நடப்பு
தொடர்கள்
Published:Updated:

லாபத்துக்குக் கைகொடுக்கும் பஃபெட் ஃபார்முலா!

லாபத்துக்குக் கைகொடுக்கும் பஃபெட் ஃபார்முலா!
பிரீமியம் ஸ்டோரி
News
லாபத்துக்குக் கைகொடுக்கும் பஃபெட் ஃபார்முலா!

சேனா சரவணன்

ங்குச் சந்தை முதலீட்டுக் குருவான வாரன் பஃபெட், பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் ஆண்டுக்குச் சராசரியாக 20 சதவிகிதத்துக்கு மேல் சம்பாதித்து வருகிறார். காரணம், முதலீடு குறித்த  வித்தியாசமான அணுகுமுறைதான்.

லாபத்துக்குக் கைகொடுக்கும் பஃபெட் ஃபார்முலா!

அனைவரும் பங்குச் சந்தையை விட்டு விலகி ஓடும்போதுதான் அவர் முதலீட்டை மேற்கொள்வார்.  அதேபோல், அனைவரும் பங்குச் சந்தைக்குள் நுழையும்போது அவர் வெளியேறிவிடுவார்.

இதன் அர்த்தம், பங்குச் சந்தை நல்ல இறக்கத்தில் இருக்கும்போது, சந்தை இன்னும் இறங்குமோ என்கிற பயத்தில் பலரும் கைவசம் இருக்கும் நன்கு செயல்படும் நிறுவனங்களின் பங்குகளைக்கூட விற்றுவிடுவார்கள். உதாரணமாக, கோக கோலா  நிறுவனம் சர்ச்சையில் சிக்கி, அந்த நிறுவனத்தின் பங்குகளைப் பலரும் விற்றபோது, அந்தப் பங்கில் துணிந்து முதலீடு செய்தார் வாரன் பஃபெட்.  ஒரு  நிறுவனத்தின் செயல்பாடு வலுவான நிலையில் இருப்பின், அந்த நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதுதான் வாரனின் ஃபார்முலா.

மீண்டும் பங்குச் சந்தை ஏறத் தொடங்கியதும் பலரும் முதலீடு செய்ய வரும்போது பங்கு விலை ஏறும். அப்போது நல்ல லாபத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடுவார் அவர்.

பஃபெட் கடைப்பிடிக்கும் இந்த ஃபார்முலாவை நீங்களும் கடைப்பிடித்து, பங்கு முதலீட்டில் நல்ல லாபம் பார்க்கலாமே!