மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்!

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதி செய்தால் லாபம் கிடைக்கும்; நாட்டின் பொருளாதாரம் உயரும் என்பதெல்லாம்  சரிதான். ஆனால், நமக்கே பற்றாக்குறையாக இருந்தால், எப்படி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், தனக்கு மிஞ்சியது போகத்தானே தானமும் தர்மமும்!  எனவே, ஏற்றுமதித் தொழிலில் தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் ஏற்றுமதித் தொழில் செய்யும் ஒருவர், தான் ஏற்றுமதி செய்யப்போகும் பொருளைத் தேர்ந்தெடுக்கும்முன், என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி செய்யத் தடை செய்யப்பட்டுள்ளன, என்னென்ன பொருள்கள் இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன என்கிற விவரங்களை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். அவற்றை இப்போது பார்ப்போம். 

பொதுவாகவே, எந்தவொரு அரசும் தன்னிடம் இருக்கும் எல்லாப் பொருள்களையும் ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுத்துவிடாது. அப்படிப்பட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு உள்நாட்டுத் தேவை, பற்றாக்குறை, மிக முக்கியமான வளங்கள் ஆகியவை காரணங்களாக உள்ளன. எந்தவொரு பொருளாக இருந்தாலும், நம்முடைய தேவைக்குப் போக மீதமிருந்தால்தான் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். அதாவது, உற்பத்தி அதிகமாக இருக்க வேண்டும். உற்பத்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் ஏற்றுமதிக்கு அனுமதித்தால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் உயர்ந்துவிடும். இதனால் நாம் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்தும் அதிக விலை தந்து வாங்க வேண்டிய நிலை உண்டாகும்.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்!

ஒரு நாட்டின் அரசுதான் ஏற்றுமதியை அனுமதிக்கலாமா அல்லது கூடாதா என்கிற  முடிவுகளை எடுக்கும். ‘நான்தானே உற்பத்தி செய்கிறேன். என் இஷ்டப்படி வர்த்தகம் செய்ய எனக்கு உரிமையில்லையா?’ என்றெல்லாம் யாரும் கேட்க முடியாது. அரசு நினைத்தால் எந்தப் பொருளுக்கும், எப்போது வேண்டுமானாலும் தடை போடலாம் அல்லது தடையை நீக்கலாம். அது நம் தேவை, உற்பத்தி அளவை வைத்தே  முடிவு செய்யப்படும். 

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்!


உதாரணமாக, பருப்பு வகைகள். தற்போது பருப்பு வகைகள் இந்தியாவில் பற்றாக்குறையாக இருக்கின்றன. பற்றாக்குறை அதிகரித்த சமயத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு, விலை அதிகமாக விற்கப்பட்டதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். எனவேதான், பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இதேபோல், பல பொருள்களுக்குத் தடையும் கட்டுப்பாடுகளும் உள்ளன. மாறாக, நம்மிடம் உற்பத்தி அதிகமாக இருந்து, கையிருப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், ஏற்றுமதி செய்ய அரசு தடை விதிப்பதில்லை. 

ஏற்றுமதியில் பொருள்களின் தடைகளும் அதன் வகைகளும்

ஏற்றுமதித் தொழிலில் பொருள்களுக்கான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் கீழ்க்கண்ட வகைகளின்படிதான் முடிவு செய்வார்கள்.        
     
1. ஏற்றுமதி செய்யவே கூடாத பொருள்கள் (Prohibited Items) 2. ஏற்றுமதி செய்யலாம்; ஆனால் என்.ஓ.சி (NOC) இல்லாமல் செய்யக்கூடாது. 3. உரிமம் பெறாமல் ஏற்றுமதி செய்யக்கூடாது.

1. ஏற்றுமதி செய்யவே கூடாத பொருள்கள் (Prohibited Items)

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்!



இந்த வகையின் கீழ் பட்டியல் இடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் ஏற்றுமதி செய்ய முடியாது. இறக்குமதியும் செய்ய முடியாது. காரணம், இதன் கீழ்வரும் அனைத்துப் பொருள்களும் ஏற்றுமதி  செய்யவோ, இறக்குமதி செய்யவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்ட பொருள்களாகும். உதாரணமாக, மண்டை ஓடு போன்றவற்றைச் சொல்லலாம். மேலும், இந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்யவோ, இறக்குமதி செய்யவோ விரும்பினால், கட்டாயம் அரசின் அனுமதி பெற வேண்டும்.

2. ஏற்றுமதி செய்யலாம். ஆனால், என்.ஓ.சி இல்லாமல் செய்யக்கூடாது

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்!



இந்த வகையின்கீழ் வரும் பொருள்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றவைதான். ஆனால், இவற்றை என்.ஓ.சி. என்ற பிரச்னை இல்லா சான்றிதழைப் பெற்ற பின்பே அனுப்ப முடியும். என்.ஓ.சி சான்றிதழ் இல்லாமல் இந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்யவே கூடாது. உதாரணமாக, நிலக்கடலையைச் (Peanut) சொல்லலாம். இதற்கு என்.ஓ.சி வாங்கிய பின்பே ஏற்றுமதி செய்ய வேண்டும்.

3. உரிமம் பெறாமல் ஏற்றுமதி செய்யக்கூடாது (Restricted Items)

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்!



இந்தப் பிரிவின்கீழ் வரும் பொருள்களுக்கு ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றில் உரிமம் இருந்தால் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படலாம். ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். உதாரணமாக, உயிருள்ள விலங்குகள். உயிருள்ள விலங்குகளை ஏற்றுமதி செய்வதாக இருந்தால் உரிமம் பெற்று மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும். மேற்கண்ட மூன்று வகைகளிலும் இடம்பெறாத பொருள்கள், அதாவது ஏற்றுமதி, இறக்குமதிக்கு எந்தத் தடையும் அற்ற வர்த்தகத்துக்கு அனுமதிக்கப்பட்ட பொருள்களைத் (Free Items) தாராளமாக ஏற்றுமதி செய்யலாம். ஆனால், சில நாடுகளுக்கு ஆயுதங்கள் அனுப்புவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, வைரம் ஏற்றுமதி செய்ய விரும்புபவர்கள் கிம்பெர்லி பிராசஸ் (Kimberley Process) சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே அனுப்ப முடியும்.

எந்தெந்தப் பொருளை ஏற்றுமதி செய்யலாம், அதற்கான கட்டுப்பாடுகள் என்னென்ன என்பவற்றைத் தெரிந்துகொள்ள  http://bit.ly/2sb1fmI என்ற லிங்கைப் பார்க்கவும்.

(ஜெயிப்போம்)