ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் நாட்டிலேயே முதன்முறையாக இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணத்தில் (e₹) இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகையாக ஏற்கப்படும் என்று கூறியுள்ளது.
e₹ என்றால் என்ன?
e₹ என்பது டிஜிட்டல் டோக்கன் ஆகும். உதாரணமாக, நாம் ஒருவருக்கு ரூ.100 தர வேண்டும் என்றால், அதே மதிப்புடைய டிஜிட்டல் டோக்கனை அவருக்குக் கட்டணமாகச் செலுத்தலாம். இதில் இந்த டிஜிட்டல் டோக்கன் என்பது பணமாகவோ, காசாகவோ இல்லாமல், அதற்கு ஒத்த மதிப்புள்ள டிஜிட்டல் கரன்சி ஆகும்.

இந்த e₹ இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது ஆகும். மேலும், இந்த டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்தும்போது ஹவாலா போன்ற சட்டத்துக்குப் புறம்பான செயல்களைத் தவிர்க்க முடியும்.
ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் தற்போது தங்கள் நிறுவனத்தில் வாங்கப்படும் இன்ஷூரன்ஸ்களுக்கான பிரீமியம் தொகையை e₹-வே செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. மேலும், இந்தப் பணப்பரிமாற்றத்துக்காக இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் `Yes Bank' உடன் கைகோத்துள்ளது. இந்த டிஜிட்டல் பணம் எந்தவொரு வங்கியுடையதாக இருந்தாலும் ஏற்றக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.