நடப்பு
தொடர்கள்
Published:Updated:

எஸ்.ஐ.பி. முதலீடு... தவிர்க்க வேண்டிய தவறுகள்!

எஸ்.ஐ.பி. முதலீடு... தவிர்க்க வேண்டிய தவறுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஐ.பி. முதலீடு... தவிர்க்க வேண்டிய தவறுகள்!

சேனா சரவணன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. 2016-17-ம் நிதியாண்டில் மட்டும் எஸ்.ஐபி முறையில் ரூ.43,920 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் சுமார் 1.35 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள் இருக்கின்றன. எஸ்.ஐ.பி முதலீட்டில், பின்வரும் நான்கு தவறுகளைத் தவிர்த்தால் கூடுதல் லாபம் பார்க்க முடியும்.

எஸ்.ஐ.பி. முதலீடு... தவிர்க்க வேண்டிய தவறுகள்!

1. சந்தை இறக்கத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துதல்

பங்குச் சந்தை இறங்கினால் பலரும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு. முதலீடு செய்யும் காலத்தில் சந்தை இறங்கி இருக்கும்போதும் தொடர்ந்து முதலீடு செய்தால்,  அதிக யூனிட்கள் கிடைக்கும். எனவே, சந்தை இறங்கினாலும் நல்ல ஃபண்டில் செய்துவரும் எஸ்.ஐ.பியை நிறுத்தக் கூடாது.

2. குறுகிய காலத்தில் முதலீட்டை நிறுத்துதல்

சிலர் குறுகிய காலத்துக்கு 6 அல்லது 8 மாதங்கள் மட்டும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவிட்டு, பிறகு ஏதோ காரணம் சொல்லி நிறுத்திவிடுவார்கள். இதனால் அதிக லாபம் கிடைக்காது. 3 - 5 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால்தான் சந்தையின் ஏற்ற இறக்கத்தின் பலன் கிடைக்கும்.

3. முதலீடு செய்துவிட்டு மறந்துவிடுதல்

பலரும் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பித்துவிட்டு, அதனை அப்படியே மறந்துவிடுகிறார்கள். இது தவறு. எஸ்.ஐ.பி முதலீடாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் அந்த ஃபண்ட் எவ்வளவு வருமானம் தருகிறது என்பதை ஆய்வு செய்வது அவசியம்.

4. டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்தல்


மியூச்சுவல் ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யும்போது, டிவிடெண்ட் வழங்கும் தொகைக்கேற்ப முதலீட்டு மதிப்புக் குறையும். டிவிடெண்ட் என்பது உங்கள் பணத்தை எடுத்து உங்களுக்கே தருவது. எனவே, நீண்ட காலத்தில் அதிக லாபம் எதிர்பார்ப்பவர்கள் குரோத் ஆப்ஷனையே தேர்வு செய்ய வேண்டும்.