நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பாகிஸ்தானிடம் பறிகொடுத்த ரூ.200 கோடி ஆர்டர்! - கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களைக் கலங்க வைத்த ஜி.எஸ்.டி

பாகிஸ்தானிடம் பறிகொடுத்த ரூ.200 கோடி ஆர்டர்! - கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களைக் கலங்க வைத்த ஜி.எஸ்.டி
பிரீமியம் ஸ்டோரி
News

புதிதாக வந்திருக்கும் ஜி.எஸ்.டி  வரியால், ‘ரூ.200 கோடி மதிப்பிலான வெளிநாட்டு ஆர்டர்கள் கேன்சலாகி, பாகிஸ்தானுக்குப் போய் விட்டது’ எனக் கண்ணீர் வடிக்கிறார்கள் கரூர் நகர ஏற்றுமதியாளர்கள். ஏற்கெனவே, நூல் விலை ஏற்றம், சாயப்பட்டறைப் பிரச்னை உள்ளிட்ட விஷயங்களால் ஜவுளி உற்பத்தி மற்றும் ஜவுளி ஏற்றுமதித் தொழில்கள் அல்லாட்டத்தில் இருக்க, இந்த வரியால் தொழிலும் மொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகக் கதறத் தொடங்கியிருக்கிறார்கள் அவர்கள்.

இங்கு உற்பத்தியாகும் திரைச் சீலைகள், குஷன்கள், மேஜை விரிப்பான்கள், கிச்சன் டவல்கள், தலையணை கவர்கள் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் போன்ற நாடுகளுக்கும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கின்றன. கரூரில் உள்ள 400 ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.1,800 கோடி அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பாகிஸ்தானிடம் பறிகொடுத்த ரூ.200 கோடி ஆர்டர்! - கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களைக் கலங்க வைத்த ஜி.எஸ்.டி

வீட்டு உபயோக ஜவுளியில் புகழ் பெற்ற கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள், ஏற்கெனவே நூல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜி.எஸ்.டி-யால் புதிய வெளிநாட்டு ஆர்டர்களைப் பெற முடியாமலும், ஏற்கெனவே கிடைத்த ஆர்டர்களை முடிக்க முடியாமலும் தவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய ஸ்ரீசாய்சேஷன் ஏற்றுமதி கம்பெனி உரிமை யாளரான சுந்தரேசன், “சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த சர்வதேச ஜவுளி கண்காட்சியில், சுமார் 500 கோடி ரூபாய்க்கு (ஜி.எஸ்.டி அமலுக்கு முன்பு) கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தன. இதில், முதல் பாதி ஆர்டர்களை ஏற்றுமதி செய்துவரும் நிலையில், தரமான மற்றும் அங்குள்ள தேவைக்கேற்ப கூடுதல் ஆர்டர்களை இறக்குமதியாளர்கள் கேட்கிறார்கள். அதை முந்தைய விலைக்கே கேட்கிறார்கள். இதனை எங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. தொடர் நூல்விலை ஏற்றம், ஜி.எஸ்.டி வரி  அமல் போன்ற காரணங்களால் வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் கேட்கும் ஆர்டர்களுக்கு 8 முதல் 12% வரை உற்பத்திச் செலவு முன்பைவிட அதிகமாகி உள்ளது. இதனால் வெளிநாட்டினர் பழைய விலைக்கே கேட்கும் நிலையால் அந்த ஆர்டர்களை நாங்கள் பெற முடியாமல் போயிவிட்டது.

பாகிஸ்தானிடம் பறிகொடுத்த ரூ.200 கோடி ஆர்டர்! - கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களைக் கலங்க வைத்த ஜி.எஸ்.டி

நூல் விலை உயர்வு, ஜவுளி சார்ந்த மூலப்பொருள்கள்மீது விதிக்கப்பட்டுள்ள சரக்கு, சேவை வரியினால் தொழிலை பழையபடி செய்ய முடியவில்லை. இப்போது, ஜி.எஸ்.டி வரியால் உயர்ந்துள்ள செலவு அதிகரிப்பால், கரூர் ஏற்றுமதியாளர்களான நாங்கள் 150 முதல் 200 கோடி ரூபாய் அளவுக்கான வெளிநாட்டு ஆர்டர்களை இழந்திருக்கிறோம். அந்த ஆர்டர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளுக்குப் போய்விட்டன. அந்நியச் செலாவணியில் அதிகம் பங்கு வகிக்கும் ஜவுளி உற்பத்தியில், மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை.

மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் நான்கு ஆண்டுகளாகச் சென்னையில் நடத்தப்பட்டு வந்த சர்வதேச ஜவுளிக் கண்காட்சி, இந்த ஆண்டு குஜராத்தில் நடந்தது. அதில், குறைந்த எண்ணிக்கையிலான இறக்குமதியாளர்களே கலந்துகொண்டனர். அவர்களும் இந்திய ஜவுளியின் உற்பத்திச் செலவு அதிகரித்து விட்டதால் ஓடிவிட்டனர். இந்தமாதிரி, கண்காட்சியில் முன்பு 50 கோடி வரை கரூர் ஜவுளி ஏற்றுமதி யாளர்களுக்கு ஆர்டர் கிடைக்கும். ஆனால், இந்தமுறை ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலை தொடர்ந்தால், விரைவில் இந்தத் தொழிலே நசிந்துபோகும்” என்றார் விரக்தியாக.

பாகிஸ்தானிடம் பறிகொடுத்த ரூ.200 கோடி ஆர்டர்! - கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களைக் கலங்க வைத்த ஜி.எஸ்.டி

அடுத்து பேசிய, ஹோம்லைன் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஸ்டீபன்பாபு, “ஜவுளித் தொழில் சார்ந்திருக்கிற விசைத்தறி, சாயத்தொழில், கைத்தறி, தையற்தொழில், கைவேலைப்பாடு தொழில் போன்ற தொழில்களுக்கு மத்திய அரசு 12 - 28% வரை சேவை வரி விதித்துள்ளதை எந்த வகையிலும் ஏற்க இயலாது. ஜவுளி தொழிலை உண்மையில் ஆட்சியாளர்கள் காப்பாற்ற வேண்டும் என்று கருதினால், ஜவுளி சார்ந்த பொருள்களுக்கும், உற்பத்திப் பொருள்களுக்கும் ஒரே சீராக 5% வரி விதிக்க வேண்டும். கட்டுப்பாடின்றி ஏறிய நூல் விலையைக் கட்டுப்படுத்தி, இடைத்தரகர்களின் தலையீட்டினைத் தடுக்க, மத்திய அரசு கமிட்டி அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.

பாகிஸ்தானிடம் பறிகொடுத்த ரூ.200 கோடி ஆர்டர்! - கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களைக் கலங்க வைத்த ஜி.எஸ்.டி

நூல் விலையை சீராக நிர்ணயிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய ஜவுளி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்’’ என்றார் அவர்.

ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த அரசாங்கம் இவர்களின் கோரிக்கையைக் கவனிக்கட்டும்!

துரை.வேம்பையன்

படங்கள் : என்.ராஜமுருகன்