நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

கேள்வி - பதில்

மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

நான் மருத்துவப் படிப்பில் முதுகலை மாணவன். என்னுடைய மருத்துவப் படிப்புக்காக ஊக்கத்தொகையாக மாதம் ரூ.70,000 வீதம் மூன்றாண்டுகளுக்குக் கிடைக்கும். இந்தத் தொகைக்கு வரி கட்ட வேண்டுமா?

அரவிந்த், விழுப்புரம்

எஸ்.பாலாஜி, சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் 

மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

“வருமான வரிச் சட்டம் 10 சப் செக் ஷன் 16-ன்படி, படிப்புச் செலவுக்காக வழங்கப்படும் உதவித் தொகைக்கு வரி கட்டத் தேவையில்லை. எனவே, அந்த வருமானம், கல்வி உதவித் தொகைதான் என்பதை நிரூபித்துவிட்டால் வரி கட்டத் தேவையிருக்காது.”

தவறாகப் பிடிக்கப்பட்ட டி.டி.எஸ் தொகையை பான் கார்டு இல்லாமல் திரும்பப் பெறுவது எப்படி?

கிருஷ்ணகுமார், உடுமலைப்பேட்டை

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் 

மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

“பான் கார்டு இல்லாமல் டி.டி.எஸ் திரும்பப் பெறுவதோ, வருமான வரித் தாக்கல் செய்வதோ இயலாது. தவறான டி.டி.எஸ் என்ற ஒன்றே கிடையாது.  டி.டி.எஸ் பிடிக்கக் கூடாதவர்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அதனைத்  திரும்பப் பெற முடியும். இதற்கு அந்த வாடிக்கையாளருக்கு பான் கார்டு இருக்க வேண்டும். அதை வைத்து  அவர் வருமான வரியைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். 

வாடிக்கையாளரின் பான் கார்டு எண் தவறாகத் தரப்பட்டிருந்தால், அந்த பான் கார்டு எண்ணை முதலில் சரிசெய்ய வேண்டும். அதன்பின் வருமான வரித் தாக்கல் செய்து ரீஃபண்ட் பெற வேண்டும். தவறாக இன்னொருவருக்கு டி.டி.எஸ் பிடிக்கப் பட்டிருந்தாலோ, வருமான வரி கணக்கினைத் தாக்கல் செய்தபின்பே அந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியும்.”

நில விற்பனையின்மூலம் கிடைத்த ரூ.5 லட்சத்தை மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாமென நினைக்கிறேன். சிறிதளவு ரிஸ்க் எடுத்து, அதிக வருமானம் பெற யோசனை கூறவும்.

கிஷோர், திருநெல்வேலி

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்  

மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

“மூன்றாண்டு காலம் மட்டுமே முதலீடு செய்வதற்கு கிரெடிட் ரிஸ்க் டெபிட் ஃபண்டுகள் ஏற்றவை. வங்கி வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டியை விடக் கூடுதலான வருமானத்தை இதில்  எதிர்பார்க்கலாம். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட் மற்றும் டி.எஸ்.பி பிளாக்ராக் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் ஆகியவற்றில் மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.”

பி.எஸ்.இ சென்செக்ஸ் பட்டியலில் இருந்து சிப்லா மற்றும் லூபின் நிறுவனங்கள் நீக்கப்படுமெனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனங்களின் பங்குகள் என்னிடமுள்ளன. இவற்றை நான் என்ன செய்வது? அதேபோல,     என்.எஸ்.இ-யில் அந்த நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்தால் என்ன செய்வது?

வேல்ராஜன், சென்னை

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர்  

“சென்செக்ஸ் என்பது மும்பை பங்குச் சந்தையில் (பி.எஸ்.இ) வியாபார மாகும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட, நன்கு லாபம் ஈட்டும் 30 நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குறியீட்டு எண் ஆகும். இந்த 30 நிறுவனங்களில் லாபம் ஈட்டுவது குறைந்துவரும் நிறுவனங்களை வெளியே எடுத்துவிட்டு, வேறு நன்கு லாபம் ஈட்டும் நிறுவனங்களை அதற்குப் பதிலாக உள்ளே சேர்ப்பார்கள். ஆனால், வெளியே எடுக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் வியாபாரமாகிவரும். நாம் வழக்கம் போல் வாங்கலாம், விற்கலாம்.

தற்போது லாபம் ஈட்டுவது குறைந்துவரும் லூபின் மற்றும் சிப்லா நிறுவனங்களை, சென்செக்ஸ் பட்டியலில் இருந்து வெளியே எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இண்டஸ்இண்ட் பேங்க் மற்றும்     எஸ் பேங்க் பங்குகளைச் சேர்க்கிறார் கள். லூபின் மற்றும் சிப்லா நிறுவனங் களின் பங்குகள் தொடர்ந்து   பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ. ஆகிய இரண்டிலும் வியாபாரமாகும். ஆகவே, இந்தப் பங்குகளை வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் பங்குச் சந்தைகளில் விற்கலாம். சிக்கலில்லை.”

சவால்களை எதிர்கொள்ளும் தீவிர முதலீட்டாளரான நான், யுஎஸ் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்வது நல்ல தேர்வா?

ரஞ்சித், கோயமுத்தூர்

வி.சங்கர், நிதி ஆலோசகர்  

மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

“தீவிர முதலீட்டாளரான நீங்கள், யுஎஸ் ஈக்விட்டி ஃபண்டுகள் குறித்த விவரமறிந்தவராக இருந்தால், அரசு அனுமதிக்கும் காலம்வரை அதில் முதலீடு செய்யலாம். வெளிநாட்டு ஃபண்டு களைவிட, பல இந்திய ஃபண்டுகள் அதிக லாபம் தந்துவரும் நிலையில் இங்குள்ள பங்குகளில் முதலீடு செய்வதே சரியானதாக இருக்கும்.’’

என் வயது 40. ரூ.5 லட்சம் வைப்புநிதி இந்த மாத இறுதியில் முதிர்வடைய உள்ளது. அதனை ஐந்தாண்டு காலத்திற்கு முதலீடு செய்து நல்ல வருமானம் பார்க்க ஏதுவான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் கூறுங்கள்.

லோகேஷ் குமார், செங்கல்பட்டு

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா  

மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

“ஐந்தாண்டு காலத்திற்கு முதலீடு செய்ய ஒரு பரவலான ஃபண்ட் திட்டத் தொகுப்பை வடிவமைத்துக்கொள்ளலாம். சுமார் 70% பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களிலும், மீதி 30% கடன் சந்தை சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யவும். இதை ஒரே சமயத்தில் செய்யாமல் மாதம் ரூ.50,000 என்ற முறையில் பத்து மாதங்களுக்கு எஸ்.டி.பி (மாதா மாதம் ஸ்விட்ச் செய்யும் முறை) மூலம் செய்யவும்.

இதற்கு ஆதித்ய பிர்லா, ரிலையன்ஸ் ஆகிய ஃபண்ட் கம்பெனிகளின் லிக்விட் ஃபண்டுகளில் தலா ரூ.1.75 லட்சம் (மொத்தம் ரூ.3.5 லட்சம்) முதலீடு செய்யவும். பின்னர், மாதம் ரூ.17,500 என்ற வகையில் ஆதித்ய பிர்லா ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், , ரிலையன்ஸ் க்வாண்ட் ஃபண்டுகளில் எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்யவும். மீதமிருக்கும் ரூ.1.5 லட்சத்தை ஹெச்.டி.எஃப்.சி ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

எனது வயது 65. மூட்டு வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறேன். மூட்டு வலிக்காக 8,000 ரூபாய் மதிப்புள்ள மருந்து வாங்கியுள்ளேன். அதுபோக, மாதாமாதம் 4,000 ரூபாய் வரை முதுகு வலி மசாஜ் செய்யச் செலவழிக்கிறேன். வருமான வரிக்கழிவு ரூ.30,000-க்கு இந்த மருத்துவச் செலவுகளைக் கணக்கில் கொள்ளலாமா?

சந்திரமோகன், மணமேல்குடி

கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர்  

மருத்துவப் படிப்பு... ஊக்கத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

“வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, மருத்துவச் செலவுகளுக்கென தனிப்பட்ட வரிக்கழிவு எதுவுமில்லை. உங்களுடைய பெயரில் எடுக்கப் படும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத் தொகையில் (வருமான வரிச்சட்டம் 80D) 30,000 ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம்.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன் 

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.