நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்... எப்படித் தேர்ந்தெடுப்பது?

அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்... எப்படித் தேர்ந்தெடுப்பது?
பிரீமியம் ஸ்டோரி
News
அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்... எப்படித் தேர்ந்தெடுப்பது?

கேள்வி பதில்

அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்... எப்படித் தேர்ந்தெடுப்பது?

``அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?”

தினகரன், அரக்கோணம்

அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்... எப்படித் தேர்ந்தெடுப்பது?



பி.ராமசுவாமி, தலைமை நிர்வாகி, ஈஸி இன்வெஸ்ட்மென்ட்.

``முதலீட்டாளர்கள் அதிக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்களையே பெரிதும் விரும்புகின்றனர். ஆனால், அதிக டிவிடெண்ட்  சதவிகிதத்தைவிட, நல்ல டிவிடெண்ட் யீல்டு மற்றும் டிவிடெண்ட் நிலைத்தன்மையைப் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். 

உதாரணமாக, சில நிறுவனங்கள் 400%  டிவிடெண்ட் அறிவிக்கலாம். ஆனால், இந்தப் பங்கின் முகமதிப்பு 10 ரூபாய் எனில், 400%  டிவிடெண்டுக்கு 40  ரூபாய் கிடைக்கும். ஆனால், இந்தப் பங்கின் முகமதிப்பு ஒரு ரூபாய் எனில் 400% டிவிடெண்டுக்கு 4 ரூபாய் மட்டுமே கிடைக்கும். எனவே, டிவிடெண்ட் கணக்கிடும்போது முகமதிப்பை நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

மேலும், 10 ரூபாய் முகமதிப்புகொண்ட ஒரு  பங்கின் சந்தை விலை (Market  Price) 600 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அதற்கு 400%  டிவிடெண்ட், அதாவது 40 ரூபாய் கிடைத்தால், நம் முதலீட்டுக்கு வருமானம் வெறும் 6.67% மட்டுமே. இதைத்தான் `டிவிடெண்ட் யீல்டு’      (Dividend  yield) என்கிறோம்.

மாறாக, ஒரு பங்கின் சந்தை விலை (Market  Price) 1,500 ரூபாய் என வைத்துக்கொண்டால், இதே 400 சதவிகித டிவிடெண்டுக்கு 40 ரூபாய் டிவிடெண்ட் என்பது நம் முதலீட்டுக்கு வருமானம் 2.67% ஆகும். எனவே, முதலீட்டாளர்கள், பங்கின்  முகமதிப்பு, டிவிடெண்ட் யீல்டு மற்றும் டிவிடெண்ட் நிலைத் தன்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பங்குகள், நல்ல லாபத்தை ஈட்டுவதற்கு வழிவகுக்கலாம்.”

``கடந்த 2014-ம் ஆண்டு என்.பி.ஸ் கணக்கு தொடங்கி, 50,000 ரூபாய் முதலீடு மேற்கொண்டேன். 2016-ம் ஆண்டிலும் 50,000 ரூபாய் முதலீடு செய்தேன். 2017-ம் ஆண்டிலும் இதே தொகையை முதலீடு மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். இதனால் வரிச் சலுகை ஏதாவது கிடைக்குமா?”

சங்கர், திருநெல்வேலி

அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்... எப்படித் தேர்ந்தெடுப்பது?



எஸ்.பிரபு, ஆடிட்டர்

``என்.பி.எஸ் கணக்கின் மூலம் நீங்கள் செலுத்தும் தொகைக்கு ரூ.2 லட்சம்  வரை வருமானத்தில் விலக்கு உண்டு. அதாவது, 80சிசிடி (1பி)-ன்படி 50,000 ரூபாய் வரையிலும், 80சிசிடி(1)/ 80சி-ன்படி 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் வருமானத்தில் விலக்கு உண்டு. ஆனால், 80சிசிடி(1)/80சி-யைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக மொத்த வருமானத்தில் 10% வரை மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.

உதாரணமாக, 6 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் உள்ள ஒருவர், 2 லட்சம் ரூபாய் வரை என்.பி.எஸ் செலுத்தினால், 80சிசிடி(1பி)-ன்படி 50,000 ரூபாய் மற்றும் 80சிசிடி(1)/80சி-ன்படி 60,000 ரூபாய்க்கும் வருமானத்தில் விலக்கு அளிக்கப்படும்.”

``பங்கு தினசரி வர்த்தகத்தில் இண்டிகேட்டர்ஸ், பேட்டர்ன் மூவ்மென்ட், சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் மற்றும் சிக்னல்களை எப்படிக் கணிப்பது?

பிரகாஷ், காஞ்சிபுரம்.

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

``எல்லா டெக்னிக்கல் சாஃப்ட்வேருமே விலையின் போக்கைக் கணிக்க உதவும் டூல்ஸ் எனச் சொல்லக்கூடிய டிரெண்ட் லைன், மூவிங் ஆவரேஜ், இண்டிகேட்டர்ஸ் என எல்லாவற்றையும் கொண்டிருக்கும். இந்த சாஃப்ட்வேரில், டிரெண்ட் லைன் எப்படி வரைவது, எத்தனை நாள் மூவிங் ஆவரேஜ்-யை உபயோகிப்பது, எந்தெந்த இண்டிகேட்டர்களை உபயோகிக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு, நீங்கள் உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பல வலைதளங்களில் இந்த சாஃப்ட்வேரை இலவசமாகப் பார்க்கலாம். சில பங்குச் சந்தைத் தரகர்களும் இந்த சாஃப்ட்வேரை இலவசமாகக் கொடுக்கிறார்கள். முன்னணி நிறுவனங்கள் சில, இந்த சாஃப்ட்வேரை டேட்டாவோடு விற்கிறார்கள்.

உள்நாட்டு வியாபாரிகள் சுமாரான சாஃப்ட் வேரையோ அல்லது பைரேட்டட் சாஃப்ட் வேரையோ விற்று, டேட்டாவுக்காகத் தனியாகக் காசு வாங்குவதும் உண்டு. இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதே அனுபவசாலிகள் சொல்லும் பாடம்.”

தொகுப்பு : சோ.கார்த்திகேயன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.