பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

டேர்ம் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் எடுக்க சில யோசனைகள்..!

டேர்ம் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டேர்ம் இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ்

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் வாங்கப் படுவதில்லை, விற்கப்படு கின்றன என்பதே சரி. காரணம், பெரும்பாலானோர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை விரும்பி எடுப்ப தில்லை; அதிக கமிஷனுக்காக அவர் யார் யாருக்கோ விற்கப் படுகின்றன. ஆனால், முழுக்க முழுக்க ஆயுள் காப்பீடு கவரேஜ் கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் ஏஜென்டு களால் விற்கப்படுவதில்லை. ஆனால், அதை அனைவரும் எடுப்பது அவசியமாகும்.

த.ராஜன் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

தவிர்க்க வேண்டிய பாலிசிகள்...

பாதுகாப்புக்காகவும் (Protection) செல்வத்தை உருவாக்குவதற்காகவும் (Wealth Creation) காப்பீடு (Insurance) வாங்குவது எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டியதாகும். காரணம், காப்பீடு மற்றும் சேமிப்பு கலந்த எண்டோவ்மென்ட் பாலிசியில் கவரேஜ் என்பது மிகவும் குறைவாக இருக்கும்;

அதே நேரத்தில் அதன் மூலம் கிடைக்கும் வருமான மும் ஆண்டுக்கு சுமார் 5% அளவுக்கே இருக்கும். பங்குச் சந்தை சார்ந்த யூலிப் பாலிசி களில் கட்டணங்கள் மிக அதிகம் என்பதுடன், அதன் வருமானம் முழுக்க முழுக்க பங்குச் சந்தையை சார்ந்திருப்பதால், இந்த பாலிசியையும் தவிர்க்க வேண்டும்.

மிக நீண்ட கால பாலிசி...

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் அவர் பெயரில் அவசியம் எடுக்க வேண்டிய ஆயுள் காப்பீடு பாலிசி டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆகும். இந்த பாலிசியைத் தேவையைப் பொறுத்து 5, 10, 15, 20 ஏன், 30 ஆண்டுகளுக்குக் கூட மிக நீண்ட கால பாலிசி யாக எடுத்துக்கொள்ளலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் எடுக்க சில யோசனைகள்..!

டேர்ம் பிளான் ஏன் சிறந்தது?

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மலிவானவை. ஏனெனில், அவை குறிப்பிட்ட காலத்துக்குள் நிகழும் மரண இழப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கும். காப்பீடு எடுக்கும் நபரின் வயது மற்றும் கவரேஜ் ஆண்டுகள் ஆகியவற்றைப் பொறுத்து பிரீமியம் இருக்கும். பெரும் பாலும், மருத்துவப் பரிசோதனை கட்டாயமாகும். முன்பைவிட அதிக ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் களத்தில் இந்த பாலிசியைத் தருவதால், பிரீமியம் விகிதங் கள் குறைவாக இருக்கின்றன. மேலும், பெரும்பாலான நிறுவனங்கள் 35 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை நீண்ட காலத்துக்கு அதிக கவரேஜுடன் டேர்ம் பாலிசி களை வழங்குகின்றன.

ஆன்லைன் பாலிசி...

டேர்ம் லைஃப் பாலிசி களை ஏஜென்டுகள், ஆன்லைன் அல்லது இந்த பாலிசிகளை சந்தைப்படுத்தி சேவை செய்யும் ஆயுள் காப்பீட்டு ஆலோசகர்கள் மூலமாக எடுக்கலாம். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனில் வாங்குவதன் மூலம் பிரீமியச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும். ஏனெனில், முகவர்கள்/ லைஃப் இன்ஷூரன்ஸ் ஆலோசகர்கள் கமிஷன் கிடையாது என்பதாகும்.

க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் முக்கியம்...

கூடுதலாக, காப்பீட்டு நிறுவனத்தின் ‘க்ளெய்ம் செட்டில்மென்ட்’ (Claim Settlement) விகிதத்தைப் பார்க்க வேண்டும். சுமார் 95 சதவிகிதத்துக்கு மேல் இருப்பது அவசியம். இந்த விவரம், இந்திய காப்பீட்டுத் துறை நெறிமுறைப்படுத்தும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) அமைப்பின் இணையதளத்தில் கிடைக்கும். பாலிசி தாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது கவரேஜ் தொகை நாமினிக்கு வழங்கப்படும். இந்தத் தொகை மொத்தமாக அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் வழங்குவதாக இருக்கும். இந்த விஷயத்தை பாலிசி எடுக்கும்போதே கேட்டிருப்பார்கள். மொத்தத் தொகை வாங்குவது குடும்பத்தினருக்கு லாபமாக இருக்கும்.

அதிக தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ்...

தற்போதைய நிதித் தேவைகள் மட்டுமன்றி, பணவீக்கம், சம்பள அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை முறை தேவைகளையும் கருத்தில்கொண்டு, அதிக தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட வேண்டும். வயதுக்கேற்ப பிரீமியம் அதிகமாகும். பாலிசி எடுக்கும்போது தனிநபர் விபத்துக் காப்பீடு, மற்றும் தீவிர நோய் பாதுகாப்பு (Personal Accident insurance and Critical Illness Coverage) போன்ற கூடுதல் நன்மைகள் அளிக்கும் துணை பாலிசிகளை (Riders) தேவையின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம்.

டேர்ம் பாலிசி கவரேஜ் தொகையை குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு தேவைக்கேற்ப அதிகரிக்கவோ, குறைக்கும் வசதியுடனோ எடுப்பது நல்லது. பொது வாக, ஒவ்வொரு 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டு களுக்கு ஒரு முறை காப்பீட்டுத் தேவைகளை மதிப்பாய்வு செய்வது சிறந்தது ஆகும். டேர்ம் பாலிசி களின் கவரேஜ் தொகையைப் பிரித்து சில பாலிசி களாக எடுத்துக்கொள்வது நல்லது. காலப்போக்கில் நிதிக் கடமைகள் குறையும்பட்சத்தில் சில பாலிசிகளை சுலபமாக நிறுத்த இந்த உத்தி உதவும்.