தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆயுள் காப்பீடு... புதிதாக இணைந்த 2.22 லட்சம் ஏஜென்டுகள்..!

ஆயுள் காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆயுள் காப்பீடு

முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி 20,893 புதிய ஏஜென்டுகளைப் பணியில் சேர்த்துள்ளது!

ஆகாஷ்

புதிய வருமான வரி முறையில் ஆயுள் காப்பீடு உட்பட எதற்கும் வரிச் சலுகை இல்லை என்று சொல்லப்பட்டாலும்கூட, புதிதாக ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுப்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தத் துறையில் புதிதாக சேர்க்கப்படும் ஏஜென்டு களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித் திருக்கிறது. கடந்த 2022-23-ம் ஆண்டில் மட்டும் பல்வேறு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 2.22 லட்சம் புதிய ஏஜென்டுகள் பணியில் இணைந்திருப்பதாக லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் அமைப்பின் தகவல்கள் சொல் கின்றன.

கடந்த 2022-23-ம் ஆண்டில் நம் நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் சேர்த்து 2.02 லட்சம் புதிய இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளை நியமித்திருக்கும் நிலையில், முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி 20,893 புதிய ஏஜென்டுகளைப் பணியில் சேர்த்திருக்கிறது. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிலேயே எல்.ஐ.சி-யில்தான் மிக அதிகமான ஏஜென்டுகள் அதாவது, 13,47,325 ஏஜென்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் காப்பீடு... புதிதாக இணைந்த 2.22 லட்சம் ஏஜென்டுகள்..!

கடந்த 2022 - 2023 நிதி ஆண்டில் ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் 63,993 புதிய ஏஜென்டுகளையும், எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் 62,717 புதிய ஏஜென்டுகளையும், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் 29,773 புதிய ஏஜென்டுகளையும், டாடா ஏ.ஐ.ஏ லைஃப் இன்ஷூரன்ஸ் 29,491 புதிய ஏஜென்டுகளையும் பணியில் சேர்த்துள்ளன.

ஆனால், எக்ஸைட் லைஃப் இன்ஷூரன்ஸ், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ், கனரா ஹெச்.எஸ்.பி.சி லைஃப் இன்ஷூரன்ஸ், ஏகான் லைஃப் இன்ஷூரன்ஸ், சஹாரா இந்தியா லைஃப் இன்ஷூரன்ஸ், ஶ்ரீராம் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி, அவிவா லைஃப் இன்ஷூரன்ஸ், ஏஜியஸ் ஃபெடரல் லைஃப் இன்ஷூரன்ஸ், ஆதித்ய பிர்லா லைஃப் இன்ஷூரன்ஸ் ஆகிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் புதிதாக எந்த ஏஜென்டையும் சேர்க்கவில்லை. மாறாக, இந்த நிறுவனங்களில் இருந்து பலர் பணியிலிருந்து விலகியுள்ளனர்!