நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஜி.எஸ்.டி... வீடு விலை அதிகரிக்குமா?

ஜி.எஸ்.டி... வீடு விலை அதிகரிக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.எஸ்.டி... வீடு விலை அதிகரிக்குமா?

ஜெ.சரவணன்

ஜி.எஸ்.டி... வீடு விலை அதிகரிக்குமா?

‘ஜி.எஸ்.டி வந்தபின், வீட்டின் விலை அதிகரிக்குமா?’ என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. நவீன்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் குமார் அதற்கான விளக்கத்தைச் சொல்கிறார்...

ஜி.எஸ்.டி... வீடு விலை அதிகரிக்குமா?


“ஜி.எஸ்.டி வரியினால் வீடுகளின் விலை குறையும் என்று அரசுத் தரப்பிலிருந்து சொல்லப் பட்டாலும், நிலத்தின் விலை மிகக் குறைவாக இருக்கும் இடங்களைத் தவிர்த்து, பிற இடங்களில் விலை அதிகரிக் கவே செய்யும். ‘இன்புட் கிரெடிட்’ வசதி ஜி.எஸ்.டி-யில் இருந்தாலும்கூட, அப்ரூவல் வழங்குதல், தண்ணீர், கழிவுநீர் அகற்றுதல் மற்றும் மின்சார இணைப்பு மற்றும் கிளியரன்ஸ் போன்றவற்றை வழங்கும் அரசுத் துறைகளில் பெறப்படும் ‘கணக்கில் வராத’ கட்டணங்கள்,  கட்டட வேலையாட்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போன்றவற்றுக்கு வரி விதிக்க முடியுமா? எனவே, ‘இன்புட் கிரெடிட்’ எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தாலும், இந்தச் செலவுகளால் வீடுகளின் விலை அதிகரிக்கவே செய்யும்.

மேலும், இதிலிருக்கும் ‘ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிச’த்தினால் சேவை வரிக்குள் வராத நபர்களால் வழங்கப்படும் சேவை களுக்கான வரியை டெவலப்பர்கள்தான் கட்ட வேண்டியிருக்கிறது. இதை இன்புட் கிரெடிட்டில் க்ளெய்ம் செய்து கொள்ளலாம் என்றாலும் இதனால்  உற்பத்திச் ‌செலவுகள் அதிகரிக்கவே செய்கிறது. வீட்டினை வாடகைக்கு விடுபவர்களும் இதனால் பாதிக்கப்படு வார்கள். இவர்களின் வரியானது 15 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுவிட்டது.

மேலும், முக்கியமாக ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு வாங்கிய பொருள்களுக்கும், நிறைவு செய்த கட்டுமானங்களுக்கும்தான் இந்த ‘இன்புட் கிரெடிட்’ முறை செல்லும். ஜூலை 1-ம் தேதிக்குமுன் முடிக்கப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் செய்யப்பட்ட செலவுகள் அனைத்துக்கும் 60 சதவிகித ‘இன்புட் கிரெடிட்’ மட்டுமே க்ளெய்ம் செய்ய முடியும். அதுவும் கடந்த ஒரு வருடத்துக்கு மட்டும்தான். இதனால் முன்பே கட்டுமானம் முடிக்கப்பட்ட புராஜெக்ட்டுகளுக்குச் செலுத்த வேண்டிய வரி அதிகமாக இருக்கும்.

மேலும், வணிகக் காரணங்களுக்காக வாங்கப்படும், லீஸுக்கு எடுக்கப்படும் கட்டுமானங்களுக்கும் ஜி.எஸ்.டி-யின் தாக்கம் அதிகம் . ஜி.எஸ்.டி-யினால்  ரியல் எஸ்டேட்டில் பாதகமான விளைவுகளே ஏற்படும்’’ என்றார் அவர்.

ரியல் எஸ்டேட்டுக்கு என்றுதான் விடிவுகாலமோ!

அச்சத்தை எற்படுத்தியிருக்கிறது!

ஜி.எஸ்.டி... வீடு விலை அதிகரிக்குமா?

ராஜா சண்முகம், திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்

“ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப் பட்டிருப்பதில் நன்மையும் இருக்கிறது, பாதிப்பும் இருக்கிறது. ஜி.எஸ்.டி-யில் பொருள்களின் விலை குறையும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இது நீண்டகாலத்தில் நடக்கும்.

மேலும், இதுவரை கணக்கில் வராமல் இருந்த வர்த்தகம் இனி, கணக்கில் வரும். மேலும், ஜி.எஸ்.டி வரியில் ‘இன்புட் கிரெடிட் சிஸ்டம்’ இருப்பதால் தொழில்முனைவோர்கள் செலுத்தும் வரியைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இதனால் நுகர்வோர்கள் மட்டுமே வரிச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இவையெல்லாம் சிறப்பான அம்சங்கள்.

ஆனால், திருப்பூர் ஆடைத் தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை, ஃபேப்ரிக் உற்பத்தி வரைக்கும் 5% வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குப் பிந்தைய பிரின்டிங், எம்ப்ராய்டரி போன்றவற்றுக்கு 18% வரி விதிக்கப்பட்டிருக்கிறது. முன்பு இதற்கெல்லாம் எந்த வரியும் இல்லை. இப்போது இவற்றை சேவையின் கீழ் கொண்டுவந்து புதிதாக 18%  வரி விதிக்கப்பட்டிருப்பது எல்லோருக்கும் ஓர் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கும் 5% வரி விதித்திருக்கலாம்.

மேன்மேட் ஆடைகளுக்கான நூலுக்கும் பஞ்சுக்கும் 18%, ஃபேப்ரிக்குக்கு 5% என்கிறபோது, ஃபேப்ரிக் தயாரிக்கும் நூலுக்கும் பஞ்சுக்கும் கொடுக்கும் 18% வரியை ‘இன்புட் கிரெடிட்’ எடுக்க முடியாது. எனவே, இரண்டையும் 12 சதவிகிதமாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

திருப்பூர் ஆடைத் தயாரிப்பு தொழில் பெரும் கூட்டு முயற்சியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் நிச்சயம் எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.” 

அரசாங்கம் காதுகொடுத்துக் கேட்குமா?