நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்!

தங்கம்

கமாடிட்டி டிரேடிங்!



“தற்போது 28640 என்ற முந்தைய பாட்டத்தை ஆதரவு எடுக்க முயல்கிறது. இதை இன்னும் கொஞ்சம் தள்ளி 28600 என்ற எல்லையை ஆதரவு எல்லையாக எடுக்கலாம். இதுவும் உடைக்கப் பட்டால், தங்கம் வலிமையான இறக்கத்தைச் சந்திக்கலாம். இந்த இறக்கம் அடுத்தடுத்த எல்லையான 28450 நோக்கி நகரலாம்” என்று கடந்த வாரம் சொன்னோம். அதுவும் நடந்தது. தங்கம் கிட்டத்தட்ட 28400 வரை இறங்கியது. 

தற்போது 28400 என்ற எல்லையை ஆதரவாக மாற்றி, அங்கிருந்து ஒரு புல்பேக் ரேலியாக மேல் நோக்கித் திரும்பியுள்ளது.  இந்தத் திருப்பம், என்பது மேலே முன்பு ஆதரவாக இருந்த 28750 என்ற எல்லையில் தடுக்கப்படலாம். ஃபிபனாச்சி ரேஷியோவை வைத்துப் பார்க்கும்போது, 38.2% என்ற எல்லையானது 28830 ஆகும்.  ஆக, தங்கம் இந்த புல்பேக் ரேலியில் 28750 - 28830 என்ற வலிமையான தடைநிலையாக இருக்கலாம்.   இந்த இடத்தில் இருந்து கீழே இறங்கி இப்போது ஆதரவு எடுத்துள்ள 28400 என்ற எல்லையை நோக்கி வரலாம்.  மேலே 28830 உடைக்கப்பட்டால், மேலே 29050 நோக்கி நகரலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

வெள்ளி

“38400-ஐ உடைத்து இறங்கினால், பெரிய இறக்கத்தை அது கொடுக்கலாம். அடுத்த முக்கிய எல்லை 37800 ஆகும்.  வெள்ளி கிட்டத்தட்ட அந்த எல்லைக்கு அருகில் வந்தது.  அதாவது 37825 வரை இறங்கியது. அதன் பின் மேலே திரும்பி ஏற ஆரம்பித்துள்ளது.  இது ஒரு இறக்கத்தின் ஏற்றம் ஆகும். இதை புல்பேக் ரேலி என்றும் சொல்லுவோம்”  எனச் சென்ற வாரம் சொல்லியிருந்தோம்.

இனி ஆகஸ்ட் கான்ட்ராக்ட்.  இந்த புல்பேக்ரேலி தொடர்ந்தால் மேலே அடுத்த முக்கியத் தடைநிலைகள் 39800,  அதைத் தாண்டினால், 40600 என்பது மிக மிக முக்கியத் தடைநிலை ஆகும்.  அந்த எல்லையைத் தாண்டினால், தற்காலிகமாகச் சந்தை, கரடிகள் கையில் இருந்து காளைகள் கைக்கு மாற வாய்ப்புள்ளது. கீழ்நோக்கி திரும்பினால், வெள்ளி இறங்கி, முந்தைய பாட்டமான 38400 என்ற எல்லையை நோக்கி நகரலாம்.  

கமாடிட்டி டிரேடிங்!

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் தற்போது முழுவதும் கரடிகள் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்டுகிறது. இந்தத் தொடர் இறக்கம் 2850 வரை இறங்கிக் காட்டியுள்ளது. இவ்வளவு பெரிய இறக்கத்திற்குண்டான புல்பேக் ரேலி இதுவரை வரவில்லை.  ஆனால் 2850 உடைக்கப்பட்டால் பெரிய இறக்கம் வரலாம். இன்னமும் அந்த புல்பேக் ரேலி வரவில்லை. அதற்கு மாறாக இறக்கம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.  மேலே நாம் குறிப்பிட்டிருந்த 2850 என்ற எல்லை உடைக்கப்பட்டு இறங்கி, புதன் அன்று 2732 என்ற குறைந்தபட்சப் புள்ளியைத் தொட்டது.  அடுத்த இரண்டு நாள்களும், இந்த பாட்டமான 2732 உடைக்காமல் இருக்கிறது.  எனவே, இது ஒரு தற்காலிக பாட்டமாக மாறலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

ஆனாலும், ஒட்டுமொத்தமாக, கச்சா எண்ணெய்  இன்னும் இறங்குமுகமாவே உள்ளது.   ஒருவேளை 2732-ஐ உடைத்து இறங்கினால், அடுத்தகட்டமாக 2600 மற்றும் 2560 என்ற எல்லைகளை நோக்கி நகரலாம். ஆனாலும், ஒரு புல்பேக் ரேலிக்கு இன்னும் வாய்ப்புண்டு.  அவ்வாறு நகர்ந்தால், மேலே 2850 என்ற முந்தைய ஆதரவுநிலை தடைநிலையாக மாற வாய்ப்புண்டு.  அதையும்தாண்டி ஏற ஆரம்பித்தால், 2960 மிக மிக முக்கியத் தடைநிலை ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்!

மென்தா ஆயில்

மென்தா ஆயில் தன் ஏற்றத்தை முடித்துக் கொண்டு இறங்குமுகமாக மாறிவிட்டது. ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பு உருவாக்கி இருந்தாலும்,  அதன் விளிம்பை உடைக்கமுடியாமல் கீழே திரும்பி விட்டது.  பேட்டன் பெயிலாகும்போது, எதிர்த்திசையில் வலிமையாக நகரும். அந்த வகையில் தற்போது வலிமையாக இறங்கியுள்ளது.  தற்போது 900 என்பது முக்கிய ஆதரவு. அது உடைக்கப்பட்டால் 887 அடுத்த முக்கிய ஆதரவு. 917 உடனடித் தடைநிலையாக உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்!

காட்டன்

காட்டன் இறக்கத்தில் இருந்தது. அப்போது சொன்னது, உடனடித் தடைநிலை 20100 ஆகும்.  இதைத் தாண்டினால், ஒரு புல்பேக் ரேலி வரலாம்.   சென்ற வாரம் 20100- ஐத் தாண்டியது. ஆனால், அது ஒரு கேப்அப்பாக 20400-ல் துவங்கியது.  இப்படி கேப் ஆகும்போது இறங்கி முடிவது சகஜம்.  தற்போது  இறக்கத்தில் உள்ளது. ஆதரவு 19450, உடனடிதடைநிலை 19820.