நடப்பு
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்!

தங்கம்

சென்ற வாரம் நாம் சொன்னதுபோன்றே,  தங்கம் ஜூன் மாத கான்ட்ராக்ட் இன்னமும், கீழே 28600 என்பது ஆதரவாகவும், மேலே 28900 என்பது தடைநிலையாகவும் இருந்து வருகிறது. இனி, இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையே ஷட்டில் அடித்துக்கொண்டு இருக்கலாம். 

ஆனால், நாம் இப்போது ஜூலை மாத கான்ட்ராக்ட்டுக்கு மாறுகிறோம். ஏறக்குறைய தங்கம் இன்னும் அதே அளவு நகர்வில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இனி நாம் அடுத்த மாத கான்ட்ராக்டில்தான் வியாபாரம் செய்யவேண்டும். அதனால், ஜூன் மாத விலைக்கும் ஜூலை மாத விலைக்கும் வித்தியாசம் இருக்கும். அதாவது, ஜூலை மாத கான்ட்ராக்ட் ஃப்யூச்சர்ஸ் வியாபார விதிமுறையின்படி, காஸ்ட் ஆஃப் கேரி என்பது உடன் சேர்கிறது. இதனால், ஜூலை மாத கான்ட்ராக்ட் விலை அதிகமாகவே  இருக்கும்.

கமாடிட்டி டிரேடிங்!சரி, இனி ஜூலை மாத கான்ட்ராக்ட் நிலவரத்தைப் பார்க்கலாம். தங்கம், சென்றவாரம் ஜூன் மாத கான்ட்ராக்டில் மேல் எல்லையைத் தொட்டு இறங்க ஆரம்பித்துள்ளது.  இந்த மேல் எல்லை என்பது இனி ஜூலை மாத கான்ட்ராக்டில் 29050-ஆக உள்ளது. இதுதான் வலிமையான தடைநிலை ஆகும். தற்போது இந்தத் தடைநிலையில் இடித்துவிட்டு, தொடர்ந்து மேலே போக முடியாமல், கீழ் நோக்கி இறங்கியுள்ளது. இந்த இறக்கம் தற்போதைய ஆதரவான 28740 என்ற எல்லையைச் சோதித்து வருகிறது.  இந்த எல்லை உடைக்கப்படாதவரை, இனி கொஞ்சம் ஏற்றம் வரலாம்.  இந்த ஏற்றம் வலிமையாகத் தொடர்ந்தால்,  நாம் குறிப்பிட்டுள்ள மேல் எல்லையான 29050-ல் தடுக்கப்படலாம். அதை உடைத்து ஏறினால், மிகப் பெரிய ஏற்றம் வரலாம். மாறாக, கீழே 28740 உடைக்கப்பட்டால், பெரிய இறக்கங்கள் வரலாம். அடுத்த முக்கிய எல்லைகள் 28600 மற்றும் 28300 ஆகும்.  

வெள்ளி

வெள்ளி, தங்கத்தைபோல் குறுகிய எல்லைக்குள் நகராமல், சற்றே வலிமையான ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. சென்ற வாரமும் நாம் தந்்துள்ள மேல் எல்லையைத் தொட்டு, ஏற முயன்று தோல்வியுற்றுக் கீழே இறங்கியது. இந்த இறக்கம் நாம் கொடுத்துள்ள 39450 என்ற எல்லையைத் தொட்டுள்ளது. இந்த எல்லையைத்தான் தற்போது ஆதரவாக எடுத்துள்ளது. இந்த ஆதரவைத் தக்கவைக்க இப்போது முயற்சி நடந்துவருகிறது. இந்த ஆதரவு உடைக்கப்படாதவரை மேலே முந்தைய தடைநிலையான 40450-ஐ நோக்கி நகர்ந்து, வலிமை கூடினால், அதை உடைத்து பெரிய ஏற்றத்துக்கு வழி வகுக்கலாம். அந்த ஏற்றம் 41100 என்ற எல்லையைத் தொட உதவலாம்.  கீழே 39450 உடைக்கப்பட்டால், முதல்கட்டமாக 39000-த்தை ஆதரவாக எடுக்கலாம். அதையும் உடைத்தால் வலிமையான இறக்கம் வரலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் ஒரு தொடர் இறக்கத்தில் உள்ளது.  24.05.17 அன்று ஏற்றத்தின் உச்சமாக 3370 என்ற எல்லையைத் தொட்டபிறகு இறங்க ஆரம்பித்தது.  இந்த இறக்கம் 3150 என்ற எல்லையில் தடுக்கப்பட்டு, ஒரு வலுவான ஆதரவைத் தோற்றுவித்தது. இந்த ஆதரவு மூன்று நாள்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது.  பின் 30.05.17 அன்று புல்பேக் முடிந்து கீழே நோக்கித் திரும்ப ஆரம்பித்தது. இந்த இறக்கம், உடனடி முக்கிய ஆதரவான 3150-ஐ உடைத்தது. இதனால் அங்கு ‘ஆடம் அண்ட் ஈவ்’ போன்ற உருவமைப்புத் தோன்றியது. இது கரடிகளின் ஆதிக்கத்துக்குச் சந்தை மாறுவதைக் குறிப்பதாகும். அதன்படி    3150-ஐ உடைக்கும்போது, அதற்கான டார்கெட் என்பது 3150 என்ற ஆதரவுக்கும், 3370 என்ற முந்தைய தடைநிலைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். அதாவது, 3370 - 3150 = 220 ஆகும். தற்போது, 3150 என்ற ஆதரவை உடைத்து இறங்கும் நிலையில் அதன் டார்கெட் 3150 - 220 = 2930 ஆகும்.  ஏற்கெனவே 3013 வரை இறங்கிய நிலையில், இந்த டார்கெட்டின் பெரும்பகுதியை அது எட்டிவிட்டது. தற்போது 3010 என்பது உடனடி ஆதரவு ஆகும். அது உடைக்கப்பட்டால், கீழே இறங்கி 2930 என்ற எல்லையைத் தொட்டு முழு டார்கெட்டையும் அடையலாம். மேலே முந்தைய ஆதரவு நிலையான 3150, தற்போது தடைநிலையாக மாறலாம்.

இயற்கை எரிவாயு

இயற்கை எரிவாயு சிலசமயம் ஆழமான கடல்போல் அமைதியாக நகர ஆரம்பித்தால், ஜல்லிகட்டுக் காளையைப்போல் நாலுகால் பாய்ச்சலில் வேகமாக நகர ஆரம்பிக்கும். ஒவ்வொரு கமாடிட்டிக்கும் ஒரு விலை நகரும் குணம் உண்டு. இயற்கை எரிவாயு ஒரு முரட்டுக் காளையைப் போன்றது. இதில் இறங்குபவர்களும் அதற்குத் தயாராக இருக்கவேண்டும். இயற்கை எரிவாயு 26.05.17 வரை முக்கிய ஆதரவான 210-ஐ தக்கவைத்துக்கொண்டு இருந்தது. ஆனால், 29.05.17 அன்று இரண்டு மாதங்களாக தக்கவைக்கப்பட்ட ஆதரவை உடைத்துப் பலமாக இறங்கியது. இறங்கி தற்போது 193 என்ற எல்லையை ஆதரவாக எடுத்துள்ளது. இனி ஒரு புல்பேக் ரேலி வரலாம். இது மேலே 202 - 204  என்கிற பகுதியை அடைய வாய்ப்புள்ளது. மீண்டும் 193-ஐ உடைத்தால் பெரிய இறக்கம் வரலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

மென்தா ஆயில்

அக்ரி கமாட்டியில் அதிக விலை நகர்வைக் கொண்டது மென்தா ஆயில்.  இது 28.04.17 வரை 940 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு இருந்து வந்தது. அதன்பின் 02.05.17 அன்று, அந்த ஆதரவை உடைத்து மிக வேகமாக இறங்கி 896 வரை இறங்கியது. இந்த எல்லையைத் தொடர்ந்து வலிமையான ஆதரவாக மாறியுள்ளது. இந்த நிலையில், மென்தா ஆயில் மேலே ஏறும்போது 940-ல் தடுக்கப்படுவதும், கீழே இறங்கும்போது 896-ல் ஆதரவு எடுப்பதும் நடந்து வருகிறது. தற்போதும் மேலே ஏறி முந்தைய தடைநிலையான 940-ல் தடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இனி 940 - 942 என்ற எல்லையைத் தாண்டினால், இதுவே ஒரு ‘ஹெட் அண்ட் ஹோல்டர்’ என்கிற அமைப்பை உருவாக்கி, பலமாக ஏறி 960 மற்றும் 975 என்ற புள்ளிகளைத் தொடலாம்.

காட்டன்

அக்ரி கமாடிட்டியில் அதிக வால்யூமுடன் வியாபாரமாகும் ஒரு பொருள் காட்டன் ஆகும்.  தங்கம், வெள்ளி போன்று காட்டனும் பெரிய ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. தற்போது 20800 என்கிற ஆதரவை எடுத்துள்ளது. அங்கே ஒரு டபுள் பாட்டத்தையும் தோற்று வித்துள்ளது. உடனடித் தடையாக 21260 உள்ளது.  இதை உடைத்து ஏறினால், டார்கெட்டாக  21550 என்ற எல்லையை நோக்கி நகரலாம்.