நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... லாபத்தை அதிகரிக்கும் வழி!

மியூச்சுவல் ஃபண்ட்... லாபத்தை அதிகரிக்கும் வழி!
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்... லாபத்தை அதிகரிக்கும் வழி!

மியூச்சுவல் ஃபண்ட்... லாபத்தை அதிகரிக்கும் வழி!

நிமேஷ் ஷா, எம்.டி & சி.இ.ஓ, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

ங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருப்பதைப் பார்க்கும் வாடிக்கை யாளர்கள், இனி நமது முதலீடு எப்படி இருக்குமோ என்று நினைக்கிறார்கள். நமது பொருளாதார வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளுக்கு நன்றாக இருக்கும். எனவே,   எதிர்காலம் பற்றிய கவலை தேவையில்லை.  

மியூச்சுவல் ஃபண்ட்... லாபத்தை அதிகரிக்கும் வழி!

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சந்தையானது ஏற்றத்தின் போக்கிலேயே இருந்தது. இந்தக் காலத்தில்  சந்தையில் கால்பதித்த முதலீட்டாளர்கள் இதுவரை நஷ்டமடையவில்லை. 

மியூச்சுவல் ஃபண்ட்... லாபத்தை அதிகரிக்கும் வழி!மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபம் பார்க்க அஸெட் அலோகேஷனைக் கையாள்வது அவசியம். டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்டுகள், லார்ஜ்கேப் ஃபண்டுகள் மற்றும் கடன் சார்ந்த ஃபண்டுகள் இந்த சமயத்தில் முதலீடு செய்ய மூன்று பொருத்தமான தேர்வுகளாக உள்ளன. இவற்றுள் டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் பாதுகாப்பானதாக இருக்கும்.  மற்ற ஃபண்டுகளை விட டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்டுகள், பங்கு மற்றும் கடன் சார்ந்து கவர்ச்சிகரமான வருமானத்தைத் தரவல்லவை.

ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளைவிட லார்ஜ்கேப் ஃபண்டுகள் கவர்ச்சிகரமான பல அம்சங்களைக் கொண்டுள்ளன. மேலும், அதிக ஏற்ற இறக்கம் இல்லாததால், லார்ஜ்கேப் ஃபண்டுகள் மற்ற ஃபண்டுகளைவிடப் பாதுகாப்பானதாகும். எஸ்.ஐ.பி முறையில் இதில் முதலீடு செய்தால், சந்தையின் ஏற்றத்தாழ்வுகளால் அதிகம் பாதிப்பு ஏற்படாது.

 தொகுப்பு: தெ.சு.கவுதமன்