Published:Updated:

வங்கிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் தொழிலதிபர்கள் பட்டியல்; அம்பானி, அதானி எங்கே?

மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி
News
மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி

வங்கிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் தலைவலி மக்களுக்குத்தான் என்பதைப் பலமுறை வரலாறு நமக்கு நிரூபித்திருக்கிறது. கிரீஸ் முதல் பக்கத்தில் இருக்கும் இலங்கை வரை பல உதாரணங்கள் அதற்கு உண்டு. காரணம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் வங்கிகள்தான் மையமாக இருக்கின்றன.

Published:Updated:

வங்கிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் தொழிலதிபர்கள் பட்டியல்; அம்பானி, அதானி எங்கே?

வங்கிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் தலைவலி மக்களுக்குத்தான் என்பதைப் பலமுறை வரலாறு நமக்கு நிரூபித்திருக்கிறது. கிரீஸ் முதல் பக்கத்தில் இருக்கும் இலங்கை வரை பல உதாரணங்கள் அதற்கு உண்டு. காரணம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் வங்கிகள்தான் மையமாக இருக்கின்றன.

மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி
News
மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி

ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற கொடிய நோய்கள் மக்களை ஆட்டிப்படைத்தன. அந்த வகையில் 21ம் நூற்றாண்டில் மக்களை ஆட்டிப்படைக்கிற நோய் எதுவென்று பார்த்தால் அது 'கடன்' நோய்தான். சாமானியர்களில் ஆரம்பித்து பெரும்பணக்காரர்கள் வரைக்கும் இந்த நோய் பிடித்து ஆட்டுவிக்கிறது. வங்கிகளையும் சேர்த்துத்தான்.

வங்கிகள் வழங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன் திரும்ப வராமல் இருக்கிறது. இதில் வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் முதல் 50 தொழிலதிபர்கள் பட்டியலை நாடளுமன்றத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த 50 தொழிலதிபர்கள் மட்டுமே ரூ.92,570 கோடி கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும். இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராத் தெரிவித்தார்.

பகவத் கராத்
பகவத் கராத்

சாமான்ய மக்கள் வங்கியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்த தவறினால் எப்படியெல்லாம் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதைத் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வெட்டவெளிச்சம் போட்டு காட்டுகின்றன. ஆனால், பல ஆயிரம் கோடிகளை மிக எளிதாக வங்கிகளில் கடனாக வாங்கிவிட்டு, அவற்றை இஷ்டத்துக்கு செலவு செய்துவிட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்யும் தொழிலதிபர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைத் தடுக்க இந்த அரசால், ரிசர்வ் வங்கியால் முடியவில்லை.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வங்கிகள் இதுபோன்ற தொழிலதிபர்களுக்கும், அவர்களின் நிறுவனங்களுக்கும் கொடுத்த கடனில் ரூ.11.17 லட்சம் கோடி கடன்களைத் தள்ளிவைத்துள்ளது (WriteOff).

வங்கிகளில் கடன் மோசடி செய்தவர்களின் எண்ணிக்கை 2017 ஜூன் 30ம் தேதிப்படி 9,661 ஆக இருந்தது. இது கடந்த ஜூன் 30ம் தேதியில் 14,886 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற கடன் மோசடி செய்தவர்களுக்கு எதிராக 515 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் தொழிலதிபர்கள் பட்டியல்; அம்பானி, அதானி எங்கே?

முதல் 312 பேர் தாங்கள் வாங்கியக் கடன்களைத் திரும்பச் செலுத்தாத வாராக்கடன் மட்டுமே ரூ.1.41 லட்சம் கோடியாக உள்ளது. இதில் அதிகமாக கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்த டாப் 50 தொழிலதிபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 50 தொழிலதிபர்கள் மட்டுமே ரூ.92,570 கோடி மோசடி செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, இந்த 50 மோசடி தொழிலதிபர்களில் முதலிடத்தில் இருப்பது மெகுல் சோக்சி.

மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் மட்டுமே ரூ.7,848 கோடி மோசடி செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஹெம் சிங் பரானாவின் எரா இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.5,879 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில்,

  • சந்தீப் மற்றும் சஞ்சய் ஜூன்ஜூன்வாலா சகோதரர்களின் ரெய் அக்ரோ நிறுவனம் ரூ.4,803 கோடியும்,

  • கான்காஸ்ட் ஸ்டீல் பவர் நிறுவனம் ரூ.4,596 கோடியும்,

  • ரிஷி அகர்வாலின் ஏபிஜி ஷிப் யார்டு ரூ.3,708 கோடியும்,

  • ஃப்ராஸ்ட் இன்டர்நேஷனல் ரூ.3,311 கோடியும்,

  • ஜதின் மேத்தாவின் வின்சம் டயமண்ட்ஸ் ரூ.2,931 கோடியும், விக்ரம் கோத்தாரியின் ரோட்டோமேக் குளோபல் ரூ.2,893 கோடியும்,

  • கோஸ்டல் பிராஜக்ட்ஸ் ரூ.2,311 கோடியும்,

  • ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.2,147 கோடியும் வங்கிகளில் கடன் மோசடி செய்துள்ளனர்.

வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான நிதி நிலை, தகுதி அனைத்தும் இருந்தும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் இவர்கள் அனைவரும் மோசடி செய்துள்ளனர் என்றும், ரிசர்வ் வங்கி விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு இவர்கள் புதிதாக எந்தவொரு கடனும் வாங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடன் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான நீரவ் மோடி, மெகுல் சோக்‌சி, விஜய் மல்லையா ஆகியோரின் சொத்துக்களை முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்றத்தில் பகவத் கராத் தெரிவித்தார்.

வாராக்கடன்
வாராக்கடன்

ஆனால், இதுவரை இவர்கள் யாரையும் நாட்டுக்குத் திரும்பக் கொண்டு வரவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இவர்களுடைய சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறதே தவிர, அவற்றை விற்பதிலும், விற்று கடனை மீட்பதிலும் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. தொழிலதிபர்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கி அதிகாரிகளும் உடந்தையாகச் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக பல வழக்குகள் இருந்தும் சில வழக்குகளில் மட்டுமே அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இன்னொரு பக்கம் கடனைத் திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்யும் தொழிலபதிர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டேதான் வருகிறது. இப்போது வெளியிடப்பட்டுள்ள தொழிலதிபர்கள் பட்டியல் ஒருபக்கம் இருக்கட்டும். இன்னொருபக்கம் மிக அதிகமாக வங்கியில் கடன் வாங்கியிருக்கும் அம்பானி, அதானி போன்றோரின் கடன் விவரங்களையும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட வேண்டும்.

ஏனெனில் இப்போது திரும்ப வராமல் இருக்கும் கடன்களை விடவும், அம்பானி, அதானி போன்ற' முன்னணி தொழிலதிபர்களின் கடன்கள்தான் அதிகம். இவர்கள் மட்டுமல்ல எந்த நிறுவனத்துக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்ற விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட்டால்தான் நிறுவனங்களின் நிதிநிலை பற்றியும், நிறுவன அதிபர்கள் பற்றியும் மக்களுக்குத் தெரியவரும். கடன்களைத் திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நிறுவன அதிபர்களும் கொஞ்சம் அச்சத்துடன் இருப்பார்கள்.

வங்கி
வங்கி

வங்கிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் தலைவலி மக்களுக்குத்தான் என்பதைப் பலமுறை வரலாறு நமக்கு நிரூபித்திருக்கிறது. கிரீஸ் முதல் பக்கத்தில் இருக்கும் இலங்கை வரை பல உதாரணங்கள் அதற்கு உண்டு. காரணம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் வங்கிகள்தான் மையமாக இருக்கின்றன. ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பணப்புழக்கத்தை வங்கிகள்தான் செயல்படுத்துகின்றன. இந்தச் சுழற்சியில் கடன் கொடுப்பதும், திரும்பப் பெறுவதும் தங்கு தடையின்றி சிக்கலின்றி நடந்தால் மட்டுமே வங்கிகள் ஸ்திரமாக இருக்கும். நாடும் நாட்டின் பொருளாதாரமும் சுபிட்சமாக இருக்கும்.