பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

கடந்த ஆண்டு 10,000 பேர்... இந்த ஆண்டு 17,500 பேர்...வேகமாக வளரும் மதுரை ஐ.டி துறை..!”

கருத்தரங்கு
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்தரங்கு

கருத்தரங்கு

மதுரையில் கடந்த ஆண்டில் 10,000 பேர் ஐ.டி துறை வேலை பார்த்தனர். ஒரே ஆண்டில் இது 17,500-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியை எடுத்துச் சொல்லும் ‘மதுரை கனெக்ட் 2022’ நிகழ்ச்சியை இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) நடத்தியது. சி.ஐ.ஐ-யின் மதுரை மண்டல கவுன்சில் தலைவர் ஏ.பி.ஜே ஜெய்னிஷ் வர்கர் அனைவரையும் வரவேற்றார்.

இண்டஸ்ட்ரி 4.0 என்றால் என்ன..?

தமிழ்நாடு அரசின் தமிழ் நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) தலைமை நிர்வாக அதிகாரியான சிவராஜ் ராமநாதன் பேசும்போது, ‘‘இண்டஸ்ட்ரி 4.0 என்பது பெருகிவரும் புதிய கண்டு பிடிப்புகளைப் பற்றியதல்ல; ஆனால், இது ஒரு பெரிய பாய்ச்சலாகும். மேலும், செயற்கை நுண்ணறிவை (Artificial intelligence) அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றவர், மதுரை நகரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான மும்முனை உத்திகளை முன்வைத்தார்.

இவரைத் தொடர்ந்து இந்திய அரசின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவின் (Software Technology Parks) இயக்குநர் டாக்டர் சஞ்சய் தியாகி சிறப்புரையாற்றினார். ‘‘இரண்டாம் நிலை நகரங் களில் ஐ.டி - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங் கள் துறை (IT - MEMS) செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்த அவர், கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய ஐ.டி எம்.எஸ்.எம்.இ-க்கள் 80% ஆன்-சைட் சேவைகளின் விகிதத்தை 90% ஆஃப்ஷோர் சேவைகளுக்கு மாற்றி அமைப்பதன் மூலம் பல விற்பனையாளர்களை வங்கியியலின் உலகளாவிய வணிகக் கூட்டாளர்களாக மாற்றியுள்ளதாகச் சொன்னார்.

கடந்த ஆண்டு 10,000 பேர்... இந்த ஆண்டு 17,500 பேர்...வேகமாக வளரும் மதுரை ஐ.டி துறை..!”

1,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்...

மதுரை மாநகராட்சியின் 77-வது ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் ஐ.ஏ.எஸ் பேசியதாவது... ‘‘நீர்நிலைகள், கழிவு நீர்த் தொட்டிகள் மற்றும் சாலைகள் தரம் போன்ற வற்றை மேம்படுத்துவதன் மூலம் மதுரையை முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாக மாற்ற முடியும். 600 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டு, விமான நிலைய விரிவாக்கம் முன்னேறி வருகிறது, இது துபாய், இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது வணிக எல்லைகளை கணிசமான வகையில் அதிகரிக்கும், மேலும் விமானங் களின் சாத்தியத்தை அனுமதிக்கும்.

மெட்ரோ ரயில் வாய்ப்பைப் பொறுத்தவரை, விமான நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி இணைப் புக்கான பூர்வாங்க கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இது முடிந்தவுடன் மதுரை நகரப் பயணிகளின் போக்குவரத்து அனுபவத்தை மேம்படுத்தும். இதன் மூலம் மதுரையில் ஐ.டி நிறுவனங்களின் பார்வை திரும்பும். முதலீடுகள் பெருகும். அது மட்டுமல்ல, 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய விரிவாக்கம் முன்னேறி வருகிறது. இது துபாய், இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது வணிக எல்லைகளைக் கணிசமான வகையில் அதிகரிக்க உதவும். வெளிநாட்டு விமானங்கள் எளிதில் வந்துசெல்ல உதவியாக இருக்கும்.

கடந்த ஆண்டு 10,000 பேர்... இந்த ஆண்டு 17,500 பேர்...வேகமாக வளரும் மதுரை ஐ.டி துறை..!”

ஒரு கோடி பட்டதாரிகளில் 10% பேருக்கு வேலை...

மசாய் பள்ளியின் இணை இயக்குநர் மற்றும் மூத்த துணைத் தலைவர் யோகேஷ் பட் பேசுகையில், ‘‘ஒரு கணினி அறிவியல் படித்த மாணவருக்கு கோடிங் தெரிவதில்லை. பொறியியல் படித்த மாணவருக்கு அதைப் பற்றித் தெரிவதில்லை. இத்தகைய கல்வி முறையில் பயின்றுதான் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பட்டதாரிகள் வெளியே வருகின்றனர். அவ்வாறு வெளியே வரும் பட்டதாரி களில் வெறும் 10 சதவிகித பட்டதாரிகள் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். எனவே, மாணவர்களின் திறமை மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் கல்வி முறையில் மாற்றதைக் கொண்டு வர வேண்டும்’’ எனக் கூறினார்.

தொழில்நுட்பம் பற்றியும், மதுரையில் தொழில் நுட்ப வளர்ச்சியைப் பற்றியும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.