நடப்பு
தொடர்கள்
Published:Updated:

“இனியும் தாமதிக்க மாட்டோம்!” தெளிவுடன் கிளிம்பிய திருச்சி முதலீட்டாளர்கள்

 “இனியும் தாமதிக்க மாட்டோம்!” தெளிவுடன் கிளிம்பிய திருச்சி முதலீட்டாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
“இனியும் தாமதிக்க மாட்டோம்!” தெளிவுடன் கிளிம்பிய திருச்சி முதலீட்டாளர்கள்

ஜெ.சரவணன்

 “இனியும் தாமதிக்க மாட்டோம்!” தெளிவுடன் கிளிம்பிய திருச்சி முதலீட்டாளர்கள்

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து, திருச்சியில் ‘மியூச்சுவல் ஃபண்ட்: செல்வத்தைப் பெருக்கும் முதலீடு’ என்கிற தலைப்பில் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தின.

முதலில், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழகப் பிரிவின்  தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசினார். அவர், மியூச்சுவல் ஃபண்டின் முக்கியத்துவம் குறித்தும், அதன் அடிப்படைகள் குறித்தும் விரிவாக எடுத்துச் சொன்னார். மேலும், ஒவ்வொருவரும் தங்களது முதலீடுகளை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது குறித்தும்,  முதன் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை அவர் விரிவாக விளக்கினார்.

 “இனியும் தாமதிக்க மாட்டோம்!” தெளிவுடன் கிளிம்பிய திருச்சி முதலீட்டாளர்கள்

அடுத்ததாகப் பேசிய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் (முதலீட்டாளர் கல்வி) எஸ்.குருராஜ், ``நாம் சிறுவயதிலிருந்தே என்ன படிக்கலாம், எந்தத் துறையில் வேலைக்குப் போகலாம் என யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம். ஆனால், சேமிப்பையும் முதலீட்டையும் பற்றி யோசிக்க மறந்துவிடுகிறோம். எனவே, எவ்வளவு சீக்கிரம் முதலீடுகளைத் திட்டமிடுகிறோமோ, அவ்வளவு நல்லது. சேமிப்பு, இன்ஷூரன்ஸ், முதலீடு ஆகிய மூன்றும் ஒருவரிடம் கட்டாயம் இருக்க வேண்டியவை” என்றார்.

 “இனியும் தாமதிக்க மாட்டோம்!” தெளிவுடன் கிளிம்பிய திருச்சி முதலீட்டாளர்கள்

முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ‘‘மாறிவரும் வாழ்க்கைமுறையில் எதிர்காலத்தில் நம் தேவைகள் பலமடங்கு அதிகரிக்கலாம். நிதிச்சுமை இல்லாத வாழ்க்கையை நடத்த `நாளைக்கான இன்றைய முதலீடு’ மிகவும் அவசியம். தங்கமும் ரியல் எஸ்டேட்டும் வருமானம் தரும் நிலையில் தற்போது இல்லை. முதலீட்டில் அதிக லாபத்துக்குச் சிறந்த வழி மியூச்சுவல் ஃபண்ட். இதில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம், வரிச் சலுகையுடன் கிடைக்கும்” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில், “இனியும் தாமதிக்காமல் உடனே முதலீட்டைத் தொடங்க உள்ளோம்” எனப் பல வாசகர்கள் சொன்னது நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி.

படங்கள்: தே.தீட்ஷித்