நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - கல்லூரி மாணவி பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?

ஃபண்ட்  கார்னர் - கல்லூரி மாணவி பெயரில்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - கல்லூரி மாணவி பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?

சொக்கலிங்கம் பழனியப்பன் - இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ஃபண்ட்  கார்னர் - கல்லூரி மாணவி பெயரில்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?

@ கோகுலகிருஷ்ணன்.

“என் மகளுக்கு 18 வயது. கல்லூரியில் படிக்கிறாள். இப்போதே அவள் பெயரில் நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?”

‘‘சிறியவர் அல்லது பெரியவர் யார் பெயரில் வேண்டுமானாலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். 18 வயதுக்கு அதிகமாக இருக்கும்போது அவருக்கென்று தனியாக பான் கார்டு, அட்ரஸ் புரூஃப் மற்றும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். விரும்பிய அளவு முதலீடு செய்துகொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வயது அடிப்படையில் தடைகள் ஏதும் இல்லை. சிறியவராக இருக்கும்பட்சத்தில், பெற்றோர்/ பாதுகாவலரின்  பான் கார்டு அவசியம். பெற்றோர்/ பாதுகாவலர் குழந்தையின் பெயரில், குழந்தையின் வங்கிக் கணக்கு அல்லது தங்கள் வங்கிக் கணக்கு மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம்.’’

@ எ.கோமதிநாயகம்

“பல்வேறு வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டியைக் குறைத்து வருகின்றன. வங்கி எஃப்.டி அளவுக்கு வருமானம் தரும் எம்.ஐ.பி (Monthly Income Plan) திட்டங்கள் ஏதும் உள்ளனவா? அப்படி ஏதேனும் இருக்கும்பட்சத்தில், அந்தத் திட்டங்கள் குறித்துச் சொல்லவும்.”

‘‘பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகள் எந்தவிதமான வருமானத்தையும் கேரன்டி செய்யக்கூடாது. ஆனால், ஒரு ஃபண்டின் மற்றும் சந்தையின் வரலாற்றை வைத்து இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை உங்கள் நிதி ஆலோசகரால் ஓரளவு கணித்துக் கூற முடியும். மியூச்சுவல் ஃபண்டுகளிலும் எம்.ஐ.பி என்ற ஒரு வகை உண்டு. இதுபோன்ற ஃபண்டுகளில் கிடைக்கும் மாதாந்திர வருமானத்துக்கு, வரியைப் பிடித்தபிறகே மியூச்சுவல் ஃபண்டுகள் உங்களுக்கு டிவிடெண்டாக வழங்கும். நீங்கள் வருமான வரி வரம்புக்குள்  வராதபட்சத்தில், வரியைப் பிடிப்பதால் உங்களுக்குக் கையில் கிடைக்கும் தொகை குறைந்துவிடும். ஆகவே, இதே வகை ஃபண்டுகளில் எஸ்.டபிள்யூ.பி (SWP – Systematic Withdrawal Plan) என்ற வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் ஒவ்வொரு மாதமும் தேவைப்படும் தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

ஃபண்ட்  கார்னர் - கல்லூரி மாணவி பெயரில்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?


நீங்கள் வருமான வரி வரம்பில் உள்ளவர் என்றால், ஈக்விட்டி டாக்ஸ் சேவிங்ஸ் என்ற வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த வகை ஃபண்டுகளும், எம்.ஐ.பி-யைப் போன்று குறைவான ரிஸ்க்கையே உடையவை. ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கையில், இந்த வகை ஃபண்டுகளில் இருந்து வரும் வருமானம் வரி இல்லாத வருமானம் ஆகும். டிவிடெண்டுக்கும் வரி கிடையாது.  

உங்களால் சற்று அதிக ரிஸ்க் எடுக்க முடியும் என்றால், மேலும் வரி இல்லாத டிவிடெண்ட்டை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், மாதாந்திர டிவிடெண்ட் ஆப்ஷனுடன் பேலன்ஸ்டு மற்றும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் உள்ளன. இந்த வகைத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.’’

@ ரமேஷ்குமார்


‘‘இப்போது நான் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறேன். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைக்கிறேன். என் விசா இரண்டு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இப்போது நான் முதலீடு செய்யத் தொடங்கினால், இரண்டு ஆண்டு கழித்து என் முதலீடு என்ன ஆகும்?’’

‘‘நீங்கள் தற்போது வெளிநாடு வாழ் இந்தியராக உள்ளீர்கள். ஆகவே, என்.ஆர்.ஐ ஸ்டேட்டஸில்தான் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் இரண்டு வருடங்கள் கழித்து இந்தியா திரும்பும்போது, கேஒய்சி படிவத்தில் உங்கள் ஸ்டேட்டஸை மாற்றி சமர்பிக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே உள்ள முதலீடுகளில் உங்களது வங்கிக் கணக்கை என்.ஆர்.இ/என்.ஆர்.ஓ-விலிருந்து உள்நாட்டு கணக்குக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்கள் முதலீட்டில் குழப்பங்கள் ஏதும் வராது. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துகொள்ளுங்கள்.’’

ஃபண்ட்  கார்னர் - கல்லூரி மாணவி பெயரில்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?