Published:Updated:

மலையாள சினிமாவில் ரூ.225 கோடி கறுப்புப் பணம் - வருமான வரித் துறை அதிர்ச்சி தகவல்!

வருமான வரி
News
வருமான வரி

மலையாள சினிமாக்களில் ரூ.225 கோடி அளவுக்குக் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தக் கறுப்புப் பணத்தின் காரணமாக வருமான வரித் துறைக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

மலையாள சினிமாவில் ரூ.225 கோடி கறுப்புப் பணம் - வருமான வரித் துறை அதிர்ச்சி தகவல்!

மலையாள சினிமாக்களில் ரூ.225 கோடி அளவுக்குக் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தக் கறுப்புப் பணத்தின் காரணமாக வருமான வரித் துறைக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி
News
வருமான வரி

தரமான சினிமாக்களுக்குப் பெயர் பெற்றது மலையாள சினிமா. ஆனால், தற்போது மலையாள சினிமா துறைக்கு எதிராக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ரூ.225 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் மலையாள சினிமாக்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களான ஆண்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் நடிகரும் தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உள்ளிட்ட பல சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் திடீரென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கறுப்புப் பணம்
கறுப்புப் பணம்

அதன்படி மலையாள சினிமாக்களில் ரூ.225 கோடி அளவுக்குக் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தக் கறுப்புப் பணத்தின் காரணமாக வருமான வரித் துறைக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கறுப்புப் பண முதலீடு மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள் மூலம் பல தயாரிப்பாளர்கள் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணம்
கறுப்புப் பணம்

மேலும், மலையாள திரைப்படங்களை வெளிநாடுகளில் விநியோகிப்பதிலும் பல மோசடிகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வருமான வரித் துறையினர் சோதனையில் சிக்கிய ஆவணங்களின்படி பலரின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்துவருகின்றனர். இதுதொடர்பான விசாரணை விவரங்கள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள சினிமாக்களில் வருமான வரி ஏய்ப்பு, கறுப்புப் பண முதலீடு போன்ற முறைகேடுகள் நடந்திருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.