக் கவசத்தை உடனடியாக எடுத்து, நம் சேமிப்பையும், குடும்பத்தையும் காத்துக்கொள்வது அவசியம்.