நடப்பு
Published:Updated:

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவும் டேர்ம் இன்ஷூரன்ஸ்! - வருகிறது சரல் ஜீவன் பீமா!

சரல் ஜீவன் பீமா
பிரீமியம் ஸ்டோரி
News
சரல் ஜீவன் பீமா

இந்த பாலிசியில் 70 வயது வரை கவரேஜ் கிடைக்கும்.தற்கொலை செய்து கொண்டால், க்ளெய்ம் கிடைக்காது!

டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, தற்போது அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் தனித்தன்மை மற்றும் சிறப்புத்தன்மையுடன்கூடிய திட்டங்களை வடிவமைத்துள்ளன. இதனால் தனிநபர் ஒருவர் எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் டேர்ம் பாலிசியை எடுப்பது என்று குழம்பிப்போகின்றனர்.

இதை நன்கு புரிந்துகொண்ட ஐ.ஆர்.டி.ஏ.ஐ, கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், ‘‘அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் 2021 ஜனவரி 1-ம் தேதி முதல் ‘சரல் ஜீவன் பீமா’ எனப்படும் எளிய தனிநபர் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைக் கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும்’’ என்று சொல்லியுள்ளது.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவும் டேர்ம் இன்ஷூரன்ஸ்! - வருகிறது சரல் ஜீவன் பீமா!

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் குறைந்த வருமானப் பிரிவுக்கான சிறிய கவரேஜுடன் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியைக் கொண்டு வந்தால், இது நிச்சயமாக சிறிய அளவில் வருமானம் ஈட்டும் நபரும் இனி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு வசதியாக இருக்கும். இது தொடர்பாக அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தாங்கள் கொண்டுவரவிருக்கும் ‘சரல் ஜீவன் பீமா’ பாலிசி குறித்த விவரங்களை 2020 டிசம்பர் 31-க்குள் தாக்கல் செய்து ஒப்புதல் பெறலாம் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவுறுத்தியுள்ளது.

சரல் ஜீவன் பீமா – சில குறிப்புகள்

1. சரல் ஜீவன் பீமா தனிநபருக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி ஆகும்.

2. பாலிசிதாரர் பாலிசி காலத்துக்குள் உயிரிழக்கும் தருவாயில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை பாலிசிதாரரின் குடும்பத்துக்கு மொத்தமாக வழங்க வேண்டும்.

3. தற்கொலை செய்துகொண்டால், இந்த பாலிசியில் க்ளெய்ம் கிடைக்காது.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவும் டேர்ம் இன்ஷூரன்ஸ்! - வருகிறது சரல் ஜீவன் பீமா!

4. பாலிசியில் சேருவதற்கான குறைந்தபட்ச வயது 18; அதிகபட்ச வயது 65. பாலிசி காலம் 5 முதல் 40 ஆண்டுகள் வரை.

5. ஒருவரின் 70 வயது வரைக்கும் கவரேஜ் கிடைக்கும்.

6. கவரேஜ் குறைந்தபட்சமாக ரூ.5 லட்சமாக இருக்கும். அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை இருக்கும். மேலும், எந்தவொரு நிபந்தனையையும் மாற்றாமல், ரூ.25 லட்சத்துக்குமேல் கவரேஜ் அளிக்க இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அனுமதி அளித்திருக்கிறது.

7. தொடர் பிரீமியம், 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் காலம் மற்றும் ஒற்றை பிரீமியம் ஆகிய முறைகளில் இந்த பாலிசியில் பிரீமியம் கட்டலாம்.

8. பாலிசிக் காலம் முழுவதும் தொடர் பிரீமியம், ஒற்றை பிரீமியம் செலுத்துதல் அல்லது வரையறுக்கப்பட்ட பிரீமியம் (5, 10 ஆண்டுகள்) ஆகிய விருப்பங்களிலிருந்து தனிநபர்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

இறப்பு நன்மை

பாலிசிதாரர் உயிரிழக்கும் தருவாயில், வாரிசுகளுக்கு வழங்கப்படும் தொகை, கீழ்க்கண்டவற்றில் எது அதிகமோ, அதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவும் டேர்ம் இன்ஷூரன்ஸ்! - வருகிறது சரல் ஜீவன் பீமா!

1. வருட பிரீமியம் மற்றும் வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் பாலிசிகளுக்கு, ஆண்டு பிரீமியத்தின் 10 மடங்கு.

2. இறந்த தேதியின்படி, செலுத்தப்படும் அனைத்து பிரீமியங்களில் 105%.

3. காப்பீடு எடுக்கும் தருவாயில் கூறிய மொத்தக் காப்பீட்டுத் தொகை.

மேலும், இது டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம் என்பதால், பாலிசியின் முதிர்வுத் தொகை எதுவும் இல்லை. பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 45 நாள்கள் வரை காத்திருக்கும் காலம் என்பதால், இந்த 45 நாள்களுக்குள் பாலிசிதாரர் விபத்து காரணமாக உயிரிழந்தால் மட்டுமே காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

சரல் ஜீவன் பீமா பாலிசியில் ரைடர் ஆக விபத்தால் உண்டாகும் நிரந்தர ஊனம் இருக்கும். ஏழை எளிய மக்களும் எடுக்கும் வகையில் இந்த பாலிசி இருக்கும் என்பதால், அதிகம் பேர் இந்த பாலிசி எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.