நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கோவையில் கூட்டம்... கமாடிட்டியில் டிரேட் செய்ய ரூபாய் 300 போதுமே!

கோவையில் கூட்டம்... கமாடிட்டியில் டிரேட் செய்ய ரூபாய் 300 போதுமே!
பிரீமியம் ஸ்டோரி
News
கோவையில் கூட்டம்... கமாடிட்டியில் டிரேட் செய்ய ரூபாய் 300 போதுமே!

சேனா சரவணன்

கோவையில் கூட்டம்... கமாடிட்டியில் டிரேட் செய்ய ரூபாய் 300 போதுமே!

நாணயம் விகடன் மற்றும் மைத்ரா கமாடிட்டீஸ் இணைந்து கோயம்புத்தூரில் `கமாடிட்டி டிரேடிங்... கலக்கலாம், ஜெயிக்கலாம்!’  என்கிற கூட்டத்தைக் கோவையில் நடத்தின. நீண்ட நாளைக்குப் பிறகு கோவையில் கமாடிட்டி விழிப்பு உணர்வுக் கூட்டம் நடந்ததால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.  

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய எம்சிஎக்ஸ் மண்டல தலைவர் (தெற்கு) டி.ஜி.செந்தில்வேலன், ‘‘கமாடிட்டி டிரேடிங்-ல் லாபம் சம்பாதிக்காவிட்டாலும், நஷ்டம் அடையாமல் டிரேட்  செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். கமாடிட்டி சந்தையில் பல மடங்கு லாபம் தருகிறோம் என்று யாராவது சொன்னால்  நம்பாதீர்கள். ரொக்கமாகப் பணம் செலுத்தாதீர்கள். கான்ட்ராக்ட் நோட் கேட்டு வாங்குகள். விரைவில் கமாடிட்டி டிரேடிங்கில் ஆப்ஷன்ஸ் வருகிறது. இதன் மூலம் லாபத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்’’ என்றார்.

கோவையில் கூட்டம்... கமாடிட்டியில் டிரேட் செய்ய ரூபாய் 300 போதுமே!

அடுத்து மைத்ரா கமாடிட்டீஸ் பிரைவேட் நிறுவனத்தின் இயக்குநர் கி.சாம்பசிவ சர்மா, கமாடிட்டி டிரேடிங் செய்யும்முன் கவனிக்க வேண்டிய விவரங்களை விளக்கிச் சொன்னார். “ஒரு கமாடிட்டியின் டிமாண்ட் மற்றும் சப்ளை அறிந்து, அதில் லாபம் பார்க்கலாம். புள்ளி விவரங்கள் வெளியாவதைக் கவனித்து டிரேட் செய்யப் பழகினால் லாபம் பார்க்கலாம்’’  என்றார்.

இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கமாடிட்டி நிபுணர் தி.ரா.அருள்ராஜன்,  ‘‘கமாடிட்டி டிரேங்கில் களம் இறக்கும் புதியவர்கள் ஆரம்பத்திலே அதிக முதலீட்டுடன் ஆரம்பிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. 1 கிராம் தங்கத்தில் டிரேட் செய்ய ரூ.300 இருந்தால் போதும். இதில் பழகிவிட்டு, பிறகு முதலீட்டை அதிகரித்துக் கொண்டு பல்வேறு கமாடிட்டிகளில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்’’ என்றார்.

கோவையில் கூட்டம்... கமாடிட்டியில் டிரேட் செய்ய ரூபாய் 300 போதுமே!

கமாடிட்டி டிரேடிங் பற்றி வாசகர்கள் தங்களுக்கிருந்த பல சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். 

படங்கள்: த.ஸ்ரீநிவாசன்