Published:Updated:

ஹிண்டன்பர்க் மீது அமெரிக்காவில் `கிரிமினல்' வழக்கு? சமூக வலைதளங்களில் பரவுவது வதந்தியா... உண்மையா?

ஹிண்டன்பர்க்
News
ஹிண்டன்பர்க்

ஹிண்டன்பர்க் இதுவரை 20க்கும் மேலான நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறது. அவற்றில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஹிண்டன்பர்க் மீது வழக்கு தொடுத்துள்ளன. ஒன்று சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், இன்னொன்று ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற பாலிவுட் சினிமா நிறுவனம்.

Published:Updated:

ஹிண்டன்பர்க் மீது அமெரிக்காவில் `கிரிமினல்' வழக்கு? சமூக வலைதளங்களில் பரவுவது வதந்தியா... உண்மையா?

ஹிண்டன்பர்க் இதுவரை 20க்கும் மேலான நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறது. அவற்றில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஹிண்டன்பர்க் மீது வழக்கு தொடுத்துள்ளன. ஒன்று சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், இன்னொன்று ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற பாலிவுட் சினிமா நிறுவனம்.

ஹிண்டன்பர்க்
News
ஹிண்டன்பர்க்

அதானி- ஹிண்டன்பர்க் சர்ச்சை விவகாரம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. அதானி குழும நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையினால் அதானி குழுமத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்திலிருந்து 22ம் இடத்தையும் தாண்டி தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பும் விதமாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதாவது ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது அமெரிக்காவில் 3 'கிரிமினல் வழக்குகள்' இருப்பதாகவும், அது தொடர்பான விசாரணையை அந்நிறுவனம் சந்தித்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

நேட் ஆண்டர்சன், அதானி
நேட் ஆண்டர்சன், அதானி

அதுமட்டுமல்லாமல் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் குறித்து ஆராய்ச்சி அறிக்கைகள் வெளியிட ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

அதானி குழுமத்தின் மீதான அறிக்கையை வெளியிட்டு இந்தியப் பங்குச் சந்தையையும் முதலீட்டாளர்களையும் கலங்கடித்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் 'இந்தியாவின் வளர்ச்சி மீது தாக்குதல் நடத்துகிறது' என்று அதானி தரப்பு குற்றச்சாட்டு வைத்தது. மேலும் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த வழக்கு விசாரணைகளையும் சந்திக்க ஹிண்டன்பர்க் தயார் என அந்நிறுவனம் கூறியிருந்தது.

ஆனால் சமூக வலைதளங்களில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக உலாவரும் செய்திகள் உண்மையா? ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது அமெரிக்காவில் உள்ள வழக்குகள் என்னென்ன? ஆகியவற்றைப் பற்றி அலசினோம்.

அதானி - ஹிண்டன்பர்க்
அதானி - ஹிண்டன்பர்க்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை ஆராய்ந்து, அவற்றின் மதிப்பீட்டில் இருக்கும் முரண்களை அடிப்படையாக வைத்து 'ஷார்ட் செல்லிங்' மூலம் லாபம் பார்க்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன. அப்படியான பல நிறுவனங்களில் ஒன்றுதான் ஹிண்டன்பர்க்.

2017ல் தொடங்கப்பட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் இதுவரை 20க்கும் மேலான நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறது. அவற்றில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஹிண்டன்பர்க் மீது வழக்கு தொடுத்துள்ளன. ஒன்று சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், இன்னொன்று ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற பாலிவுட் சினிமா நிறுவனம். இந்த வழக்குகளும் வெறும் அவதூறு வழக்குகள்தான். அந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் செயல்பாடுகளையும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன என்பது உண்மைதான். ஆனால், இதுநாள் வரையில் ஹீண்டன்பர்க் நிறுவனம் மீதோ, அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் மீதோ முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அவர்கள் மீது எந்த கிரிமினல் குற்றங்களும் இல்லை என்பதே உண்மை.

கெளதம் அதானி
கெளதம் அதானி

ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்தின் மீது பல்வேறு அக்கவுன்டிங் மோசடிகள், செயற்கையாக பங்கு விலைகளை உயர்த்தும் பங்குச் சந்தை மோசடிகள், கடன் மோசடிகள் உள்ளிட்டவற்றை அடுக்கியது. இது அதானி குழுமத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பங்குகளின் மதிப்பை அதள பாதாளத்துக்குக் கொண்டுவந்தது. ஒரு மாதம் முன்புவரை பல மடங்கு உச்சத்தில் இருந்த அதானி குழுமப் பங்குகள் சரசரவென சரிந்து பெரும் நஷ்டத்தை அடைந்தன. அதுமட்டுமல்லாமல் அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் அறிக்கை அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இதை திசைதிருப்பவே இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என்பதுதான் இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.