நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!

ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!

ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!

சுதந்திர இந்தியாவில் வரிச் சட்டத்தில் மிகப் பெரிய சீர்திருத்தம் என்றால் அது ஜி.எஸ்.டி-தான். இன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்படும் இந்த  ஜி.எஸ்.டி கொண்டு வரப்பட்டதற்குக் காரணமாக உள்ள அரசு அதிகாரிகள் சிலரைப் பற்றிய குறிப்புகள் இங்கே...

ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!

ஹஸ்முக் அதியா, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலாளர்

எம்.காம் பட்டதாரி. 1981-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து, தன் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பணியாற்றத் தொடங்கினார். 2013-ம் ஆண்டு வரை குஜராத் மாநில அரசின் பல்வேறு துறைகளில்  பணியாற்றிய இவர், நவம்பர் 2014-ல்தான் மத்திய நிதி அமைச்சகத்தில் நிதி சேவைத் துறையின் செயலாளராகப் பதவியேற்றார். 2015, ஆகஸ்ட்டில் இருந்து வருவாய்த் துறைச் செயலாளராகப் பதவியேற்றார்.

ஜி.எஸ்.டி-க்காக வணிகர்கள், பெரு நிறுவனங்கள், மக்கள் என 360 டிகிரியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஜி.எஸ்.டி குறித்த அரசின் கருத்தை அழுத்தமாகப் பதிய வைத்தவர்!

ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!

சக்தி காந்த தாஸ், முன்னாள் பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்துவிட்டு, 1982-ம் ஆண்டு தமிழகத்தில் பணிக்குச் சேர்ந்தார். மாநில நிதி அமைச்சகம், நிறுவனங்களுக்கான நிதி மேலாண்மைத் துறை, தொழில்  துறை, மாநில வருவாய்த் துறை, வணிக வரித் துறை என நிதி சார்ந்த விஷயங்களில் அதிகம் பணியாற்றியிருக்கிறார்.

நவம்பர் 2008-ல் மத்திய நிதி அமைச்சகப் பணிக்கு மாறினார். அதன்பின் பொருளாதார விவகாரத் துறை இணைச் செயலாளராக, கூடுதல் செயலளாராக, சிறப்புச் செயலாளராக பதவி உயர்வுகள் பெற்றுள்ளார்.

ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!

அருண் கோயல், ஜி.எஸ்.டி கவுன்சிலின் கூடுதல் செயலாளர்

டெல்லியைச் சேர்ந்த இவரின் தாய் மொழி பஞ்சாபி. ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்துவிட்டு, 1987-ல்  யூனியன் பிரதேசங்களில் தன் பணி வாழ்கையைத் துவங்கினார். இவர் படித்தது பொறியல் சார்ந்தது என்றாலும், திட்டக் குழு, திட்டங்களைச் செயல்படுத்தும் குழு, வணிகம்,  நிதி, வேலைவாய்ப்புத் துறை என  நிதி சார்ந்த விஷயங்களிலேயே பெரிதும் பணியாற்றியவர். 2016 செப்டம்பர் முதல் இவர் வருவாய்த் துறையின் கீழ் பணியாற்றத் தொடங்கினார். ஜி.எஸ்.டி சட்ட திட்டங்களை வரையறுப்பதில் உள்ள சிக்கல்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு இவரின் பணிச் சுமை எளிதில் புரியும்!

ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!

நவீன் குமார், ஜி.எஸ்.டி.என் நிறுவனத் தலைவர்

பீகாரைச் சொந்த மாநிலமாகக் கொண்ட இவர் ஒரு இயற்பியல் பட்டதாரி. 1977-ம் ஆண்டு பீகார் மாநிலத்திலேயே பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. 1988-ம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்கு மாறினார். 1996-ல் பீகார் மாநில மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையின் இணைச் செயலராக பதவி வகித்தார்.  ஓய்வு பெறுவதற்கு கடைசி ஆண்டில்  பீகார் மாநிலத்தின் முதன்மைச்  செயலராக பொறுப்பேற்றார்.

மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையில் பணியாற்றியதால்,  நிதி சார்ந்த விஷயங்களில் இவர் ஒரு கில்லாடி. எனவேதான், ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவரும் முக்கியமான பணி அவரிடம் தரப்பட்டது.

ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!

உதய் சிங் குமாவத், வருவாய்த் துறை இணைச் செயலாளர்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கணினி அறிவியல் பட்டதாரி. 1995-ல் பீகார் மாநிலத்தில் தன் பணியைத் தொடங்கினார். உலக வங்கியின் உதவியோடு, பீகார் மாநில அரசில் திட்ட இயக்குநராக இவர் பணியாற்றினார்.

தற்போது வருவாய்த் துறையில் இணைச் செயலராக பணியாற்றி வருகிறார். ஜி.எஸ்.டி சட்ட சிக்கல்கள் குறித்து அரசிடமும், அரசு நிறுவனங்கள், அரசு வழக்கறிஞர்கள் போன்றவர்களிடம் வாதாடி, சட்ட திட்டங்களை வழி வகுத்தவர்களில் இவரும் ஒருவர்.

ஜி.எஸ்.டி காரணகர்த்தாக்கள்!

பிரகாஷ் குமார், ஜி.எஸ்.டி.என் நிறுவனத்தின் முதன்மைச் செயல் தலைவர்

பீகாரைச் சேர்ந்த இவர், ஐஐடி கான்பூரில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். அதோடு பப்ளிக் ஃபைனான்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேலையை உதறியவர். 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆனவர், 1987-ம் ஆண்டு டெல்லியில் பணி அமர்த்தப்பட்டார். ஜி.எஸ்.டி.என் நிறுவனத்தின் சி.இ.ஓ இவர்தான். மொத்த இந்தியாவின் மறைமுக வரி வசூலை கணினிக்குள் கொண்டுவர பாடுபட்டு வருபவர்.

தொகுப்பு: கெளதம் தத்தா, இன்ஃபோகிராஃபிக்ஸ்: எம்.மகேஷ்