Published:Updated:

சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு? #DoubtOfCommonMan

Representational Image
News
Representational Image

அரசாங்க வரைமுறையின்படி சேவைக் கட்டணம் என்பது தானாக அளிப்பது, கட்டாயப்படுத்தக்கூடாத ஒன்று.

Published:Updated:

சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு? #DoubtOfCommonMan

அரசாங்க வரைமுறையின்படி சேவைக் கட்டணம் என்பது தானாக அளிப்பது, கட்டாயப்படுத்தக்கூடாத ஒன்று.

Representational Image
News
Representational Image
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``பெரும்பாலான கடைகளில் பொருள்களை வாங்கும்போது, அதற்கான தொகையை கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் முறைக்கு மக்கள் வெகுவாக மாறி வருகின்றனர். அப்படியிருக்க... கடைகளில் கார்டுகளுக்கு 1 சதவிகிதம் அல்லது 2 சதவிகிதம் சர்வீஸ் சார்ஜ் என்று வசூல் செய்கின்றனர். இதுபோன்ற கட்டண விதிமுறைகள் சட்டத்தில் உள்ளனவா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் செந்தில் நாயகம். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
DoubtOfCommonMan
DoubtOfCommonMan

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என முழுக்கவே நாம் டிஜிட்டலுக்கு பழகிவிட்டோம். நம்முடைய பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகள் கார்டுகளின் வழியாகத்தான் நடக்கின்றன.

Service Tax (சேவை வரி) என்பது தற்போது GST என்ற முறையில் பொருள் சேவை வரியாக அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது. ஆனால், Service Charge (சேவைக் கட்டணம்) என்பது அரசாங்கத்தால் வசூலிக்கப்படுவது அல்ல. நீங்கள் தங்கியிருந்த விடுதிக்கோ, சாப்பிட்ட உணவகத்துக்கோ வேறு எங்காவது நீங்களாக, நீங்கள் பயனடைந்த சேவைக்கு மனமுவந்து பணம் தந்தால் அது Tips (To insure prompt service) ஆகும்.

Card Transaction
Card Transaction
Pixabay

இதுவே கடை, விடுதி, உணவகம், மருத்துவமனை போன்ற பல இடங்களில் தங்களது சேவைக்காக `சர்வீஸ் சார்ஜ்' என்று தனியாக வாங்கினால் அது சேவைக்கட்டணம் எனப்படுகிறது. இதை அரசாங்கம் வசூலிக்கவில்லை. நீங்கள் சேவை பெற்ற நிறுவனங்கள் அவர்களாகவே உங்களிடமிருந்து வசூலிப்பவை. அரசாங்க வரைமுறையின்படி சேவைக் கட்டணம் என்பது தானாக அளிப்பது, கட்டாயப்படுத்தக்கூடாத ஒன்று. கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் போன்ற நவீன பண பரிவர்த்தனைகள் தவிர்க்க முடியாத ஒன்று.

பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைக்கு வெகுவாக மாறிவருகின்றனர். ஆன்லைன் பரிவர்த்தனைகளை அரசும் ஊக்குவிக்கிறது. பொதுமக்களிடம் இதுபோன்று சேவைக் கட்டணங்களை வசூலிப்பதன் மூலம் மீண்டும் அவர்களை நேரடி பணப்பரிவர்த்தனை முறைக்குத் தள்ளிவிடும் வாய்ப்பும் உள்ளது.

இதுகுறித்து ஆடிட்டர் சின்னசாமி கணேசனிடம் பேசினோம். ``டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் காசற்ற பணப்பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியபோதே, இந்திய அரசு சில புதிய நடைமுறைகளையும் நடைமுறைப்படுத்தியது. அவற்றில் ஒன்று, 2,000 ரூபாய் வரை பணப்பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் அந்தப் பரிவர்த்தனைக்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வழங்கிய வங்கியோ, அந்த டிரான்சாக்‌ஷனை ப்ராசஸ் செய்யும் நிறுவனங்களோ, வர்த்தக நிறுவனங்களோ, வாடிக்கையாளரிடம் எந்தக் கட்டணமும் கண்டிப்பாக வசூலிக்கக் கூடாது. இந்திய அரசு அதற்கான சேவைக் கட்டண இழப்பை வங்கிகளுக்கும் சேவை நிறுவனங்களுக்கும் வழங்கும். இதன் அடிப்படையில், வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் எந்தச் சேவைக் கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது.

இது தவறானது மட்டுமன்றி மற்றும் சட்ட விதிமீறலும் கூட.
சின்னசாமி கணேசன்
சின்னசாமி கணேசன்

குறிப்பிட்ட கட்டணங்களை வசூலிப்பது பொருளை விற்கும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே. அவர்கள் வங்கிக்குக் கொடுக்க வேண்டிய கட்டணம் என்று முறையின்றி நம்மிடம் வசூலிப்பதுடன், இதற்குக் காரணம் அரசே என்ற தவறான எண்ணத்தையும் நம் மனதில் உள்நோக்கத்துடன் விதைக்கிறார்கள். இது தவறானது மட்டுமன்றி மற்றும் சட்ட விதிமீறலும் கூட. நுகர்வோர் விழிப்புணர்வுடன் கேள்வி கேட்கத் தொடங்கினால் இது அறவே நீங்க வாய்ப்புள்ளது.

நாம் வாய்மூடி மௌனித்தால் இந்தச் சுரண்டல்கள் தொடரவே செய்யும். சட்டத்தைச் செயலாக்கும் பொறுப்பு நம் எல்லாரிடமும் உள்ளது. நாம் முதலில் தெளிய வேண்டும் என்பது என் கருத்து.

DoubtOfCommonMan
DoubtOfCommonMan

 ஒருவேளை ரூபாய் 2,000/- மேலான பரிவர்த்தனையாக இருப்பின், அதற்கான சேவைக்கட்டணத்தை, பொருளை விற்கும் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும். நுகர்வோர் மேல் அதைத் திணிக்க சட்டத்தில் இடமில்லை. தங்களது லாபம் குறையக் கூடாது என்பதற்காக வாடிக்கையாளரிடம் அந்தக் கட்டணத்தையும் வசூலிக்க முயல்கிறார்கள். பலர் தங்கள் நடைமுறையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள். மற்ற வணிகர்கள் விரைவில் மாறுவார்கள் என்று நம்புவோம்" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!

DoubtOfCommonMan
DoubtOfCommonMan