நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கம்பெனி டிராக்கிங்

கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பெனி டிராக்கிங்

க்ரீன்ப்ளை இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட்(NSE SYMBOL: GREENPLY)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ன்ட்டீரியர் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு உதவும் மரம் தொடர்பான பொருள்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்துவரும் நிறுவனம் க்ரீன்ப்ளை இண்டஸ்ட்ரிஸ். 1984-ம் ஆண்டில்,  மரம் அறுக்கும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அகில இந்திய ரீதியாக 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் நெட்வொர்க்கையும், 21 மாநிலங்களில் 48 கிளைகளையும் கொண்ட நிறுவனமாக இது வளர்ந்தது.

கம்பெனி டிராக்கிங்

ரூ.1,600 கோடிக்கும் மேற்பட்ட விற்றுவரவைக் கொண்ட இந்த நிறுவனம், ப்ளைவுட் சந்தையில் கிட்டத்தட்ட 26 சதவிகித அளவிலான சந்தைப் பங்களிப்பையும், எம்.டி.எஃப் எனும் மீடியம் டென்சிட்டி ஃபைபர் போர்டுக்கான உள்நாட்டுச் சந்தையில் கிட்டத்தட்ட 30 சதவிகித அளவிலான சந்தைப் பங்களிப்பையும் கொண்டு திகழ்கிறது. அலுவலகங்கள் மற்றும் வீடுகள் கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள், விருப்பத்துடன் தேர்வு செய்யும் நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது. வீடு மற்றும் அலுவலகங்களின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ப்ளைவுட்டுகள், ப்ளாக் போர்டுகள்,  எம்.டி.எப் மற்றும் மரத்தினாலான தரையை உருவாக்க உதவும் மர போர்டுகள் போன்றவற்றை க்ரீன் ப்ளைவுட், க்ரீன் கிளப் ப்ளை, எக்கோடெக், க்ரீன் பேனல்மேக்ஸ் மற்றும் க்ரீன் ப்ளோர்மேக்ஸ் என்ற பிராண்டுகளில் விற்பனை செய்துவருகிறது.

கம்பெனி டிராக்கிங்


2016-ம் நிதியாண்டில் செய்யப்பட்ட மதிப்பீடுகளை வைத்துப் பார்த்தால், இந்திய அளவில் ப்ளைவுட் மற்றும் எம்.டி.எஃப்-க்கான சந்தையில் ரூ.19,600 கோடிகள் அளவிலான வியாபாரம் நடக்கிறது. இதில் ப்ளைவுட்டின்  இந்திய அளவிலான வர்த்தக மதிப்பு ரூ.18,000  கோடி மற்றும் எம்.டி.எஃப்-ன் வர்த்தகம் மதிப்பு ரூ.1,600 கோடியாகும். இதில் ப்ளைவுட்டுக்கான சந்தை வருடாந்திர அளவில் ஆறு சதவிகித வளர்ச்சியையும்,  எம்.டி.எஃப்-க்கான சந்தை வருடாந்திர அளவில்  15 சதவிகித  வளர்ச்சியையும் காணும் என்று  துறை சார்ந்த வல்லுநர்களின் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்த இரண்டு பொருள்களைப் பொறுத்தவரையில், ஆர்கனைஸ்டு (க்ரீன் ப்ளை போன்ற நிறுவனங்கள்) மற்றும் அன்–ஆர்கனைஸ்டு (சிறு மற்றும் குறு நிறுவனங்கள்) நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

கம்பெனி டிராக்கிங்

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல் ஆர்கனைஸ்டு சந்தையில், க்ரீன் ப்ளை நிறுவனம் 2016 -க்கான சந்தை மதிப்பீட்டில், ப்ளைவுட் சந்தையில் 26 சதவிகிதத்தையும், எம்.டி.எஃப் சந்தையில் 30 சதவிகிதத்தையும் தன்னுடைய பங்களிப்பாகக் கொண்டிருந்தது.  அலுவலக மற்றும் குடியிருப்புக் கட்டுமானங்களின் தேவையில் ஏற்படும் எதிர்கால வளர்ச்சியும் வாடிக்கையாளர்களின் வருமானத்தில் ஏற்படும் கணிசமான வளர்ச்சியும் அவர்கள் மத்தியில்  பிராண்ட்டட் தயாரிப்புகளை வாங்கவேண்டும் என்று உருவாகி வருகிற எண்ணமும் இந்தத் துறையில் வியாபாரத்துக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.  மேலும், ஜிஎஸ்டி அறிமுகம் காரணமாக ஆர்கனைஸ்டு மற்றும் பிராண்டட் தயாரிப்புகளின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. 

இது தவிர, மத்திய அரசின் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் சிட்டிகள் நிர்மாணிக்கும் திட்டமும்  இந்தத் துறையில் வியாபார வளர்ச்சிக்கு வித்திடும் ஒரு விஷயமாகவே கருதப்படவேண்டும். ப்ளைவுட் தயாரிப்புகளுக்கான சந்தையைக் குறைந்த/மலிவு விலை ப்ளைவுட்,  மத்திய தர மற்றும் கன ப்ளைவுட் மற்றும் லக்ஸரி/பிரீமியம் ப்ளைவுட் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.   இதில் குறைந்த/மலிவு விலை ப்ளைவுட் சந்தையில்  கிட்டத்தட்ட 100 சதவிகித அளவு அன் ஆர்கனைஸ்டு (சிறு/குறுதொழில்) உற்பத்தியாளர் களும்,  மத்திய தர மற்றும் கன ப்ளைவுட்களில் ஆர்கனைஸ்டு உற்பத்தியாளர்கள் 15 சதவிகிதமும் அன் ஆர்கனைஸ்டு உற்பத்தியாளர்கள் 85 சதவிகிதமும்,  லக்ஸரி/பிரீமியம் தர ப்ளைவுட்களில் ஆர்கனைஸ்டு உற்பத்தியாளர்கள் 70 சதவிகிதமும் அன் ஆர்கனைஸ்டு உற்பத்தியாளர்கள் 30 சதவிகிதமும் தங்கள் சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றனர்.

கம்பெனி டிராக்கிங்

தொழில் ரீதியாகப் பார்த்தால், பர்னிச்சர் தயாரிக்கும் தொழில் அன் ஆர்கனைஸ்டு என்ற நிலையில் இருந்து ஆர்கனைஸ்டு என்ற நிலைக்கு மாறிவருவதும், கமர்ஷியல் கட்டுமானங்களுக்கான தேவை அதிகரிப்பும், மலிவு விலை ப்ளைவுட்டில் இருந்து தரமான ப்ளைவுட்டுக்கு வாடிக்கை யாளர்கள் மாறுவதற்கான வாய்ப்புகளும்,  நகர்ப்புற விரிவாக்கங்களினால் அதிகரிக்கும் ரெடிமேட் பர்னிச்சர்களுக்கான தேவையும், எம்.டி.எஃப் வகை போர்டுகளில் தேவைப்படும் மதிப்புக் கூட்டிய வகை தயாரிப்புகளும் இந்தத் துறையில் வியாபாரத்துக்கான வாய்ப்புகளுக்கான காரணிகளாக அமைகின்றன எனலாம்.

 அகில இந்திய ரீதியாக ப்ளைவுட்டுக்கு  1,200  விநியோகஸ்தர்களையும் (6,000 சில்லறை வியாபாரிகள்),  எம்.டி.எஃப்.-க்கு 600  விநியோகஸ் தர்களையும் (4,000 சில்லரை வியாபாரிகள்) கொண்டிருக்கும் க்ரீன்ப்ளை நிறுவனம், ப்ளைவுட் வர்த்தகத்தைத் தனது 29 கிளை அலுவலகங்கள் வாயிலாகவும், எம்.டி.எஃப் வர்த்தகத்தை 14 கிளைகள் வாயிலாகவும் ஒருங்கிணைக்கிறது. இந்தத் தொழிலில் மூலப் பொருள்களின் தேவைக்கு ஏற்றாற்போல் ஏற்பாடுகளைச் செய்து கொள்வது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த இந்த நிறுவனம், அதற்கான ஏற்பாடுகளைச் சிரத்தையுடன் தொடர்ந்து செய்துவருகிறது.

கம்பெனி டிராக்கிங்

ரிஸ்க் ஏதும் உண்டா?

கட்டுமானத்துக்கு உதவும் பொருள்கள் உற்பத்தி என்பதால் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாங்கும் திறனைச் சார்ந்தே வியாபார வளர்ச்சியும் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு காரணத்தினால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லாது போனால் அதற்கேற்ப, இந்தத் துறையின்  வர்த்தகத்திலும் பாதிப்பு வரக்கூடும். மூலப்பொருள்கள் மற்றும் அந்நியச் செலவாணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்தத் துறைக்கு ஒரு ரிஸ்க்காகக் கருதப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

ரிஸ்க்குகள் பல இருக்கிறபோதிலும், செய்யும் தொழிலில் நீண்ட அனுபவமும், வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பையும், நல்லதொரு திடமான சந்தைப் பங்களிப்பையும் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளை, சந்தை ஏதாவது ஒரு காரணத்தினால் கணிசமான அளவு வீழ்ச்சியைச் சந்திக்கும்போது வரும் விலை வீழ்ச்சியில் சிறிய எண்ணிக்கையில் வாங்கி, 3 முதல் 5 ஆண்டு கால முதலீட்டுக்காக, தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்வதற்காக அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கக்கூடிய திறன் கொண்ட வாசகர்கள் மட்டும் தொடர்ந்து ட்ராக் செய்யலாம்.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of  the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No;  4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past  12 months and nature of products / services for which such compensation is received? – No;  5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this report is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: GREENPLY)/name of company/time duration)