
இன்ஸ்பிரேஷன் - வாழ்க்கையைக் கற்றுத் தந்த இருவர்!

``நான் விளம்பரத் துறையில் 30 வருடங்களுக்கும் மேல் சிறந்து விளங்கக் காரணமாக இருந்தவர்கள் இருவர். ஒருவர், ஆர்.கே. சுவாமி. மற்றொருவர், ஏ.ஜி.கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் இருவருமே எனக்கு சீனியர்கள். இந்தத் துறையில் வாடிக்கையாளர்களிடம் எப்படி இணக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது, எல்லோருடைய நட்பையும் எப்படிப் பெறுவது என்பதை ஆர்.கே. சுவாமியிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

அதேபோல், பிசினஸில் தலைமை வகிப்பவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து கற்றுக்கொண்டேன். நம் ஊழியர்களுக்குச் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் கொடுத்தால், அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள் என்பதை எனக்கு எடுத்துச்சொல்லி, பிசினஸ் வாழ்க்கையையே கற்றுத் தந்தார். இன்றும் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர்கள் இந்த இருவர்தான்.’’
- ஜெ.சரவணன்