தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மருத்துவக் காப்பீட்டு இழப்பீடு உயர்வு... பாலிசிதாரர்களுக்கு என்ன பாதிப்பு?

இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டு (Health Insurance) நிறுவனங்கள் வழங்கிய இழப்பீடு அளவு கணிசமாக அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்திய காப்பீட்டு மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ வெளியிட்டு உள்ள புள்ளி விவரங்களின்படி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கிய க்ளெய்ம் விகிதம் (Incurred Claim Ratio - ICR) 2021-22-ம் ஆண்டில் 105.68 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

இழப்பீடு விகிதம்...

மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் ரூ.100 பிரீமியம் வசூல் செய்துள்ள நிலையில், அவை வழங்கியுள்ள இழப்பீடு ரூ.106-ஆக இருக்கிறது. இது காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பாக இருந்தாலும் பாலிசிதாரர்களுக்கு லாபம் தான்.

பொதுவாக, 100 சதவிகிதத் துக்குக்கீழ் இழப்பீடு தொகை இருந்தால், அந்தக் காப்பீட்டு நிறுவனம் லாபத்தில் இருக்கிறது என அர்த்தம். மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் இழப்பீட்டு விகிதம் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக் கிறதோ, அந்தளவுக்கு அந்த நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவதாகச் சொல்லலாம்.உதாரணமாக, ஒரு நிறுவனம் ரூ.100 பிரீமியம் வசூலிக்கிறது. ஆனால், ரூ.80-ஐ இழப்பீடாக வழங்குகிறது எனில், அதன் லாப விகிதம் 20% ஆகும்.இழப்பீட்டுத் தொகை, பிரீமி யத்தைவிட சுமார் 15% - 20% குறைவாக இருந்தால்தான் நிறுவனங்கள் நிலைத்து நிற்க முடியும்.

2021-22-ம் ஆண்டில் மருத்துவக் காப்பீட்டு பாலிசி களை வழங்கும் தனியார் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மருத்துவக் காப்பீட்டு இழப்பீடு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

மருத்துவக் காப்பீட்டு இழப்பீடு உயர்வு... பாலிசிதாரர்களுக்கு 
என்ன பாதிப்பு?

ரூ.63,361 கோடி இழப்பீடு...

தனியார் நிறுவனங்களில் 16% உயர்ந்து 94.66 சதவிகிதமாகவும், பொதுத்துறை நிறுவனங்களில் 25% உயர்ந்து, 126.80 சதவிகித மாகவும் அதிகரித்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளில் க்ளெய்ம் விகிதம் 89.51 சதவிகிதமாக இருந்தது, 2021-22-ல் 105.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்கு மொத்தம் ரூ.63,361 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டு இழப்பீடு உயர்வு... பாலிசிதாரர்களுக்கு 
என்ன பாதிப்பு?

மருத்துவக் காப்பீடு அளிக்கும் நிறுவனங்கள் வசூலிக்கும் பிரீமியத்தைவிட அதிக இழப்பீடு வழங்குவது அவற்றுக்கு நஷ்டமே. இதன் விளைவாக, காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியத்தை அடுத்து வரும் ஆண்டில் அதிகரிக்கும். இது புதிதாக பாலிசி எடுப்பவர்கள் மற்றும் பாலிசியைப் புதுப்பிப்பவர் களைக் கட்டாயம் பாதிக்கும்.