நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஃபண்ட் கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?

ஃபண்ட்  கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?

சொக்கலிங்கம் பழனியப்பன் - இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ஃபண்ட்  கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?

@ பி.முத்துக்குமரன்

“நான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு  புதியவன். வயது 31. மாதம் ரூ.10,000 வரை முதலீடு செய்ய முடியும். எனக்கு மியூச்சுவல் ஃபண்ட ஆலோசகரின் உதவி தேவையா,  இல்லை சில ஆப்ஸ் உதவியுடன் நேரடி முதலீடு செய்யலாமா? நல்ல மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரை எங்கே தேடுவது?”

ஃபண்ட்  கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?


“நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதியவர் என்றால், மியூச்சுவல் ஃபண்ட் அட்வைஸர் உதவியுடன் முதலீட்டை ஆரம்பிப்பதுதான் சரியானதாகும். அட்வைஸர் உதவியுடன் முதலீடு செய்யும்போது நீங்கள் ரெகுலர் பிளானில்தான் செல்லுமாறு இருக்கும். ஆப் மூலம் முதலீடு செய்யும்போது, உங்களுக்கென்று ஆலோசனை சொல்லத் தனியாக ஒரு நபர் இருக்கமாட்டார்.

நீங்கள் சிறந்த டாக்டரை எப்படித் தேர்வு செய்கிறீர்களோ,  அதுபோல்தான்  அட்வைஸரையும் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் விசாரித்து சிறந்த அட்வைஸரைக் கண்டுபிடித்துத்  தேர்வு செய்வது சிறப்பு.

நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் விநியோகிப்பாளரைத் தெரிந்துகொள்ள https://www.amfiindia.com/locate-your-nearest-mutual-fund-distributor-details என்ற இணையதள உதவியை நாடுங்கள்.’’

@ எஸ்.சிவசுப்ரமணியன் 

அரபு நாட்டில் வேலை பார்க்கும் என் வயது 43. 13 வயதில்  மகளும் 10 வயதில் மகனும் இருக்கின்றனர். ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டாப் 200 ஃபண்ட், யூ.டி.ஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், யூ.டி.ஐ மிட்கேப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ பேலன்ஸ்டு ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ ஃபோக்கஸ்டு ப்ளுசிப் ஃபண்ட், மிரே அஸெட் எமர்ஜெங் ப்ளுசிப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட், டி.எஸ்.பி பிளாக்ராக் மைக்ரோ கேப் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் குரோத் ஆப்ஷனில் ரூ.14 ஆயிரம் முதலீடு செய்து வருகிறேன். இதை 15 ஆண்டுகளுக்குத் தொடர விருப்பம். யு.டி.ஐ. டிவிடெண்ட் ஈல்ட் ஃபண்டில் செய்துவந்த எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டு யூ.டி.ஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்ட்டிக் ஃபண்டில் ஒருமுறை முதலீடாக ரூ.44,000 முதலீடு செய்துள்ளேன். நான் முதலீடு செய்துவரும் இந்த ஃபண்டுகள் எல்லாம் சரியானவையா, ஏதும் மாற்றம் வேண்டுமா?

ஃபண்ட்  கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?

‘‘தற்போது நீங்கள் 10 வெவ்வேறு ஃபண்டுகளில் மாதத்துக்கு ரூ.14,000 முதலீடு செய்து வருகிறீர்கள். மேலும், மாதத்துக்கு ரூ.5,000 கூடுதலாக முதலீடு செய்ய விரும்புகிறீர்கள். ரூ.14,000-க்கு, 10 ஃபண்டுகள் என்பது மிகவும் அதிகம். நீங்கள் மாதமொன்றுக்கு முதலீடு செய்யப்போகும் ரூ.19,000-த்தை கீழ்கண்டவாறு ஒதுக்கீடு செய்துகொள்ளுங்கள். உங்களிடம் தற்போதிருக்கும் ஃபண்டுகள் அனைத்தையும், வெளியேற்றுக் கட்டணம் இல்லாதபோது  மேற்கண்ட நான்கு ஃபண்டுகளுக்கு மெதுவாக மாற்றிக்கொள்ளுங்கள். யூ.டி.ஐ டி ரான்ஸ்போர்ட்டேஷன்  ஃபண்டில் இருக்கும் முதலீட்டை நீங்கள் தொடர்ந்து செய்துவரலாம்.’’

எல்.ஜீவானந்தம், ஈரோடு.


“ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் டேர்னோவர் ரேஷியா என்றால் என்ன?”

‘‘டேர்னோவர் ரேஷியோ  என்பது, ஒரு ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்தைப் போல எத்தனை சதவிகிதம் ஒரு வருடத்தில் வாங்கி விற்றுள்ளது என்பதைக் குறிக்கும். உதாரணத்துக்கு, ஒரு ஈக்விட்டி ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ.1,000 கோடி எனில், அந்த வருடத்தில் ரூ.300 கோடிக்குப் பங்குகளை வாங்கி / விற்றுள்ளது என்றால், அந்த ஃபண்டின் டேர்னோவர் ரேஷியோ 30% ஆகும்.

பொதுவாக, டேர்னோவர் ரேஷியோ குறைந்த அளவில் இருப்பது, ஃபண்ட் மேனேஜர், தான் வைத்துள்ள பங்குகளின் மேல் வைத்துள்ள ஈடு பாட்டினைக் குறிக்கும்.

டேர்னோவர் ரேஷியோ அதிகமாக இருப்பது, சற்று நெகட்டிவ் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படும். சில சமயங்களில் ஒரு ஃபண்டில் வரத்து அதிகம் இருந்தாலும் அல்லது ரிடெம்ப்ஷன் அதிகம் இருந்தாலும், டேர்னோவர் ரேஷியோ அதிகமாக இருக்கும். ஆகவே, டேர்னோவர் ரேஷியோவானது ஏன் அதிகமாக அல்லது குறைவாக இருக்கிறது என்பதை ஆராய வேண்டும்!’’

ஃபண்ட்  கார்னர் - ஆப்ஸ் மூலம் ஃபண்ட் முதலீடு செய்யலாமா?