நடப்பு
தொடர்கள்
Published:Updated:

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

BIZ பாக்ஸ்

விஜய் வாங்கிய ரூ.82 கோடி வீடு!

தற்போது இந்தியாவில் மிக மகிழ்ச்சியாக உள்ள தொழிலதிபர் என்றால் அது விஜய் சேகர் ஷர்மாதான். காரணம், இந்தியாவின் இரண்டாவது பெரிய இணைய சார் நிறுவனமாக இருக்கும் பேடிஎம் நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான அவர், இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் வசிக்கும் டெல்லி லூதியானாவில் ஒரு வீடு வாங்கியிருப்பதுதான். 3,000 ஏக்கர் பரப்பு கொண்ட அந்தப் பகுதியில், ஆயிரம் பிரமாண்ட வீடுகள் உள்ளன. அவற்றில் 6,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு பிரமாண்டமான வீட்டை வாங்கியிருக்கிறார் விஜய். அதன் மதிப்பு ரூ.82 கோடி. கங்க்ராட்ஸ் விஜய்

BIZ பாக்ஸ்

விப்ரோவின் மதிப்பு என்ன?

 ‘விப்ரோ நிறுவனத்தை மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ விற்றால், அதன் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதைச் சொல்லுங்கள்’ எனச் சில முதலீட்டு வங்கிகளிடம், விப்ரோ நிறுவனம் கேட்டிருப்பதாக பரபரப்பான செய்தி. ஐ.டி துறை பல்வேறு சிக்கலில் இருப்பதால், விப்ரோ இது மாதிரி யோசிக்கத் தொடங்கி இருக்கலாம் என்கிறார்கள் சிலர். ஆனால், இந்தச் செய்தி உண்மையில்லை என்கிறது விப்ரோ. ஐ.டி துறை சிக்கலில் இருந்தாலும், அந்த நிறுவனத்திடம் ரூ.34,474 கோடி ரூபாய் கையிருப்பாக இருக்கும்போது, விப்ரோ ஏன் இப்படி யோசிக்க வேண்டும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். எவ்வளவோ சாதித்த அஸிம் பிரேம்ஜி, ஐ.டி சிக்கலுக்கா அசரப் போகிறார்?

இதற்குத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டீர்களா ரவி?

இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய எக்ஸ்சேஞ்சான என்.எஸ்.இ-யின் துணைத் தலைவர் மற்றும் பங்குதாரர் இயக்குநர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார் ரவி நாராயண். 62 வயதான ரவி, என்.எஸ்.இ-யில் 24 ஆண்டுகள் பணிபுரிந்தவர். என்.எஸ்.இ-யை மிகப் பெரிய நிறுவனமாக ஆக்கியதில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. என்.எஸ்.இ-யின் முக்கிய டேட்டாக்கள் கிடைப்பதில் சிலருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் என்.எஸ்.இ-யின் சி.இ.ஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன், சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். அதே சர்ச்சை காரணமாக ரவி நாராயண் இப்போது பதவி விலகி இருக்கிறார். இத்தனை நாளும் பட்ட கஷ்டமெல்லாம் வீணா ரவி?

BIZ பாக்ஸ்
BIZ பாக்ஸ்

95,000 கோடி ரூபாய் - வாராக் கடன் பிரச்னையைச் சமாளிக்க இந்திய வங்கிகளுக்குத் தேவையான மூலதனம்.

இந்தியாவின் தங்கம் இறக்குமதி அதிகரித்தது!

கடந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 31.5 மெட்ரிக் டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்தோம். ஆனால், கடந்த மே மாதத்தில் 126 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறோம். ஜி.எஸ்.டி வரி  நடைமுறைக்கு வந்தால், அதிக வரி தந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்பதால்தான் பெருமளவில் தங்கத்தை இறக்குமதி செய்துவிட்டார்களாம் தங்க நகை வியாபாரிகள்! உஷார் பார்ட்டிகள்தான்!

BIZ பாக்ஸ்

சென்னை நிறுவனத்தை வாங்கிய சீன அலிபாபா!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிக்கெட்நியூ நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்கினை வாங்கியிருக்கிறது சீனாவைச் சேர்ந்த உலகின் மிகப் பெரும் ஆன்லைன் நிறுவனமான அலிபாபா. கடந்த 2007-ல் சினிமா டிக்கெட்களை, ஆன்லைன் மூலம் வாங்கும் டிக்கெட்நியூ நிறுவனத்தைத் தொடங்கினார் ராம்குமார் நம்மாழ்வர். அலிபாபாவுக்குச் சொந்தமான அலிபாபா பிக்சர்ஸ், டிக்கெட்நியூ நிறுவனத்தில் படிப்படியாக ரூ.120 கோடிக்கு மேல் முதலீடு செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நேற்று பேடிஎம், இன்று டிக்கெட்நியூ, பலே அலிபாபா!

BIZ பாக்ஸ்

அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார முதன்மை ஆலோசகர்

‘‘இந்தியப் பொருளாதாரம் 8 - 10% வளர்ச்சி காண வேண்டும் எனில், திறந்த பொருளாதாரம் (Open Market) நமக்குக் கட்டாயம் தேவை!’’

BIZ பாக்ஸ்

கோடிகளில் புரளும் விளையாட்டு வீரர்கள்!

உலக அளவில் கோடிகளில் புரளும் விளையாட்டு வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவருடைய ஆண்டு வருமானம்186 மில்லியன் டாலர். டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் நான்காவது இடத்தில் 128 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். கார் ஓட்டப் பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன், 100 மில்லியன் டாலரைச் சம்பாதித்து பத்தாவது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் இடம்பெற்ற நம் நாட்டைச் சேர்ந்த ஒரே வீரர் விராட் கோஹ்லிதான்.