நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்!

கமாடிட்டி டிரேடிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்!

தி.ரா.அருள்ராஜன், கமாடிட்டி சந்தை நிபுணர், www.ectra.in

கமாடிட்டி டிரேடிங்!

தங்கம்

‘தங்கம், ஒரு தொடர் இறக்கத்தில் இருந்து வருகிறது. இதுவரை 28150 என்பது வலுவான ஆதரவாக இருந்து வந்தது. இந்த எல்லை உடைக்கப்பட்டவுடன், இதுவே தற்போது வலுவான தடைநிலையாக மாற வாய்ப்புள்ளது.  கீழே 28000 உடைக்கப்பட்டால், இறக்கம் இன்னும் வலிமையாக இருக்கலாம்’ எனக் கடந்த இதழில் சொன்னோம். 

28000 என்ற புள்ளியை உடைத்தவுடன் தங்கம் மிக, மிக வலிமையாக இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் 27620 என்ற புள்ளியைத் தொடும்வரை இறங்கியது. இந்த இறக்கத்துக்குப்பிறகு, காளை வர்த்தகர்கள் விழித்துக் கொண்டார்கள். தங்கத்தின் விலையை ஏற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனாலும், பெரிய அளவில் ஏற்றமுடியவில்லை. மாறாக, தங்கம் தற்போது பக்கவாட்டு நகர்வில் உள்ளது. அடுத்தடுத்து செவ்வாய் முதல் வெள்ளி வரை தொடர்ந்து பக்கவாட்டிலேயே நகர்ந்து வருகிறது. ஆனாலும், திங்களன்று தோன்றிய பெரிய காலுடன் கூடிய டோஜி உருவமைப்பு, தங்கம் இறங்கினாலும் வலுவான ஆதரவைக் கொடுக்கத் தயாராக உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்!

தங்கம், தற்போது உள்ள நிலையில் மேலே 28000 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே, ஆதரவு எல்லையாக இருந்த அந்த எல்லை தடை நிலையாக மாறிய நிலையில், அங்கு வலுவாகத் தடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. மேலே 28000 என்ற எல்லை உடைக்கப்பட்டால், சற்றே ஏறி, மீண்டும் 28150 என்கிற எல்லையில் தடுக்கப்படலாம். இதையும் தாண்டும்போது தங்கம் வலுவாக மாறி, மிகப் பெரிய ஏற்றத்துக்கு வழிவகுக்கும்.

அடுத்த முக்கிய எல்லைகள் 28250 மற்றும் 28600 ஆகும். கீழே 27650 என்பது மிக முக்கிய ஆதரவாக உள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டால், தங்கம், பெரிய இறக்கத்துக்குத் தயாராகலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

வெள்ளி

வெள்ளி, சென்ற வாரம் கடுமையான இறக்கத்தைச் சந்தித்தது. இந்த இறக்கமானது, குறைந்தபட்சப் புள்ளியாக 35500 என்ற புள்ளியைத் தொட்டது. தங்கம் நல்ல இறக்கத்துக்குப்பிறகு எப்படி மீண்டதோ, அதைப் போன்றே குறைந்தபட்ச புள்ளியாக 35500-ஐ தொட்டபிறகு, வெள்ளி மீண்டு எழ ஆரம்பித்தது.

கமாடிட்டி டிரேடிங்!


மிகப் பெரிய இறக்கத்துக்குப்பிறகு, சென்ற வாரத்தின் முதல் நாளான திங்களன்று, வலுவான சுத்தியல் போன்ற கேண்டில் ஒன்றை உருவாக்கியது வெள்ளி. இது, காளைகள் இறக்கத்திலிருந்து மீண்டு வருவதைக் காட்டுவதாகும். அதன்பின் படிப்படியாக ஏறி 37220 என்ற உச்சத்தைத் தொட்டது.  அதன்பின், புதனன்று  ஒரு ஸ்பின்னிங் டாப் உருவ அமைப்பை தோறுவித்தது. இது, வெள்ளியின் புல்பேக் ரேலி முடிவுக்கு வந்ததைக் காட்டுகிறது. அடுத்தடுத்த நாள்களில் வெள்ளி சற்றே இறங்குமுகமாக மாறியது.   இந்த நிலையில், 37300 என்பது முக்கிய தடை நிலையாக உள்ளது. இந்தத் தடையை உடைத்து ஏறினால், ஏற்றம் வலுவானதாக மாறி 38400 என்ற எல்லையை நோக்கி நகரலாம். இது மிக வலுவான தடை நிலை ஆகும்.  கீழே 36000 என்பது முக்கிய ஆதரவு நிலை ஆகும். இதை உடைத்தால், வெள்ளி அடுத்த கட்டமாக பெரும் சரிவைச் சந்திக்கும்.

கமாடிட்டி டிரேடிங்!

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் மே மாதம் 2017-ல் 3397 என்ற உச்சத்தைத் தொட்டபிறகு, பலமான இறக்கத்துக்கு மாறியது. பின் ஜூன் 2017-ல் குறைந்தபட்சப் புள்ளியாக 2732 - ஐ தொட்டது. இதன்பின் தட்டுத் தடுமாறி ஏற ஆரம்பித்தது. அடுத்த மூன்று வாரங்களில் கச்சா எண்ணெய் நன்கு ஏற ஆரம்பித்தது. அதன்பின் இறங்கினாலும், ஒரு ஹயர் பாட்டத்தைத் தோற்றுவித்து உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்ற வாரம் நாம் தந்த  முக்கிய ஆதரவு 2840 ஆகும். கச்சா எண்ணெய் தற்போது இதை உடைக்க முயற்சி செய்கிறது. இதை உடைக்காதவரை மீண்டும் ஏறி, 3075 என்ற எல்லையை நோக்கி நகரலாம் என்றோம் நாம். கச்சா எண்ணெய் 2840 என்ற எல்லையைத் தக்கவைத்துக்கொண்டது. இதன்பின் படிப்படி யாக ஏறி, 3000 என்ற புள்ளியைத் தாண்டியுள்ளது. தற்போது 3075 என்ற எல்லை உடனடித்  தடை நிலையாக உள்ளது. இந்த முக்கியத் தடையான 3075-ஐ உடைத்து ஏறினால், 3200 நோக்கி நகரலாம். கீழே 2840 என்பது முக்கிய ஆதரவு. அது உடைக்கப்பட்டால், அடுத்தகட்ட வலிமையான இறக்கம் வரலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

இயற்கை எரிவாயு

இயற்கை எரிவாயு வழக்கம்போல் துள்ளி ஏறுவது,சறுக்கி இறங்குவது என்று பல முகங்களைக் காட்டி வருகிறது. ‘தற்போது புல்பேக் ரேலியில் உள்ளது. இதன் உடனடி தடைநிலை 190 ஆகும்.  தாண்டினால், 196 மற்றும் 202-ஐ தொடலாம்’ என்று சென்ற வாரம் நாம் சொன்னோம். சென்ற வாரம் 190-ஐ தாண்டி, வலிமையாக ஏறி, 197.10 என்ற புள்ளியைத் தொட்டது. அதன்பின் படிப்படியாக இறங்கி எங்கிருந்து ஏறியதோ, அந்த இடத்துக்கே வந்துவிட்டது.  தற்போது 194 என்ற எல்லை வலிமையான தடைநிலையாக உள்ளது. தாண்டினால் மீண்டும் 197-ல் தடுக்கப்படலாம்.  பின் ஏற்றம் தொடரலாம். கீழே 187 என்பது மிக முக்கிய ஆதரவு ஆகும், இதையும் உடைத்தால், பெரிய இறக்கம் வரலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

மென்தா ஆயில்

மென்தா ஆயில் பலமாக ஏற ஆரம்பித்துள்ளது. தடை நிலை 950 எனக் கூறியிருந்தோம். இது உடைக்கப்பட்டு, தற்போது அடுத்த கட்ட ஏற்றத்துக்குத் தயாராகி வருகிறது. இந்த முயற்சி பலித்தால், 975 மற்றும் 988 என்ற எல்லை யைத் தொடலாம். தற்போது முக்கிய ஆதரவு, தற்போது உடைத்து ஏறிக்கொண்டு இருக்கும் 950 ஆகும். இந்த எல்லை உடைக்கப்பட்டால்,  ஒரு பலமான இறக்கத்துக்குத் தயாராகலாம். முதல் கட்டமாக 930-ம் அடுத்து 915 - யையும் நோக்கி நகரலாம்.

கமாடிட்டி டிரேடிங்!

காட்டன்

காட்டன், சென்ற வாரம் ஒரு உச்சத்தில்  இருந்து இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த உச்சம் 20850 ஆகும். ஆனால், அந்த நாள் ஒரு ஸ்பின்னிங் டாப்பாக முடிந்தது. இதற்கு அடுத்து திங்கள், செவ்வாய் போன்ற நாள்களில் கீழே நோக்கி திரும்பியது. இந்த இறக்கமே, பின்பு பலமாக மாறி கீழே 19860 என்ற புள்ளியைத் தொட்டது. இந்த நிலையில், இறக்கத்தின் முடிவில் ஒரு ஸ்பின்னிங் டாப்பை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இது முழுமை அடைந்ததால், ஒரு புல்பேக் ரேலி வரலாம். உடனடித் தடைநிலை 20200 ஆகும்.