நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்!

தங்கம்

தங்கம், சென்ற வாரம் ஒரு ரோலர் கோஸ்டரில் பயணித்தது. எப்போதாவது சில முறைதான் இப்படிப்பட்ட நகர்வுகளை நாம் காணமுடியும்.  நாம் சென்ற வாரம் சொன்னது என்னவெனில்,  மேல் எல்லையான

கமாடிட்டி டிரேடிங்!

29,050-ல் தடுக்கப்படலாம்.   அதனை உடைத்து ஏறினால், மிகப் பெரிய ஏற்றம் வரலாம் என்றோம். அதுபோலவே மேல் எல்லையான 29,050-ஐ உடைத்து மிகப் பெரிய ஏற்றத்தைக் கண்டது. அந்த ஏற்றமும் சென்ற வாரத்தின் திங்கள் மற்றும் செவ்வாய் என்ற இரண்டு தினங்களில் நடந்து முடிந்தது. மேலே 29,050 உடைத்து 29,499 என்ற எல்லையை அடைந்தது. இரண்டு நாளில் இது மிக மிக வலிமையான ஏற்றமாகும். இதன்பின், 29,500-ஐத் தாண்ட முடியாமல் இறங்கத் துவங்கியது.

திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் தங்கம் எப்படி வலிமையாக ஏறியதோ, அதைப் போன்றே புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் வலிமையாக இறங்கி, மீண்டும் 29,050 என்ற நமக்கு ஏற்கெனவே அறிமுகமான எல்லைக்கு வந்தது.  

கமாடிட்டி டிரேடிங்!

முன்பு 29,050 என்பது வலிமையான தடை நிலையாக இருந்தது. அதை உடைத்து ஏறத் தொடங்கியபின், 29,050 என்ற விலை இறங்கி வரும்போது ஆதரவாக மாறலாம்.

ஆனால், இப்போது இந்த 29050 என்ற எல்லை யையும் உடைத்து இறங்கும் முயற்சி நடக்கிறது. இந்த 29,050 ஆதரவு உடைத்து இறங்கும் நிலையில், தங்கம் 28,900 மற்றும் 29,050-க்கு இடையே போராடிக்கொண்டு இருக்கிறது.  மேலே 29,050-ஐ உடைத்து ஏறினால், 29,200 மற்றும் 29,350 என்பது உடனடித் தடைநிலை ஆகும். பின் முந்தைய உச்சமான 29,500 என்பது வலிமையான தடை நிலையாகத் திகழலாம். கீழே இறக்கம் தொடர்ந்தால், 28,750 என்பது மிக முக்கிய ஆதரவு ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்!

வெள்ளி

தங்கத்தைப் போல், வலிமையான நகர்வில் இல்லாமல், மிதமான ஏற்ற இறக்கத்தைக் கொண்டுள்ளது வெள்ளி. நாம் சென்ற வாரம் சொன்னது போன்றே, இந்த இறக்கம் நாம் தந்துள்ள 39,450 என்ற எல்லையைத் தொட்டுள்ளது. இந்த எல்லையைத்தான் தற்போது ஆதரவாக எடுத்துள்ளது. இந்த ஆதரவு உடைக்கப்படாதவரை மேலே முந்தைய தடைநிலையான 40,450-ஐ நோக்கி நகர்ந்து, வலிமை  கூடினால், அதை உடைத்து பெரிய ஏற்றத்துக்கு வழிவகுக்கலாம் என்றோம்.

நான் சொன்னது போலவே, 40,450-ஐ உடைத்து ஏறியது.  இந்த ஏற்றம் 40,856 வரைத் தொடர்ந்தது. அதன்பின் இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கமானது, முந்தைய ஆதரவான 40,450 -ஐ மீண்டும் சோதிக்க முயற்சி செய்கிறது.   இந்த 40,450 என்ற ஆதரவை உடைத்து இறங்கினால், 39,000 என்ற எல்லையை நோக்கி இறங்கலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

மென்தா ஆயில்

சென்ற வாரம் மென்தா ஆயில் மிக வேகமாக 896 வரை இறங்கி, 896-ல் ஆதரவு எடுப்பதும் நடந்து வருகிறது என்றோம். சென்ற செவ்வாய்கிழமை அன்று 896 -ஐ உடைத்து இறங்கி, மீண்டும் 896-க்கு ஏறி முடிந்தது. இது ‘டோஜி’ வகை கேண்டில் ஆகும். இதன் அர்த்தம், காளைகள் இறக்கத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளன என்பதே. அதைப் போன்றே, இறக்கத்தைத் தடுத்து நிறுத்தி, மேலே வலிமையாகத் திரும்பி 927-க்கு ஏறித் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது 927 என்பது ஒரு மையப் புள்ளியாகச் செயல்படலாம். இதனைத் தாண்டினால் 940-ஐ தொடவும்,  தாண்ட முடியாவிட்டால், மீண்டும் 896-ஐ நோக்கியும் நகரலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

காட்டன்

சென்ற வாரம் சொன்னது, காட்டன் 20,800 என்ற ஆதரவை எடுத்துள்ளது என்று. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் அந்த பாட்டத்தை தக்கவைக்க முடியாமல் இறங்கி, அடுத்த ஆதரவாக 20580-ஐ தோற்றுவித்து உள்ளது. இனி 20,800 என்பது தடைநிலையாக மாற வாய்ப்புள்ளது.