
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.
கே.சத்தியமூர்த்தி, அம்பத்தூர்.
‘‘என் வயது 51. இன்னும் 9 வருடங்களில் ஓய்வு பெற உள்ளேன். நான் என் இரண்டு மகள்களின் திருமணத்துக்காக தலா ரூ.10,000 எஸ்.ஐ.பி முறையில் 7 மற்றும் 11 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவிருக்கிறேன். மிதமான ரிஸ்க் எடுக்கத் தயார். முதலீட்டுத் தொகையினை ஒவ்வொரு வருடமும் 20% வரை உயர்த்தலாம் என்று உள்ளேன். நான் எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

‘‘கீழ்க்கண்ட இரண்டு ஃபண்டுகளில் தலா 10,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் உங்கள் மகள்களின் திருமணத்துக்காக நீங்கள் முதலீடு செய்து கொள்ளுங்கள்.
இந்த இரண்டு ஃபண்டுகளும் பேலன்ஸ்டு வகையைச் சார்ந்தவை ஆகும். மாடரேட் ரிஸ்க் உடையவை. 1. கனரா ராபிகோ பேலன்ஸ்டு ஃபண்ட், 2. பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட்.
@ வி.ராஜேஷ் கண்ணன்
‘‘என் வயது 36. நான்கு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் பின்வரும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். ஐ.சி.ஐ.சி.ஐ புரூ எஃப்.எம்.சி.ஜி ஃபண்ட் - ரூ.2,000, ரிலையன்ஸ் டாப் 200 ஃபண்ட் - ரூ.2,000, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ப்ளஸ் ஃபண்ட் - ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரூ டிஸ்கவரி ஃபண்ட் - 2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்- ரூ.2,000, ரிலையன்ஸ் பேங்கிங் ஃபண்ட் -ரூ.2,000, பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் - ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ மிட்கேப் ஃபண்ட் -ரூ.3,000, ரிலையன்ஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் - ரூ.3,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் - ரூ.4,000, கோடக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட் -ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ மல்டிகேப் ஃபண்ட் - ரூ.3,000, ஃப்ராங்க்ளின் பில்ட் இந்தியா ஃபண்ட் - ரூ.2,000, ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட் - ரூ.2,000, ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட் - ரூ.2,000. இந்த முதலீடுகளை எல்லாம் என் குழந்தையின் கல்லூரிப் படிப்புக்காகவும், என் ஓய்வுக் காலத்துக்காகவும் செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா?
‘‘நீங்கள் மாதம் 35,000 ரூபாயை 15 ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறீர்கள். இத்தனை ஃபண்டுகளில் முதலீடு செய்வது தவறில்லை என்றாலும், அவற்றை நிர்வாகம் செய்வது மிகவும் கடினம். மேலும், ஒவ்வொரு ஃபண்டுகளும் 30 – 40 பங்குகளில் முதலீடு செய்கின்றன.
அதிக ஃபண்டுகளில் முதலீடு செய்தால் ரிஸ்க் குறைந்து, வருமானம் அதிகரிக்கும் என்று நினைப்பது தவறு. மேற்கண்ட 15 ஃபண்டுகளில் செல்லும் எஸ்.ஐ.பி-யைப் பின்வருமாறு அமைத்துக்கொள்ளுங்கள்.

பிர்லா சன்லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் - ரூ 9,000, பிரின்சிபல் குரோத் ஃபண்ட் - ரூ.9,000, மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் - ரூ.8,500, எல் அண்ட் டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் - ரூ.8,500.
@ விஜயகுமார்
‘‘என் வயது 26. நான் நகை செய்யும் தொழிலைச் செய்து வருகிறேன். மாதம் ரூ.5,000 வரை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியும். எனக்கேற்ற சிறந்த ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.
‘‘இளம் வயதில் நகை செய்யும் தொழிலில் இருக்கும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைப்பது பாராட்டத்தக்கது. எந்த நோக்கத்துக்காக முதலீடு செய்கிறீர்கள் அல்லது உங்களுக்கு எவ்வளவு ஆண்டுகள் கழித்து இந்த முதலீடு தேவை என்பதைத் தெரியப்படுத்தினால், பதில் அளிப்பதற்கு எளிதாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் பணம் உங்களுக்கு 10 – 20 ஆண்டுகள் கழித்துத் தேவைப்படும் என எடுத்துக் கொண்டு, கீழ்கண்ட ஃபண்டுகளை உங்களின் மாதாந்திர முதலீட்டுக்குப் பரிந்துரை செய்கிறேன்.
மோதிலால் ஓஸ்வால் மோஸ்ட் ஃபோகஸ்டு மல்டிகேப் 35 ஃபண்ட் – ரூ.2,500, எல் அண்ட் டி வேல்யூ ஃபண்ட் – ரூ.2,500.’’
