மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்!-30

நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! ( விகடன் டீம் )

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ற்றுமதி செய்வதற்குத் தயாராகிவரும் உங்களுக்கு அரசு மற்றும் அரசு சார் அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. ஏற்றுமதியாளர்களுக்கு ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்கவே பல்வேறு விதமான பொருள்களுக்கேற்ப தனித்தனியாக ஏற்றுமதி புரமோஷனல் ஆர்கனைசேஷன்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்!-30

  ஏற்றுமதியாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஏற்றுமதி செய்வதற்கான ஐஇ கோட் (IE Code) வாங்கியபிறகு நீங்கள் எந்தப் பொருளை ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்வீர்கள். நீங்கள் ஏற்றுமதி செய்யப் போகும் பொருள் எந்த புரமோஷனல் அமைப்பின் கீழ் வருகிறது என்று பார்த்து,  அந்த அமைப்பில் உங்களை உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதாவது, பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழை (Registration cum Membership Certificate -RCMC) அந்த அமைப்பில் இருந்து பெற வேண்டும். இந்த உறுப்பினர் சான்றிதழ் (Member Certificate) இல்லாமல் யாரும் ஏற்றுமதி செய்வதில் இறங்கக் கூடாது. இந்த உறுப்பினர் சான்றிதழை ஒரு குறிப்பிட்ட கால வரம்புகளில் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு அமைப்புக்கும் இந்தக் கால வரம்பு ஒரு வருடம், 3 வருடம், 5 வருடம் என மாறும்.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்!-30


  ஏற்றுமதி புரமோஷனல் ஆர்கனைசேஷன்கள்


ஏற்றுமதி புரமோஷனல் அமைப்புகள் மூன்று வகைகளாக உள்ளன. ஒன்று, அத்தாரிட்டி; இரண்டாவது, எக்ஸ்போர்ட் புரமோஷனல் கவுன்சில்கள்; மூன்றாவது, போர்டுகள்.

அத்தாரிட்டியில் இரண்டு வகை உள்ளன. ஒன்று, அபெடா (APEDA). விவசாய விளை பொருள்கள் அனைத்தும் மற்றும் இறைச்சியும் இதற்குள் அடங்கும். இதன் கீழ் வரும் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில், இந்த அமைப்பில் உறுப்பினராகப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது, எம்பெடா (MPEDA). கடல் உணவுப் பொருள்கள், அதாவது மீன், இறால் போன்றவை இதற்குள் அடங்கும். இதன் கீழ் வரும் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில், இந்த அமைப்பில் உறுப்பினராகப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

எக்ஸ்போர்ட் புரமோஷனல் கவுன்சில்கள் மொத்தம் 28 உள்ளன. உதாரணங்கள்: ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி செய்ய அப்பாரெல் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில், கெமிக்கல் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதிக்கு கெபக்சில் (Capexil), முந்திரி ஏற்றுமதிக்கு கேஷ்சூ எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் (Cashew Export Promotion council), நூல், நெய்த காட்டன் துணிகள் போன்றவற்றுக்கு காட்டன் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில், லெதர் பொருள்களை ஏற்றுமதி செய்ய லெதர் எக்ஸ்போர்ட் கவுன்சில் என இப்படி 28 புரமோஷன் கவுன்சில்கள் உள்ளன.

இவற்றில் எந்தப் பொருளை நீங்கள் ஏற்றுமதி செய்கிறீர்களோ அந்த எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சிலில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்!-30

ஒருவேளை இந்த 28 புரமோஷன் கவுன்சில்களில் வரும் பல பொருள்களை ஏற்றுமதி செய்கிறீர்கள் என்றால், அதாவது, உதாரணத்துக்கு நீங்கள் முந்திரி, லெதர், ரெடிமேட் ஆடைகள் இப்படி பல பொருள்களை ஏற்றுமதி செய்வதாக இருந்தால் இவை அனைத்திலும் உறுப்பினராகச் சேர வேண்டிய அவசியமில்லை. இவை அனைத்துக்கும் ஃபியோ (FIEO-Federation Of       Indian Export Organization) என்ற அமைப்பு மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்துக்குமான அபெக்ஸ் பாடி(Apex Body). இதில் உறுப்பினராகச் சேர்ந்தால் போதும், இந்த 28 புரமோஷன் கவுன்சில்களில் அடங்கும் பொருள்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்யலாம். (இதன் சென்னை முகவரி: FIEO-  Federation Of Indian Export Organization, 7th Floor, Spencer Plaza, Unit 706, 769, Mount Road, Mount Road, Chennai, Tamil Nadu 600002. தொடர்புக்கு: 044 2849 7755)  

ஆனால் ஃபியோவில் உறுப்பினராக இருந்தாலும் அத்தாரிட்டியிலும், போர்டிலும் வரும் பொருள்களுக்கு அவற்றுக்கான உறுப்பினர் பதிவு அவசியம் தேவை.

போர்டுகள்: மொத்தம் ஏழு போர்டுகள் உள்ளன. அவை, நறுமணப் பொருள்கள் (Spices Board), காபி (Coffee Board), ரப்பர் (Rubber Board), டீ (Tea Board), புகையிலைப் பொருள்கள் (Tobocco Board), தேங்காய் நார் பொருள்கள் (Coir Board), தேங்காய் (Coconut Board).

எந்தப் பொருள் எந்த அமைப்பின் கீழ் வருகிறது, அந்த அமைப்பின் முகவரி என்ன என்பதை முழுமையாக அறிந்துகொள்ள இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.  http://dgft.gov.in/exim/2000/download/Appe&ANF/2.pdf

இந்த 37 அமைப்புகளின் முக்கிய பணி, இந்திய ஏற்றுமதியை அதிகரிப்பதே. இதற்கான கொள்கைகளை வகுப்பது, ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் அளிப்பது, வழிகாட்டுவது, ஆலோசனை வழங்குவது, தேவையான ஆதரவை அளிப்பது ஆகிய விஷயங்களைச் செய்கின்றன. மேலும், அவ்வப்போது வர்த்தகக் கண்காட்சிகளை நடத்துவது, அதில் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொள்ள உதவுவது, இறக்குமதியாளர் சந்திப்புகளை நடத்துவது எனப் பல பணிகளைச் செய்கின்றன. 

(ஜெயிப்போம்)