நடப்பு
Published:Updated:

வட்டிச் சுமையைக் குறைக்கும் வரிச் சலுகை..!

வட்டிச் சுமையைக் குறைக்கும் வரிச் சலுகை..!
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டிச் சுமையைக் குறைக்கும் வரிச் சலுகை..!

சி.சரவணன்

வட்டிச் சுமையைக் குறைக்கும் வரிச் சலுகை..!

ம்மில் பெரும்பாலோர் தயங்காமல் வாங்கும் கடன்கள் இரண்டு. முதலாவது, வீட்டுக் கடன்; இரண்டாவது, கல்விக் கடன். வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றுக்கு நாம் திரும்பச் செலுத்தும் தொகைக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இதனால் நமது வட்டிச் சுமை குறையும். இதனை ஆங்கிலத்தில் ‘எஃபெக்டிவ் காஸ்ட் ஆஃப் பாரோயிங்’ (Effective cost of Borrowing) என்பார்கள். தமிழில் இதை ‘உண்மையான வட்டிச் செலவு’ என்று சொல்லலாம்.

வீட்டுக் கடனில் அசல் மற்றும் வட்டிக்கும், கல்விக் கடனில் வட்டிக்கும் வரிச் சலுகை இருக்கிறது. வீட்டுக் கடனை எத்தனை ஆண்டுகளுக்குத் திரும்பச் செலுத்தினாலும் இந்த வரிச் சலுகை, நிதியாண்டில் அசலில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் (பிரிவு 80சி), வட்டியில் ரூ.2 லட்சம் வரைக்கும் (பிரிவு 24) வருமான வரிச் சலுகை கிடைக்கும்.

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடனை வாங்கும்போது, தனித்தனியே இந்த வரிச் சலுகையைப் பெற முடியும். கல்விக் கடன் வட்டியானது (பிரிவு 80இ) கடனைக் கட்ட ஆரம்பித்து 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வருமான வரிச் சலுகை உண்டு. இந்தக் கடன்கள் மூலம் வட்டிச் சுமை எப்படிக் குறையும் என்பதை ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். ஒருவர் 10 சதவிகித வட்டியில் வீட்டுக் கடன் வாங்குகிறார் எனில், அவர் எந்த அடிப்படை வருமான வரம்பில் (10%, 20%, 30%) வருகிறார் என்பதைப் பொறுத்து அவருக்கான வட்டிச் சுமை குறையும். 

வீட்டுக் கடன் வட்டி 10% எனில், கடன் வாங்குபவர் 30 சதவிகித அடிப்படை வருமான வரம்பில் வந்தால், வரிச் சலுகை கழித்ததுபோக, அவர் வாங்கிய கடனில் வட்டிக்குச் செல்வது வெறும் 7 சதவிகிதமாகவே இருக்கும்.

வட்டிச் சுமையைக் குறைக்கும் வரிச் சலுகை..!

இப்போது புரிகிறதா, அதிகம் சம்பாதிப்பவர்கள் ஏன் அதிகம் கடன் வாங்குகிறார்கள் என்று?