Published:Updated:

நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட ஆயில் பாண்டுகள்; பெட்ரோல் விலையைக் குறைக்காததற்கு இதுதான் காரணமா?

Finance minister Nirmala Sitharaman
News
Finance minister Nirmala Sitharaman ( Photo: Twitter / PIB_India )

தமிழக அரசு வரியைக் குறைத்தது போல மத்திய அரசும் வரியைக் குறைக்க வேண்டும் என்பது பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Published:Updated:

நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட ஆயில் பாண்டுகள்; பெட்ரோல் விலையைக் குறைக்காததற்கு இதுதான் காரணமா?

தமிழக அரசு வரியைக் குறைத்தது போல மத்திய அரசும் வரியைக் குறைக்க வேண்டும் என்பது பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Finance minister Nirmala Sitharaman
News
Finance minister Nirmala Sitharaman ( Photo: Twitter / PIB_India )

பெட்ரோல் விலை இந்தியாவின் பல இடங்களில் ரூ.105-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. டீசல் விலையும் நூறு ரூபாயைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறது. இந்நிலையில்தான் தமிழக அரசு, தனது பட்ஜெட்டில் பெட்ரோல் விலையை மட்டும் மூன்று ரூபாய் குறைப்பதாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக மக்கள் மட்டும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு அதற்கு விதிக்கப்படும் அதிக வரியே காரணமாக உள்ளது. சுண்டக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்ற சொலவடை நமது கிராமங்களில் உள்ளது. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக பெட்ரோல், டீசல் விலை உள்ளது.

தமிழக அரசு வரியைக் குறைத்தது போல மத்திய அரசும் வரியைக் குறைக்க வேண்டும் என்பது பெருவாரியான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Finance Minister Nirmala Sitharaman
Finance Minister Nirmala Sitharaman
Photo: AP

இந்த எதிர்பார்ப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அதிக வரி விதிக்கப்படுவதற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஆயில் பாண்டுகளை அப்போதைய ஆளும் காங்கிரஸ் அரசு வெளியிட்டதே காரணம் என்று தெரிவித்துள்ளார். அந்த ஆயில் பாண்டுகளுக்கு மத்திய அரசு 2026-ம் ஆண்டு வரை வட்டி செலுத்த வேண்டியிருப்பதால் வரி குறைப்பு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு ஆயில் பாண்டுகள் என்றால் என்ன, அது எதற்காக வெளியிடப்பட்டது, அதற்கு மத்திய அரசு செலுத்தும் வட்டி விவரங்களை விவரமாகப் பார்க்கலாம்.

ஆயில் பாண்டுகள் என்றால் என்ன?

2005-10 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி வந்தது. அந்த மானியத் தொகைக்கு ஈடாக எண்ணெய் நிறுவனங்களுக்கு 2005-12 ஆண்டுகளில் 1,44,000 கோடி ரூபாய்க்கு ஆயில் பாண்டுகள் வழங்கப்பட்டன. இந்த பாண்டுகளுக்கு மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் வட்டித் தொகையுடன் சேர்த்து அசலை வழங்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 2026-ம் ஆண்டு வரை மத்திய அரசு இந்த வட்டித் தொகையை வழங்க வேண்டும்.

இந்த ஆயில் பாண்டுகளில் தற்போதைய நிலுவைத் தொகை 2020-21 நிலவரப்படி ரூ.1,31,000 கோடி ஆகும். இதற்காக ஆண்டுதோறும் மத்திய அரசு ரூ.9,900 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தி வருகிறது.

PM Narendra Modi
PM Narendra Modi

தற்போது கலால் வரியாக மத்திய அரசுக்கு எவ்வளவு தொகை கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம்.

2020 - 21 காலகட்டத்தில் மட்டும் மத்திய அரசுக்கு ரூ. 3,89,000 கோடி ரூபாய் கலால் வரியாக மத்திய அரசுக்குக் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வரியானது 2015-16 காலகட்டத்தில் ரூ.1,16,000 கோடியாக மட்டுமே இருந்தது. சென்ற 5 ஆண்டுகளில் மட்டும் கலால் வரி மூன்று மடங்குக்கு மேல் அதிகமாக அரசுக்கு கிடைத்து வருகிறது. அவ்வாறு கிடைக்கும் வரியோடு ஒப்பிட்டால் தற்போது செலுத்த வேண்டிய வட்டித் தொகையான ரூ.9,900 கோடி என்பது மிகவும் குறைவானதாக உள்ளது.

Petrol
Petrol
Photo: Vikatan / K.Rajesekaran

மேலும், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் வாங்கிய கடனை அசல் உடன் சேர்த்து 2025 - 26 காலகட்டத்துக்குள் செலுத்த வேண்டும். தற்போது உள்ள மொத்த நிலுவைத் தொகையான ரூ.1,31,000 கோடி என்பது மொத்தம் வசூலாகும் ஒரு வருட வரித் தொகையில் வெறும் 35% குறைவு ஆகும்.

எனவே இன்னும் முந்தைய அரசாங்கள் மீதே பழிபோட்டு தப்பித்துக்கொள்ளாமல், இனியாவது மக்களின் சுமையைக் குறைக்க உருப்படியாக ஏதேனும் செய்யவேண்டும்.