நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்!

மதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்!

சோ.கார்த்திகேயன்

மதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்!

நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `மியூச்சுவல் ஃபண்ட்: செல்வம் சேர்க்கும் செயல் திட்டம்’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை மதுரையில் நடத்தின. மதுரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பல்வேறு நகரங்களிலிருந்து பெண்களும், இளைஞர்களும், மூத்த குடிமக்களும் இந்தக் கூட்டத்துக்குத் திரண்டு வந்ததால், அரங்கம் நிறைந்தது வழிந்தது

மதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்!

முதலில், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு சீனியர் ரீஜினல் ஹெட் அசோக் நஞ்சுண்டராஜ் பேசினார். அவர், மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும், முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக விளக்கிச் சொன்னார். நமது எதிர்காலம் வளமாக இருக்க, எஸ்.ஐ.பி முறையில்  முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் சொன்னார். 

மதுரை மக்களைச் சிந்திக்க வைத்த விழிப்பு உணர்வுக் கூட்டம்!

அவரைத் தொடர்ந்து, ஈஸி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பி.ராமசுவாமி பேசினார். 30 ஆண்டுகளுக்குமுன் ரூ.2 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இப்போது எவ்வளவாக இருக்கும் என்பதை வங்கி டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என ஒவ்வொரு முதலீட்டுத் திட்டங்களையும் உதாரணத்துடன் விளக்கினார். மற்ற முதலீட்டுத் திட்டங்களைவிட, மியூச்சுவல் ஃபண்டில் மட்டுமே பலமடங்கு வருமானத்தை ஈட்ட முடியும் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் சொன்னார். 

கூட்டத்தில் இறுதியில் பேசிய ஒரு வாசகர்,  ‘`அடுத்த மாதம் நான் ஓய்வு பெறப் போகிறேன்.  எனக்குக் கிடைக்கும் பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் போடப் போகிறேன்’’ என்று சொன்ன போது அனைவரும் கைதட்டிப் பாராட்டினார்கள். 

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்