நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சிக்கலைக் கொடுக்கும் கையெழுத்து!

சிக்கலைக் கொடுக்கும் கையெழுத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
சிக்கலைக் கொடுக்கும் கையெழுத்து!

சி.சரவணன்

சிக்கலைக் கொடுக்கும் கையெழுத்து!

னிநபர் கடனோ, வீட்டுக் கடனோ எது வாங்கினாலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கையெழுத்து வாங்கு வார்கள். இந்த ஆவணங்களில் எழுத்துகள் மிகச் சிறிதாகவும், பத்திகள் மிக நீளமானதாகவும் இருக்கும். அவற்றில் பல நிபந்தனைகள் இடம்பெற்றிருக்கும். பலரும் அவற்றைப் படித்துப் பார்த்துக் கையெழுத்து போடுவதில்லை. கடன் கொடுக்கும் நிறுவனத்தின் அலுவலர் குறியிட்டுக் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போடுவதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள். இப்படிக் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போடுவது பிற்பாடு சிக்கலில் சிக்க வைத்துவிடும்  என்பது பலருக்கும் தெரிவதில்லை.

சென்னையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அவசரத் தேவைக்காக வங்கி ஒன்றில் ரூ.2 லட்சம் தனிநபர் கடன் வாங்கினார். அவருக்குக் கடனாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது ரூ.1,90,000 தான். பரிசீலனை மற்றும் ஆவணக் கட்டணம் ரூ.6,000, இன்ஷூரன்ஸ் பிரீமியம் ரூ.4,000 என பலவற்றுக்குமான பணத்தைக் கழித்துக்கொண்டு, வங்கிக் கணக்கில் வரவு வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் சுரேஷ்  கோபத்துடன் விளக்கம் கேட்டார். அவர்களோ ஆவணங்களில் இந்த விவரங்கள் இடம்பெற்று இருப்பதையும், அதனை ஒப்புக்கொண்டு சுரேஷ் கையெழுத்து போட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி னார்கள். ரூ.2 லட்சம் தேவை என்பதால், கொஞ்சம் நகையை அடமானம் வைத்து ரூ.10,000 பெற்று  நிலைமையைச் சமாளித்தார் சுரேஷ்.

எந்த ஆவணத்தில் கையெழுத்து போடுவதாக இருந்தாலும் சரி, அந்த ஆவணங்களை முன்பே வாங்கி, பொறுமையாகப் படித்துப் பார்த்து, சந்தேகமிருந்தால், அவற்றை நிவர்த்தி செய்தபின்பே கையெழுத்துப்போட வேண்டும். அப்போதுதான் இழப்புகளிலும், சிக்கல்களிலும் நாம் சிக்காமல் இருக்க முடியும்!