
நிதித் திட்டம்
நிதித் திட்டமிடல் ஒருவரிடம் இருந்தால், அவர் தன் எதிர்காலப் இலக்குகளை எளிதாக நிறைவேற்ற முடியும். குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலம் என இலக்கு எதுவாக இருந்தாலும், அதனை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனில், நிதித் திட்டமிடல் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

ஒருவரின் சம்பளம் அல்லது வருமானத்தைச் சரியாக முதலீடு செய்வதில், நிர்வகிப்பதில் நிதித் திட்டமிடல் முக்கியப் பங்காற்றுகிறது. நிதித் திட்டமிடல் மேற்கொள்வது மூலம் செலவுகளைக் குறைத்து, முதலீட்டை அதிகப்படுத்துவதுடன், வருமான வரியைக் கணிசமாகக் குறைக்க முடியும். பட்ஜெட் போட்டு செலவு செய்வதன் மூலம் உங்களின் பணவரத்தை எப்போதும் வலிமையாக வைத்துக்கொள்ள முடியும்.
நிதித் திட்டமிடலின் முதல்படியாக, காப்பீட்டுத் திட்டமிடல் இருக்கிறது. அதாவது, வருமானம் ஈட்டும் நபர்களின் பெயரில் ஆயுள் காப்பீடு பாலிசிகள் எடுப்பதும், குடும்ப உறுப்பினர் களின் பெயரில் ஹெல்த் பாலிசிகள் எடுப்பதும் அவசியம்.

ஒருவர் சரியாக நிதித் திட்டமிடல் செய்யும் பட்சத்தில், வாழ்க்கையின் பெரும்பாலான ரிஸ்க்குகளை எளிதாகச் சமாளிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
நாணயம் விகடன் சென்னையில் நடத்தும் நிதித் திட்டமிடல் பயிற்சி வகுப்புக்குப் பதிவு செய்ய: https://bit.ly/2WQEwXS
சி.சரவணன்