நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஜி.எஸ்.டி... இப்படியும் வரியை மிச்சப்படுத்தலாமா?

ஜி.எஸ்.டி... இப்படியும் வரியை மிச்சப்படுத்தலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி... இப்படியும் வரியை மிச்சப்படுத்தலாமா?

விக்னேஷ் சி.செல்வராஜ்

ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது ஜி.எஸ்.டி. இனி எந்தப் பொருளை வாங்கினாலும் நாம் எல்லோரும் இந்த வரியைக் கட்டியாக வேண்டிய கட்டாயம். வரி என்றாலே அதைக் கட்டாமல் இருப்பது எப்படி என்றுதானே நம்மவர்கள் யோசிப்பார்கள். என்ன செய்தால் இந்த வரியை மிச்சப்படுத்தலாம் என்பதற்குச் சில ‘காமெடி’ யோசனைகள்...

ஜி.எஸ்.டி... இப்படியும் வரியை மிச்சப்படுத்தலாமா?

* இனி ஹோட்டல் மற்றும் ஏசி வசதியுள்ள பெரிய ரெஸ்டாரென்ட்டில் சாப்பிட்டால் 12 முதல் 18% வரி கட்ட வேண்டுமாம். எனவே, பெரிய ஹோட்டல்கள் உள்ள சாலைகள் பக்கம் மறந்தும் தனியாகவோ, குடும்பத்துடனோ போகாமல் இருப்பது நல்லது. இட்லி முதல் இடியாப்பம் வரை, பாவ் பாஜி முதல் பரோட்டா வரை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால், உடம்புக்கும் நல்லது. வரியும் மிச்சம்.  

* தங்கம் மாதிரியான அத்தியாவசியமான பொருளை வாங்குற பரம ஏழைகளுக்கு 5% வரி. பத்து ரூபாய்க்கு வாங்கித் திங்கிற பிஸ்கட் வாங்கும் பணக்காரர்களுக்கு 18% வரி போட்டீருக்கீங்களே ஆபீஸர்ஸ், ஒரு கண்ணுல வெண்ணெய்யும், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் வெச்சது நியாயம்தானா? இனி பசங்களுக்கு பிஸ்கட்டை வாங்கிக் கொடுக்கறதைவிட பொரிகடலையை வாங்கித் தரவேண்டியதுதான்.     

* வெயில் தாள முடியல. கொஞ்சம் ஏ.சி காத்தை வாங்கலாம்னு நெனைச்சு இனி ஏ.சி.யைக்கூட வாங்க முடியாது. காரணம், அதுக்கும் 28% வரி போட்டாச்சு. இனி ராத்தியானா வீட்டுக் கதவைப் பூட்டிட்டு, மொட்டை மாடியில பாயை விரிச்சுப் படுத்துக்க வேண்டியதுதான். மொட்ட மாடித் தூக்கம், ராத்திரியில ஓகே. பகலில் என்ன செய்றதுன்னு கேட்டா...? கேள்வியெல்லாம் கேக்காதீங்க மகாஜனங்களே, உங்களை  ‘ஆன்ட்டி-நேஷனல்’ன்னு சொல்லிடப் போறாங்கோ!

* சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு 18% ஜி.எஸ்.டி வரியாம்! இப்ப பலரும் அன்றாடப் பயன்பாட்டுக்கு கேன் வாட்டர்தான் வாங்குறாங்க. டிஸ்கவரி சேனல்ல வர்ற மாதிரி தண்ணீர் குடிக்காம உயிர் வாழ்வது எப்படினு பயிற்சி  எடுத்து, இனி நிலைமையைச் சமாளிக்க  வேண்டியதுதான். 

* ஆடி, லம்போகினி, பி.எம்.டபிள்யூ போன்ற லக்ஸுரி கார்களின் விலை குறையுமாம். இரு சக்கர வாகனங்களின் மீதான வரி 14.5 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்வதால், விலை ரூ. 5,000 முதல் 10,000 வரை உயருமாம். இனிமே ஆளுக்கொரு சைக்கிளை வாங்கி, அதுல சுத்துனா பெட்ரோல்ல இருந்து எல்லாச் செலவும் மிச்சம் போங்க!

* ஊறுகாய்க்கும் 18% ஜி.எஸ்.டி வரி போட்டாச்சு. இது மதுவிலக்கை அமல்படுத்துறதுக்கு முன்னேற்பாடு மாதிரி படுது. குடிமகன்களே, இனிமேல டாஸ்மாக் பக்கம் போகாம இருக்கிறது நல்லது!