Published:Updated:

கரூர் வைஸ்யா வங்கி: 3-ம் காலாண்டில் நிகர லாபம் 67% உயர்வு!

கரூர் வைஸ்யா வங்கி
News
கரூர் வைஸ்யா வங்கி

கடந்த ஆண்டு ரூ.460 கோடியாக இருந்த நிகர லாபம் 67% அதிகரித்து ரூ.768 கோடியாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ.1,189 கோடியிலிருந்து தற்போது ரூ.1,737 கோடியாக உயர்ந்துள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி கடந்த 2022 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்ட அறிக்கையில்,

``கரூர் வைஸ்யா வங்கியின் இருப்பு நிலை (balance sheet) அளவு கடந்த 2021 டிசம்பர் 31-ல் ரூ.77,612 கோடியாக இருந்தது. இது 14.7% வளர்ச்சி பெற்று 2022, டிச.31-ல் ரூ.89,013 கோடியாக உள்ளது.

கடந்த 2021 டிசம்பர் 31-ல் மொத்த வணிகம் ரூ.1,22,664 கோடியிலிருந்து தற்போது ரூ.1,39,062 கோடியாக உயர்ந்துள்ளது. இது 13.4% வளர்ச்சியாகும்.

கரூர் வைஸ்யா வங்கி: 3-ம் காலாண்டில் நிகர லாபம் 67% உயர்வு!

மேலும் கடந்த ஆண்டு ரூ.460 கோடியாக இருந்த நிகர லாபம் 67% அதிகரித்து ரூ.768 கோடியாக உயர்ந்துள்ளது. முன் வழங்கல் இயக்க லாபம் ரூ.1,189 கோடியிலிருந்து தற்போது ரூ.1,737 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் நிகர வட்டி வருவாய் 22.5% அதிகரித்து, ரூ.2,005 கோடியிலிருந்து ரூ.2,456 கோடியாக உயர்ந்துள்ளது.

நிகர வட்டி வரம்பு 3.66 %-ல் இருந்து 42 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 4.08% -ஆக உள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூ.1,380 கோடியாக இருந்த செயல்பாட்டுச் செலவுகள் ரூ.1,477 கோடியாக அதிகரித்துள்ளது. லாபம் மற்றும் சொத்து தரத்தின் அடிப்படையில் வங்கி ஆரோக்கியமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது" என்று கரூர் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.